< 1 இராஜாக்கள் 12 >

1 ரெகொபெயாமை ராஜாவாக்க, இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான்.
Rehoboam kɔɔ Sekem, efisɛ na Israelfo nyinaa akɔ hɔ sɛ wɔrekosi no hene.
2 ராஜாவாகிய சாலொமோனைவிட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கும்போது இதைக் கேள்விப்பட்டான்.
Bere a Nebat babarima Yeroboam tee sɛ Salomo awu no, ofi Misraim bae, efisɛ oguan fii ɔhene Salomo nsam kɔtenaa Misraim.
3 அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைத்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபையார்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
Enti Israel mpanyimfo soma ma wɔkɔfaa Yeroboam, na Israel nnipadɔm no nyinaa kɔɔ Rehoboam nkyɛn, ne no kɔkasae se,
4 உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்திய கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் இலகுவாக்கும்; அப்பொழுது உமக்கு வேலை செய்வோம் என்றார்கள்.
“Wʼagya hyɛɛ yɛn ma yɛyɛɛ adwumaden. Yɛsrɛ wo, tew saa adwumaden ne sonkahiri adesoa duruduru a wʼagya de soaa yɛn no so. Woyɛ saa a, yɛbɛsom wo nokware mu.”
5 அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாட்களுக்குப் பின்பு என்னிடம் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள்.
Rehoboam buae se, “Momma me nnansa na menwene mo asɛm yi ho. Ɛno akyi, mommra mmegye me mmuae.” Enti nnipa no san kɔe.
6 அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன்னுடைய தகப்பனாகிய சாலொமோன் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு முன்பாக நின்ற முதியவர்களோடு ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
Na Ɔhene Rehoboam kɔɔ ne mpanyimfo bi a na wotu nʼagya Salomo fo ne wɔn kosusuw asɛm no ho. Obisaa wɔn se, “Moka asɛm no ho dɛn? Mmuae bɛn na memfa mma saa nnipa yi?”
7 அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த மக்களுக்கு வேலைக்காரனாகி, அவர்களைப் பணிந்து, அவர்களுடைய சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எப்போதும் அவர்கள் உமக்கு வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள்.
Wobuaa no se, “Sɛ nnɛ yi, wopɛ sɛ woyɛ ɔsomfo ma saa nnipa yi, na woma wɔn mmuae pa a, ɛno de, daa wɔbɛsom wo nokware mu.”
8 முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்து தனக்கு முன்னால் நிற்கிற வாலிபர்களோடு ஆலோசனைசெய்து,
Nanso Rehoboam amfa afotu a mpanyimfo no maa no no. Mmom, ɔkɔɔ nʼatipɛnfo mmabun bi a ɔne wɔn sii so a na wotu no fo no nkyɛn.
9 அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
Okobisaa wɔn se, “Mo nso, mo afotu ne dɛn? Mmuae bɛn na memfa mma saa nnipa a wɔpɛ sɛ metew adesoa duruduru a mʼagya de soaa wɔn no so?”
10 ௧0 அப்பொழுது அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடம் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என்னுடைய சுண்டுவிரல் என்னுடைய தகப்பனுடைய இடுப்பைவிட பருமனாக இருக்கும்.
Mmerante no buae se, “Asɛm a ɛsɛ sɛ woka kyerɛ wɔn ne se, ‘Me nsateaa ketewa no mu piw sen mʼagya asen mu. Na sɛ modwene sɛ na ɔyɛ den wɔ mo so a, montwɛn na mubehu sɛnea mete.’
11 ௧௧ இப்போதும் என்னுடைய தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடு சொல்லவேண்டும் என்றார்கள்.
Yiw, mʼagya yɛɛ den wɔ mo so, na mɛyɛ aboro saa. Mʼagya hwee mo mpire na me de, mede nkekantwɛre na ɛbɛhwe mo.”
12 ௧௨ மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் எல்லா மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடம் வந்தார்கள்.
Nnansa akyi no, Yeroboam ne nnipa no nyinaa san baa sɛ wɔrebetie Rehoboam mmuae sɛnea ɔkae no.
13 ௧௩ ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபர்களுடைய ஆலோசனையின்படி அவர்களோடு பேசி:
Ɔhene no buaa nnipa no abufuw so. Wamfa mpanyimfo no afotu no;
14 ௧௪ என்னுடைய தகப்பன் உங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று மக்களுக்குக் கடினமான உத்திரவு கொடுத்தான்.
ɔfaa mmabun no afotu. Ɔka kyerɛɛ nnipa no se, “Mʼagya yɛɛ den wɔ mo so, na mɛyɛ aboro saa. Mʼagya hwee mo mpire na me de mede nkekantwɛre bɛkeka mo.”
15 ௧௫ ராஜா, மக்கள் சொன்னதைக் கேட்காமற்போனான்; யெகோவா சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது.
Enti ɔhene no anyɛ nnipa no abisade no ho hwee. Saa nsɛm a esisii yi yɛ Onyankopɔn nhyehyɛe, efisɛ ɛmaa Awurade nkɔm a ɔnam odiyifo Ahiya a ofi Silo no hyɛɛ Nebat babarima Yeroboam no baa mu.
16 ௧௬ ராஜா தாங்கள் சொன்னவைகளைக் கேட்காததை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவிற்கு மறுமொழியாக: “தாவீதோடு எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை; இஸ்ரவேலே, உன்னுடைய கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன்னுடைய சொந்த வீட்டைப் பார்த்துக்கொள்” என்று சொல்லி, இஸ்ரவேலர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
Bere a Israel nyinaa huu sɛ ɔhene anyɛ wɔn abisade amma wɔn no, wɔteɛteɛɛ mu se, “Yɛne Dawid nni hwee yɛ! Yɛne Yisai babarima no nni hwee yɛ! Israel, momma yɛnkɔ yɛn nkyi! Dawid, hwɛ wʼankasa wo fi so!” Enti Israelfo no san kɔɔ wɔn fi.
17 ௧௭ ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்களுக்கு ரெகொபெயாம் ராஜாவாக இருந்தான்.
Na Rehoboam kɔɔ so dii Israelfo a na wɔtete Yuda nkurow so no so hene.
18 ௧௮ பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் பொறுப்பாளனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் வேகமாக இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான்.
Ɔhene Rehoboam somaa Adoram a na ɔhwɛ adwumayɛfo so no sɛ ɔnkɔhwɛ mma ɔman no nyɛ dinn, nanso Israelfo no siw no abo kum no. Bere a ɔhene Rehoboam tee saa asɛm no, ntɛm ara, ohuruw tenaa ne teaseɛnam mu, guan kɔɔ Yerusalem.
19 ௧௯ அப்படியே இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர்கள் தாவீதின் சந்ததிக்கு எதிராக கலகம்செய்து பிரிந்து போயிருக்கிறார்கள்.
Israel mmusuakuw a wɔwɔ atifi fam no ampene sɛ Dawid aseni biara bedi wɔn so, de besi nnɛ.
20 ௨0 யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவனை சபையினிடம் அழைத்தனுப்பி, அவனை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரத்தைத் தவிர வேறொருவரும் தாவீதின் சந்ததியைப் பின்பற்றவில்லை.
Bere a Israelfo tee sɛ Yeroboam fi Misraim asan aba no, wɔyɛɛ nhyiamu, sii no hene wɔ Israel nyinaa so. Enti Yuda abusuakuw no nko ara na wɔkae, som Dawid fi nokware mu.
21 ௨௧ ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் சந்ததியோடு யுத்தம்செய்யவும், ராஜ்ஜியத்தை சாலொமோனின் மகனாகிய தன்னிடம் திருப்பிக்கொள்ளவும், யூதா வீட்டார்கள் பென்யமீன் கோத்திரத்தார்கள் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர்கள் ஒருலட்சத்து எண்பதாயிரம் பேரைக் கூட்டினான்.
Bere a Rehoboam duu Yerusalem no, ɔboaboaa Yuda ne Benyamin asraafo ano. Oyii akofo mpem ɔha ne aduɔwɔtwe, sɛ wɔrekɔko atia Israel asraafo, na wɔafa ahemman no adi so.
22 ௨௨ தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது:
Nanso Onyankopɔn ka kyerɛɛ Semaia, Onyankopɔn nipa no se,
23 ௨௩ நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும் யூதாவின் வீட்டார்கள் அனைவரையும், பென்யமீனர்களையும், மற்ற மக்களையும் நோக்கி:
“Ka kyerɛ Salomo babarima Rehoboam, Yudahene ne nnipa a wofi Yuda ne Benyamin se,
24 ௨௪ நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் மக்களான உங்கள் சகோதரர்களோடு யுத்தம்செய்யாமலும், அவரவர் தங்களுடைய வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: யெகோவாவுடைய சொல்லைக் கேட்டு, யெகோவாவுடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.
‘Sɛnea Awurade se ni, Mo ne mo nuanom Israelfo nntwa mo ho nko. Monsan nkɔ mo akyi, na nea asi no nyinaa fi me!’” Enti wotiee Awurade asɛm no, san kɔɔ wɔn fi sɛnea Awurade hyɛe no.
25 ௨௫ யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே குடியிருந்து, அங்கிருந்து போய் பெனூவேலைக் கட்டினான்.
Yeroboam kyekyeree Sekem kurow wɔ Efraim bepɔw asase so ma ɛbɛyɛɛ ne kuropɔn. Akyiri no, ɔkɔkyekyeree kurow Penuel.
26 ௨௬ யெரொபெயாம்: இப்போது அரசாட்சி தாவீது குடும்பத்தாரின் பக்கமாகத் திரும்பும்.
Yeroboam dwenee ho dinn, see ne koma mu se, “Sɛ manhwɛ yiye a, ahemman no bɛsan akɔ Dawid fifo adedifo nsam.
27 ௨௭ இந்த மக்கள் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த மக்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்களுடைய எஜமானின் பக்கமாகத் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பக்கமாகப் போய்விடுவார்கள் என்று தன்னுடைய மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.
Na sɛ wɔkɔ Yerusalem, kɔbɔ afɔre wɔ Awurade Asɔredan mu nso a, wɔbɛsom Yudahene Rehoboam. Ɛba saa a, wobekum me, de ɔno mmom asi wɔn so hene.”
28 ௨௮ ஆகையால் ராஜா யோசனைசெய்து, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, மக்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போவது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலர்களே, இதோ, இவைகளே உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த உங்கள் தெய்வங்கள் என்று சொல்லி,
Enti otiee nea nʼafotufo ka, na ɔyɛɛ sikakɔkɔɔ anantwi mma abien. Ɔka kyerɛɛ nnipa no se, “Ɛyɛ ɔbrɛ bebree sɛ mobɛforo akɔ Yerusalem akɔsom. Ɛno nti, Israel, eyinom ne anyame a woyii mo fii Misraim!”
29 ௨௯ ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் வைத்தான்.
Ɔde nantwi mma ahoni yi sisii Israel anafo ne atifi, wɔ Bet-El ne Dan.
30 ௩0 இந்தக் காரியம் பாவமாக மாறினது; மக்கள் இந்த கன்றுக்குட்டிக்காகத் தாண்வரை போவார்கள்.
Eyi bɛyɛɛ bɔne kɛse, efisɛ nnipa no som ahoni no, a na mpo wotwa kwan kɔ Dan.
31 ௩௧ அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் மகன்களாக இல்லாத மற்ற தாழ்ந்த மக்களை ஆசாரியர்களாக ஆக்கினான்.
Yeroboam sisii abosonnan wɔ nkoko so, na ɔpaw asɔfo fii nnipa no mu a na womfi Lewi asɔfo abusua mu.
32 ௩௨ யூதாவில் கொண்டாடப்படும் பண்டிகையைப்போலவே எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டாக்கின மேடைகளில் ஆசாரியர்களைப் பெத்தேலிலே நியமித்து,
Yeroboam hyehyɛɛ nyamesom dapɔnna wɔ Bet-El a na wodi saa nna no Bul ɔsram (bɛyɛ Ahinime) mu a na ɛte sɛ Yuda Guankɔbea Afahyɛ no ara. Bet-El hɔ na ɔno ankasa bɔɔ afɔre maa nantwimma ahoni a wayɛ no. Na Bet-El hɔ ara nso na ɔpaw asɔfo maa abosomfi a osisii no.
33 ௩௩ தன்னுடைய மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் மக்களுக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டினான்.
Na ɔno ankasa yii da bi too hɔ, Bul ɔsram (bɛyɛ Ɔsannaa) mfimfini mu hɔ, na Yeroboam kɔbɔɔ afɔre wɔ afɔremuka so wɔ Bet-El. Ɔhyɛɛ anyamesom afahyɛ ase maa Israel, na ɔforo kɔɔ afɔremuka no so kɔhyew aduhuam.

< 1 இராஜாக்கள் 12 >