< 1 இராஜாக்கள் 10 >
1 ௧ யெகோவாவுடைய நாமத்தைக்குறித்து சாலொமோனுக்கு உண்டாயிருந்த புகழை சேபாவின் ராணி கேள்விப்பட்டபோது, அவள் விடுகதைகளால் அவனைச் சோதிப்பதற்காக,
И царица Савска услыша имя Соломоне и имя Господне, и прииде искусити его притчами:
2 ௨ திரளான கூட்டத்தோடும், நறுமணப்பொருட்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடம் வந்தபோது, தன்னுடைய மனதில் இருந்த எல்லாவற்றையும்குறித்து அவனிடம் உரையாடினாள்.
и прииде во Иерусалим с силою тяжкою зело: и на велблюдех привезоша ароматы и злата много зело, и камение драгое: и вниде к Соломону и глагола ему вся, елика име на сердцы своем.
3 ௩ அப்பொழுது சாலொமோன் அவள் கேட்ட எல்லாவற்றிக்கும் பதிலளித்தான். அவளுக்கு பதிலளிக்க முடியாதபடி, ஒன்றுகூட ராஜாவிற்கு மறைபொருளாயிருக்கவில்லை.
И возвести ей Соломон вся глаголы ея: и не бе слово презрено от царя, егоже не возвести ей.
4 ௪ சேபாவின் ராணி சாலொமோனுடைய எல்லா ஞானத்தையும், அவன் கட்டின அரண்மனையையும்,
И виде царица Савска весь смысл Соломонь и дом егоже созда,
5 ௫ அவனுடைய பந்தியின் உணவு வகைகளையும், வேலைக்காரர்களின் வீடுகளையும், வேலைக்காரர்களின் பணியையும், அவனுடைய ஆடைகளையும், அவனுக்கு பானம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் வியப்படைந்து,
и снеди Соломони, и жилища отроков его, и предстояние служащих ему, и облачение его, и виночерпцы его, и всесожжения его, яже приношаше во храме Господни, и вне себе бысть,
6 ௬ ராஜாவை நோக்கி: உம்முடைய வார்த்தைகளையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என்னுடைய தேசத்தில் கேட்ட செய்தி மெய்யானது.
и рече к Соломону царю: истинна суть словеса, яже слышах в земли моей,
7 ௭ நான் வந்து அதை என்னுடைய கண்களால் காணும்வரை அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதிகூட எனக்கு அறிவிக்கப்படவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட, உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாக இருக்கிறது.
о словесех твоих и о смысле твоем: и не ях веры глаголющым ми, дондеже приидох семо, и видеста очи мои: и се, несть ни пол того, якоже ми поведаша: приложил еси премудрость и благая к сим паче всякаго слуха, егоже слышах в земли моей:
8 ௮ உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய வேலைக்காரர்களும் பாக்கியவான்கள்.
блаженны жены твоя, блажени отроцы твои сии, иже предстоят пред тобою всегда, слышаще всякий смысл твой:
9 ௯ உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியம் கொண்ட உம்முடைய தேவனாகிய யெகோவா ஸ்தோத்திரிக்கப்படுவாராக: யெகோவா இஸ்ரவேலை என்றைக்கும் நேசிப்பதால், நியாயமும் நீதியும் செய்வதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.
буди Господь Бог твой благословен, иже восхоте тя дати на престол Израилев, понеже возлюби Господь Израиля утвердити во веки и постави тя царя над ними творити суд в правде и в судбах их.
10 ௧0 அவள் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், திரளான நறுமணப்பொருட்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராணி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு நறுமணப்பொருட்கள் பிறகு ஒருபோதும் வரவில்லை.
И даде Соломону сто и двадесять талант злата, и ароматы многи зело, и камение драгое: не приидоша еще таковыя ароматы во множестве, яже даде царица Савска царю Соломону.
11 ௧௧ ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.
И корабль Хирамль приносящь злато из Софира, (и) принесе древа нетесана многа зело, и камение драгое.
12 ௧௨ அந்த வாசனைமரங்களால் ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரர்களுக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனை மரங்கள் பிறகு வந்ததுமில்லை, இந்த நாள்வரைக்கும் காணப்படவும் இல்லை.
И сотвори царь древом нетесаным подпоры храму Господню и дому цареву, и сопели и гусли певцем: не приидоша по сем таковая древеса нетесаная на земли, ниже видена быша где даже до дне сего.
13 ௧௩ ராஜாவாகிய சாலொமோன் சேபாவின் ராணிக்கு சந்தோஷமாக வெகுமதிகள் கொடுத்ததுமட்டுமல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன்னுடைய கூட்டத்தோடு தன்னுடைய தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
И царь Соломон даде царице Савстей вся, елика восхоте и елики проси у него, кроме всех, яже даде ей рукама своима Соломон царь, и возвратися, и отиде в землю свою, сама и вси отроцы ея.
14 ௧௪ சாலொமோனுக்கு வியாபாரிகளும், நறுமணப்பொருட்களின் மொத்த வியாபாரிகளும், அரபிதேசத்து எல்லா ராஜாக்களும், மாகாணங்களின் அதிபதிகளும் கொண்டு வந்த பொன்னைத்தவிர,
И бе вес принесеннаго злата Соломону во едино лето шесть сот и шестьдесят и шесть талант злата,
15 ௧௫ ஒவ்வொரு வருடத்திலும் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாக இருந்தது.
кроме даней от подданных и от купцов и от всех царей странных и от воевод земных.
16 ௧௬ சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் 200 பெரிய கேடகங்களைச் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் 600 சேக்கல் நிறைபொன் செலவானது.
И сотвори царь Соломон триста копий златых кованных, по триста златых во едино копие вдела:
17 ௧௭ அடித்த பொன்தகட்டால் 300 கேடகங்களையும் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் மூன்று இராத்தல் நிறுவை பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
и триста щитов кованных златых, по три литры злата бяше на коемждо щите: и даде я царь во храм дубравы Ливанския.
18 ௧௮ ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
И сотвори царь престол от костей слоновых велий и позлати его златом искушеным:
19 ௧௯ அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாக இருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைப்பிடிகள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைப்பிடிகளின் அருகே நின்றது.
шесть степеней престолу, и образы телцов престолу созади, и верх престола кругл бе созади его, и руце сюду и сюду на престоле седалища, и два льва стояща при руках,
20 ௨0 ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் செய்யப்படவில்லை.
и дванадесять львы стояще ту на шести степенех сюду и сюду: не бяше тако во всяком царстве.
21 ௨௧ ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிப்பொருட்களெல்லாம் பசும்பொன்னுமாக இருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாக நினைக்கப்படவில்லை.
И вси сосуди, иже бяху при царе Соломоне, злати беша, и умывалницы златы и вси сосуди в храме дубравы Ливанския златокованны: не бяше сребра, понеже за ничто бе сребро во дни Соломони:
22 ௨௨ ராஜாவிற்குக் கடலிலே ஈராமின் கப்பல்களோடு தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
корабль бо Фарсийский царю Соломону на мори с корабли Хирамлими, единою во триех летех прихождаше цареви корабль из Фарсиса и приношаше злато и сребро, и зубы слоновы, и пифики и павы, и камение точеное и тесаное.
23 ௨௩ பூமியின் எல்லா ராஜாக்களையும்விட, ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாக இருந்தான்.
И возвеличися Соломон паче всех царей земных и богатством и смыслом.
24 ௨௪ சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்காக, எல்லா தேசத்தை சேர்ந்தவர்களும் அவனுடைய முகத்தின் தரிசனத்தைத் தேடினார்கள்.
И вси царие земстии искаху видети лице Соломона, еже бы услышати смысла его, егоже даде ему Господь в сердцы его:
25 ௨௫ ஒவ்வொரு வருடமும் அவரவர் தங்களுடைய காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், நறுமணப்பொருட்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
и тии приношаху кийждо дары своя, и сосуды златы и сребряны, и ризы, стакти и сладкости, и кони и мски на всякое лето.
26 ௨௬ சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு 1,400 இரதங்கள் இருந்தது, 12,000 குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
И собра Соломон колесницы и кони, и бяху Соломону четыредесять тысящ кобылиц в колесницы, и дванадесять тысящ конных: и постави я во градех колесниц, а (друзии бяху) у царя во Иерусалиме: и бе властелин всем царем от реки и до земли иноплеменник и до предел Египта.
27 ௨௭ எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
И сложи царь злато и сребро во Иерусалиме якоже камение, и кедры сложи якоже черничие, еже на поли во множестве.
28 ௨௮ சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் இணைப்புக் கயிறுகளையும் எகிப்திலிருந்து வரவழைத்தான்; ராஜாவின் வியாபாரிகள் அவைகளை ஒப்பந்த விலைக்கு வாங்கினார்கள்.
И привождаху Соломону кони от Египта и от Фекуя купцы царстии и куповаху от Фекуя променою.
29 ௨௯ எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை 600 வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை 150 வெள்ளிக் காசுமாக இருந்தது; இந்தவிதமாக ஏத்தியர்களின் ராஜாக்கள் எல்லோருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டது.
И прихождаху колесницы из Египта за шесть сот сребреник, и конь за сто пятьдесят сребреник: такожде и ко всем царем Хеттимским и Сирийским по морю исхождаху.