< 1 யோவான் 2 >
1 ௧ என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவம் செய்தால் நீதிபரராக இருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார்.
Me mma, merekyerɛw eyi abrɛ mo na moanyɛ bɔne; na sɛ obi yɛ bɔne a, yɛwɔ Yesu Kristo ɔtreneeni no a ɔsrɛ wɔ Agya no hɔ ma yɛn.
2 ௨ நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலி அவரே; நம்முடைய பாவங்களைமட்டும் அல்ல, முழு உலகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாக இருக்கிறார்.
Na Kristo no ankasa ne yɛn bɔne ho mpata na ɛnyɛ yɛn bɔne nko, na nnipa nyinaa bɔne.
3 ௩ அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறவர்களாக இருப்போமானால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அதினால் அறிவோம்.
Sɛ yedi Onyankopɔn mmara so a, na ɛkyerɛ sɛ yenim no.
4 ௪ அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யனாக இருக்கிறான், அவனுக்குள் சத்தியம் இல்லை.
Sɛ obi ka se, “Minim no,” nanso onni ne mmara so a, saa onipa no yɛ ɔtorofo a nokware nni ne mu.
5 ௫ அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில் தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
Na sɛ obi tie nʼasɛm a, na nokware dɔ a ɔde dɔ Onyankopɔn no wie pɛyɛ wɔ ne mu. Eyi na ɛma yehu sɛ yɛte ne mu.
6 ௬ அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
Na ɛsɛ sɛ nea ose ɔte ne mu no biara di Yesu Kristo anammɔn akyi.
7 ௭ சகோதரர்களே, நான் உங்களுக்குப் புதிய கட்டளையை அல்ல, ஆரம்பமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கட்டளையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கட்டளை நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிற வசனம்தானே.
Anuanom, saa mmara a merekyerɛw abrɛ mo yi nyɛ asɛm foforo. Ɛyɛ mmara dedaw a moate fi mfiase pɛɛ no. Mmara dedaw no yɛ ade a moate ho asɛm dedaw.
8 ௮ மேலும், நான் புதிய கட்டளையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, உண்மையான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
Nanso mmara a merekyerɛw abrɛ mo yi yɛ foforo na mu nokware no da adi wɔ Kristo ne mo mu. Sum no retwa mu na hann papa no gu so rehyerɛn.
9 ௯ ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
Obiara a ɔka se ɔwɔ hann no mu, nanso ɔtan ne nua no wɔ sum mu besi saa dɔnhwerew yi mu.
10 ௧0 தன் சகோதரனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் ஒளியிலே நிலைத்திருக்கிறான்; அவனிடத்தில் தடுமாற்றம் ஒன்றுமில்லை.
Obiara a ɔdɔ ne nua no te hann mu, enti biribiara nni ne mu a ɛbɛma obi foforo ayɛ bɔne.
11 ௧௧ தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் எங்கேயென்று தெரியாமல் இருக்கிறான்.
Nanso obiara a ɔtan ne nua no te sum mu. Ɔnam mu a onnim faako a ɔrekɔ, efisɛ sum no afura nʼani.
12 ௧௨ பிள்ளைகளே அவருடைய நாமத்தினிமித்தம் உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
Me mma, merekyerɛw mo, efisɛ esiane Kristo din nti, wɔde mo bɔne akyɛ mo.
13 ௧௩ பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபர்களே, சாத்தானை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
Agyanom, merekyerɛw mo, efisɛ munim nea ɔte ase fi mfiase no. Mmabun, merekyerɛw mo, efisɛ moadi ɔbonsam so.
14 ௧௪ பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபர்களே, நீங்கள் பலவான்களாக இருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் சாத்தானை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
Mma, merekyerɛw mo, efisɛ munim Agya no. Agyanom, merekyerɛw mo, efisɛ munim nea ɔte ase fi mfiase no. Mmabun, merekyerɛw mo, efisɛ mowɔ ahoɔden. Onyankopɔn asɛm no te mo mu na moadi ɔbonsam so.
15 ௧௫ உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும் நேசிக்காதீர்கள்; ஒருவன் உலகத்தை நேசித்தால் அவனிடம் பிதாவின் அன்பு இல்லை.
Monnnɔ wiase anaasɛ biribiara a ɛyɛ wiase de. Sɛ modɔ wiase a, na ɛkyerɛ sɛ monnnɔ Agya a ɔwɔ mo mu no.
16 ௧௬ ஏனென்றால், சரீரத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், வாழ்க்கையின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்.
Biribiara a ɛyɛ wiase de; ɔhonam akɔnnɔ, nea nnipa hu na wɔn kɔn dɔ, biribiara a ɛwɔ wiase a nnipa hoahoa wɔn ho wɔ ho no, mu biara mfi Agya no. Ne nyinaa fi wiase.
17 ௧௭ உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn )
Wiase ne mu akɔnnɔde retwa mu, nanso nea ɔyɛ Onyankopɔn apɛde no tena hɔ daa. (aiōn )
18 ௧௮ பிள்ளைகளே, இது கடைசி காலமாக இருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
Me mma, awiei no abɛn. Wɔka kyerɛɛ mo se Kristo Tamfo no bɛba, nanso mprempren, Kristo atamfo bebree ada wɔn ho adi, enti yɛahu sɛ ampa awiei no abɛn.
19 ௧௯ அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆனாலும் அவர்கள் நம்முடையவர்களாக இருக்கவில்லை; நம்முடையவர்களாக இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லோரும் நம்முடையவர்கள் இல்லை என்று வெளிப்படுத்துவதற்காகவே பிரிந்துபோனார்கள்.
Nokware, na saa nnipa yi nka yɛn ho na ɛno nti na wogyaw yɛn hɔ no. Na sɛ wɔka yɛn ho a, anka wɔne yɛn tenae. Nanso wogyaw yɛn hɔ, sɛnea wubehu no pefee sɛ wɔnka yɛn ho.
20 ௨0 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள்.
Mo de, Kristo ahwie Honhom Kronkron no agu mo so, enti mo nyinaa nim nokware no.
21 ௨௧ சத்தியத்தை நீங்கள் அறியாததினால் அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாகாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
Ɛnyɛ sɛ munnim nokware no nti na makyerɛw saa krataa yi, na mmom munim na munim nso sɛ, atoro biara mfi nokware mu mma.
22 ௨௨ இயேசுவைக் கிறிஸ்து இல்லை என்று மறுதலிக்கிறவனேதவிர வேறு யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
Afei hena ne ɔtorofo? Ɛyɛ obi a ɔka se Yesu nyɛ Kristo no. Oyi ne Kristo tamfo. Ɔpo Agya no ne Ɔba no nyinaa.
23 ௨௩ குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாக இருக்கிறான்.
Obiara nni hɔ a ɔpo Ɔba no na ɔwɔ Agya no; nea ogye Ɔba no to mu biara wɔ Agya no nso.
24 ௨௪ ஆகவே, ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கட்டும்; ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
Mommɔ mmɔden mfa asɛm a motee mfiase no nsie mo koma mu. Sɛ mode asɛm a motee mfiase no sie a, mo ne Ɔba no ne Agya no benya ayɔnkofa.
25 ௨௫ நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios )
Na eyi na Kristo no ankasa ahyɛ yɛn ho bɔ no, nkwa a enni awiei no. (aiōnios )
26 ௨௬ உங்களை ஏமாற்றுகிறவர்களைக்குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
Mekyerɛw mo fa wɔn a wɔpɛ sɛ wɔdaadaa mo no ho.
27 ௨௭ நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை; அந்த அபிஷேகம் எல்லாவற்றையும்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாக இருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
Na mo de, Kristo ahwie ne Honhom Kronkron no agu mo so. Mmere dodow a ne Honhom no te mo mu no, ɛho nhia sɛ obi foforo bɛkyerɛkyerɛ mo. Efisɛ ne Honhom no kyerɛkyerɛ mo biribiara. Na nea ɔkyerɛ no nso yɛ nokware; ɛnyɛ atoro. Muntie Kristo nkyerɛkyerɛ no na montena ne mu.
28 ௨௮ இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் தைரியமுள்ளவர்களாக இருப்பதற்காகவும் அவர் வரும்போது நாம் வெட்கப்பட்டுப்போகாமல் இருக்கவும் அவரில் நிலைத்திருப்போம்.
Me mma, montena ne mu sɛnea ɛbɛyɛ a sɛ ɔba a, yebenya akokoduru na yɛmfa aniwu nkohintaw da a ɔbɛba no.
29 ௨௯ அவர் நீதியுள்ளவராக இருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவன் எவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
Munim sɛ Kristo yɛ ɔtreneeni. Na ɛsɛ sɛ muhu sɛ obiara a ɔyɛ ade trenee no yɛ Onyankopɔn ba.