< 1 யோவான் 2 >

1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவம் செய்தால் நீதிபரராக இருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார்.
JAMA ko, mepukat i intin won komail, pwe komail de wia dip, a ma amen wia dip, jauaja patail mia ren Jam, Iejuj Krijtuj, me pun.
2 நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலி அவரே; நம்முடைய பாவங்களைமட்டும் அல்ல, முழு உலகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாக இருக்கிறார்.
Iei me tom en dip atail, a kaidin atail ta, pwe pil en toun jappa karoj.
3 அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறவர்களாக இருப்போமானால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அதினால் அறிவோம்.
I me kitail dedeki, me kitail ajaer i, ma kitail kapwaiada kujoned akan.
4 அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யனாக இருக்கிறான், அவனுக்குள் சத்தியம் இல்லை.
Me inda: I aja i, ap jota kapwaiada a kujoned akan, i me likam amen, melel jota mi re a.
5 அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில் தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
A me kapwaiada a majan, i me limpok en Kot unjokelar re a, i me kitail ajaki, me kitail udan japwilim a.
6 அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
Me kin inda: I potopot re a, mak eta, i en weweid wei dueta a kotin weweidier.
7 சகோதரர்களே, நான் உங்களுக்குப் புதிய கட்டளையை அல்ல, ஆரம்பமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கட்டளையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கட்டளை நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிற வசனம்தானே.
Kompok kan, kaidin kujoned kap eu, me i intin won komail, a kujoned en maj o, me mi re omail jan ni tapi o. Kujoned en maj, iei majan o, me komail roner.
8 மேலும், நான் புதிய கட்டளையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, உண்மையான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
Pil eu kujoned kap, me i intin won komail, me melel re a o re omail, pwe rotorot mur tikitikla, a marain melel ap dakadar.
9 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
Me inda, me a mi ni marain, ap kailon kin ri a, nan a mimieta ni rotorot lel met.
10 ௧0 தன் சகோதரனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் ஒளியிலே நிலைத்திருக்கிறான்; அவனிடத்தில் தடுமாற்றம் ஒன்றுமில்லை.
Me kin pok on ri a, pan mimieta ni marain, ap jolar men kamakar mi re a.
11 ௧௧ தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் எங்கேயென்று தெரியாமல் இருக்கிறான்.
A me kin tataki ri a, ni rotorot, o weweid ni rotorot, ap kin jaja, waja a kin ko on ia, pwe rotorot karotonala maj a kan.
12 ௧௨ பிள்ளைகளே அவருடைய நாமத்தினிமித்தம் உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
I intin won komail, jama ko, pwe dip omail lapwadar ki mar a.
13 ௧௩ பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபர்களே, சாத்தானை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
I intin won komail, jam atail, pwe komail aja i, me kotikot eta jan ni tapi o. I intin won komail manakap akan, pwe komail kaloedier me jued o. I intin won komail er, jama ko, pwe komail ajaer Jam.
14 ௧௪ பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபர்களே, நீங்கள் பலவான்களாக இருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் சாத்தானை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
I intin won komail er, jam akan, pwe komail aja i, me kotikot jan ni tapi o. I intin won komail er, manakap akan, pwe komail me kelail, o majan en Kot en mimieta re omail, o komail kaloedier me jued o.
15 ௧௫ உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும் நேசிக்காதீர்கள்; ஒருவன் உலகத்தை நேசித்தால் அவனிடம் பிதாவின் அன்பு இல்லை.
Der pok on jappa, de dipijou mimi jappa. Ma amen pok on jappa, limpok en Jam me jota mi re a.
16 ௧௬ ஏனென்றால், சரீரத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், வாழ்க்கையின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்.
Pwe meakaroj mi jappa, inon en ni uduk, o inon en ni maj oko, o linan mal en maur, a jota lapida jan ren Jam, a jan ni jappa.
17 ௧௭ உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn g165)
A jappa pan jorola o a me jued akan, a me wia kupur en Kot, pan mimieta kokolata. (aiōn g165)
18 ௧௮ பிள்ளைகளே, இது கடைசி காலமாக இருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
Jama ko, metet imwin auer o, o duen omail roner, me krijtuj likam pan pwarado, nan anjau wet krijtuj likam me toto, me pwaradar, i me kitail ajaki, met imwin auer leler.
19 ௧௯ அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆனாலும் அவர்கள் நம்முடையவர்களாக இருக்கவில்லை; நம்முடையவர்களாக இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லோரும் நம்முடையவர்கள் இல்லை என்று வெளிப்படுத்துவதற்காகவே பிரிந்துபோனார்கள்.
Irail me kola jan kitail, a kaidin kij atail, pwe ma irail kij atail, re pan mimieta re atail. A irail kola jan kitail, pwen janjal, me kaidin irail karoj kij atail.
20 ௨0 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள்.
A komail keidier ren me jaraui, o komail ajaer meakaroj.
21 ௨௧ சத்தியத்தை நீங்கள் அறியாததினால் அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாகாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
I jota intin won komail er, dene jota aja duen melel, a pwe komail aja, o likam jo tapida jan ni melel.
22 ௨௨ இயேசுவைக் கிறிஸ்து இல்லை என்று மறுதலிக்கிறவனேதவிர வேறு யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
Ij me likam amen? Kaidin i, me kamamada me Iejuj udan Krijtuj. I me krijtuj likam, me kamama kida Jam o Na.
23 ௨௩ குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாக இருக்கிறான்.
Amen amen, me kamam kida Na, nan Jam pil jota mi re a, a me ponaja Na, i me pil japwilim en Jam.
24 ௨௪ ஆகவே, ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கட்டும்; ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
Me komail roner jan ni tapi o, en potopoteta re omail. Ma a pan mimi re omail, me komail roner jan ni tapi o, komail ap pil pan potopot ren Na o Jam.
25 ௨௫ நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios g166)
A iet inau o, me a kotin inauki on kitail er: Maur joutuk. (aiōnios g166)
26 ௨௬ உங்களை ஏமாற்றுகிறவர்களைக்குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
Mepukat me i intin won komail er duen irail, me kajapune komail.
27 ௨௭ நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை; அந்த அபிஷேகம் எல்லாவற்றையும்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாக இருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
A omail kei, me komail aleer re a, pan mimieta re omail. Komail ap jolar mau on, amen en padaki on komail. A duen kei wet kin padaki on komail meakaroj, iduen me melel, a kaidin likam pot, o duen a padaki on komail er, iduen komail en dadaurata.
28 ௨௮ இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் தைரியமுள்ளவர்களாக இருப்பதற்காகவும் அவர் வரும்போது நாம் வெட்கப்பட்டுப்போகாமல் இருக்கவும் அவரில் நிலைத்திருப்போம்.
Ari jama ko, podidi on i, pwe ni a pan kotin pwarado, kitail en aima, a jo namenok mo a, ni a kotin pwarado.
29 ௨௯ அவர் நீதியுள்ளவராக இருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவன் எவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
Ma komail aja, me i me pun, komail en pil aja, meamen, me wia me pun, me ipwi jan i er.

< 1 யோவான் 2 >