< 1 கொரிந்தியர் 9 >
1 ௧ நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்திரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாக இருக்கிறீர்களல்லவா?
അഹം കിമ് ഏകഃ പ്രേരിതോ നാസ്മി? കിമഹം സ്വതന്ത്രോ നാസ്മി? അസ്മാകം പ്രഭു ര്യീശുഃ ഖ്രീഷ്ടഃ കിം മയാ നാദർശി? യൂയമപി കിം പ്രഭുനാ മദീയശ്രമഫലസ്വരൂപാ ന ഭവഥ?
2 ௨ நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக இல்லாமற்போனாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாக இருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு அடையாளமாக இருக்கிறீர்களே.
അന്യലോകാനാം കൃതേ യദ്യപ്യഹം പ്രേരിതോ ന ഭവേയം തഥാച യുഷ്മത്കൃതേ പ്രേരിതോഽസ്മി യതഃ പ്രഭുനാ മമ പ്രേരിതത്വപദസ്യ മുദ്രാസ്വരൂപാ യൂയമേവാധ്വേ|
3 ௩ என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மறுமொழி என்னவென்றால்:
യേ ലോകാ മയി ദോഷമാരോപയന്തി താൻ പ്രതി മമ പ്രത്യുത്തരമേതത്|
4 ௪ புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு உரிமை இல்லையா?
ഭോജനപാനയോഃ കിമസ്മാകം ക്ഷമതാ നാസ്തി?
5 ௫ மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் செய்கிறதுபோல, விசுவாசியாகிய ஒரு மனைவியை கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு உரிமை இல்லையா?
അന്യേ പ്രേരിതാഃ പ്രഭോ ർഭ്രാതരൗ കൈഫാശ്ച യത് കുർവ്വന്തി തദ്വത് കാഞ്ചിത് ധർമ്മഭഗിനീം വ്യൂഹ്യ തയാ സാർദ്ധം പര്യ്യടിതും വയം കിം ന ശക്നുമഃ?
6 ௬ அல்லது, கைத்தொழில் செய்யாமலிருக்க எனக்கும் பர்னபாவிற்கும்மட்டும்தானா உரிமை இல்லை?
സാംസാരികശ്രമസ്യ പരിത്യാഗാത് കിം കേവലമഹം ബർണബ്ബാശ്ച നിവാരിതൗ?
7 ௭ எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, இராணுவத்திலே சேவை செய்வான்? எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியை சாப்பிடாமல் இருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைக் குடிக்காமல் இருப்பான்?
നിജധനവ്യയേന കഃ സംഗ്രാമം കരോതി? കോ വാ ദ്രാക്ഷാക്ഷേത്രം കൃത്വാ തത്ഫലാനി ന ഭുങ്ക്തേ? കോ വാ പശുവ്രജം പാലയൻ തത്പയോ ന പിവതി?
8 ௮ இவைகளை மனிதர்கள் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?
കിമഹം കേവലാം മാനുഷികാം വാചം വദാമി? വ്യവസ്ഥായാം കിമേതാദൃശം വചനം ന വിദ്യതേ?
9 ௯ போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாக இருக்கிறாரோ?
മൂസാവ്യവസ്ഥാഗ്രന്ഥേ ലിഖിതമാസ്തേ, ത്വം ശസ്യമർദ്ദകവൃഷസ്യാസ്യം ന ഭംത്സ്യസീതി| ഈശ്വരേണ ബലീവർദ്ദാനാമേവ ചിന്താ കിം ക്രിയതേ?
10 ௧0 நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடு உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடு போரடிக்கவும் வேண்டும். ஆகவே, அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
കിം വാ സർവ്വഥാസ്മാകം കൃതേ തദ്വചനം തേനോക്തം? അസ്മാകമേവ കൃതേ തല്ലിഖിതം| യഃ ക്ഷേത്രം കർഷതി തേന പ്രത്യാശായുക്തേന കർഷ്ടവ്യം, യശ്ച ശസ്യാനി മർദ്ദയതി തേന ലാഭപ്രത്യാശായുക്തേന മർദ്ദിതവ്യം|
11 ௧௧ நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
യുഷ്മത്കൃതേഽസ്മാഭിഃ പാരത്രികാണി ബീജാനി രോപിതാനി, അതോ യുഷ്മാകമൈഹികഫലാനാം വയമ് അംശിനോ ഭവിഷ്യാമഃ കിമേതത് മഹത് കർമ്മ?
12 ௧௨ மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களைவிட நாங்கள் அதிகமாகச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு எந்தவொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடுகளும் படுகிறோம்.
യുഷ്മാസു യോഽധികാരസ്തസ്യ ഭാഗിനോ യദ്യന്യേ ഭവേയുസ്തർഹ്യസ്മാഭിസ്തതോഽധികം കിം തസ്യ ഭാഗിഭി ർന ഭവിതവ്യം? അധികന്തു വയം തേനാധികാരേണ ന വ്യവഹൃതവന്തഃ കിന്തു ഖ്രീഷ്ടീയസുസംവാദസ്യ കോഽപി വ്യാഘാതോഽസ്മാഭിര്യന്ന ജായേത തദർഥം സർവ്വം സഹാമഹേ|
13 ௧௩ ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவாலயத்தில் இருக்கிறவைகளிலிருந்து சாப்பிடுகிறார்கள் என்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்கு பலிபீடத்தில் உள்ளவைகளில் பங்கு உண்டென்றும் உங்களுக்குத் தெரியாதா?
അപരം യേ പവിത്രവസ്തൂനാം പരിചര്യ്യാം കുർവ്വന്തി തേ പവിത്രവസ്തുതോ ഭക്ഷ്യാണി ലഭന്തേ, യേ ച വേദ്യാഃ പരിചര്യ്യാം കുർവ്വന്തി തേ വേദിസ്ഥവസ്തൂനാമ് അംശിനോ ഭവന്ത്യേതദ് യൂയം കിം ന വിദ?
14 ௧௪ அந்தப்படியே நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
തദ്വദ് യേ സുസംവാദം ഘോഷയന്തി തൈഃ സുസംവാദേന ജീവിതവ്യമിതി പ്രഭുനാദിഷ്ടം|
15 ௧௫ அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அனுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டுதலை ஒருவன் மனவேதனையாக்குகிறதைவிட நான் சாகிறது எனக்கு நலமாக இருக்கும்.
അഹമേതേഷാം സർവ്വേഷാം കിമപി നാശ്രിതവാൻ മാം പ്രതി തദനുസാരാത് ആചരിതവ്യമിത്യാശയേനാപി പത്രമിദം മയാ ന ലിഖ്യതേ യതഃ കേനാപി ജനേന മമ യശസോ മുധാകരണാത് മമ മരണം വരം|
16 ௧௬ நற்செய்தியை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது; நற்செய்தியை நான் பிரசங்கிக்காமல் இருந்தால், எனக்கு ஐயோ.
സുസംവാദഘേഷണാത് മമ യശോ ന ജായതേ യതസ്തദ്ഘോഷണം മമാവശ്യകം യദ്യഹം സുസംവാദം ന ഘോഷയേയം തർഹി മാം ധിക്|
17 ௧௭ நான் உற்சாகமாக அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகம் இல்லாதவனாகச் செய்தாலும், மேற்பார்வையாளர் பதவி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
ഇച്ഛുകേന തത് കുർവ്വതാ മയാ ഫലം ലപ്സ്യതേ കിന്ത്വനിച്ഛുകേഽപി മയി തത്കർമ്മണോ ഭാരോഽർപിതോഽസ്തി|
18 ௧௮ ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் நற்செய்தியை பிரசங்கிக்கும்போது அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் நற்செய்தியைச் செலவில்லாமல் பிரசங்கிப்பதே எனக்குப் பலன்.
ഏതേന മയാ ലഭ്യം ഫലം കിം? സുസംവാദേന മമ യോഽധികാര ആസ്തേ തം യദഭദ്രഭാവേന നാചരേയം തദർഥം സുസംവാദഘോഷണസമയേ തസ്യ ഖ്രീഷ്ടീയസുസംവാദസ്യ നിർവ്യയീകരണമേവ മമ ഫലം|
19 ௧௯ நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாக இருந்தும், நான் அதிக மக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன்.
സർവ്വേഷാമ് അനായത്തോഽഹം യദ് ഭൂരിശോ ലോകാൻ പ്രതിപദ്യേ തദർഥം സർവ്വേഷാം ദാസത്വമങ്ഗീകൃതവാൻ|
20 ௨0 யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, யூதர்களுக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவனைப்போலவும் ஆனேன்.
യിഹൂദീയാൻ യത് പ്രതിപദ്യേ തദർഥം യിഹൂദീയാനാം കൃതേ യിഹൂദീയഇവാഭവം| യേ ച വ്യവസ്ഥായത്താസ്താൻ യത് പ്രതിപദ്യേ തദർഥം വ്യവസ്ഥാനായത്തോ യോഽഹം സോഽഹം വ്യവസ്ഥായത്താനാം കൃതേ വ്യവസ്ഥായത്തഇവാഭവം|
21 ௨௧ நியாயப்பிரமாணம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவும் ஆனேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இல்லாமல், கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டவனாக இருக்கிறேன்.
യേ ചാലബ്ധവ്യവസ്ഥാസ്താൻ യത് പ്രതിപദ്യേ തദർഥമ് ഈശ്വരസ്യ സാക്ഷാദ് അലബ്ധവ്യവസ്ഥോ ന ഭൂത്വാ ഖ്രീഷ്ടേന ലബ്ധവ്യവസ്ഥോ യോഽഹം സോഽഹമ് അലബ്ധവ്യവസ്ഥാനാം കൃതേഽലബ്ധവ്യവസ്ഥ ഇവാഭവം|
22 ௨௨ பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாவது சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.
ദുർബ്ബലാൻ യത് പ്രതിപദ്യേ തദർഥമഹം ദുർബ്ബലാനാം കൃതേ ദുർബ്ബലഇവാഭവം| ഇത്ഥം കേനാപി പ്രകാരേണ കതിപയാ ലോകാ യന്മയാ പരിത്രാണം പ്രാപ്നുയുസ്തദർഥം യോ യാദൃശ ആസീത് തസ്യ കൃതേ ഽഹം താദൃശഇവാഭവം|
23 ௨௩ நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச்செய்கிறேன்.
ഇദൃശ ആചാരഃ സുസംവാദാർഥം മയാ ക്രിയതേ യതോഽഹം തസ്യ ഫലാനാം സഹഭാഗീ ഭവിതുമിച്ഛാമി|
24 ௨௪ பந்தயப் பாதையில் ஓடுகிறவர்களெல்லோரும் ஓடுவார்கள்; ஆனாலும், ஒருவனே வெற்றியை பெறுவானென்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
പണ്യലാഭാർഥം യേ ധാവന്തി ധാവതാം തേഷാം സർവ്വേഷാം കേവല ഏകഃ പണ്യം ലഭതേ യുഷ്മാഭിഃ കിമേതന്ന ജ്ഞായതേ? അതോ യൂയം യഥാ പണ്യം ലപ്സ്യധ്വേ തഥൈവ ധാവത|
25 ௨௫ பந்தயத்திற்குப் போராடுகிற அனைவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாக இருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
മല്ലാ അപി സർവ്വഭോഗേ പരിമിതഭോഗിനോ ഭവന്തി തേ തു മ്ലാനാം സ്രജം ലിപ്സന്തേ കിന്തു വയമ് അമ്ലാനാം ലിപ്സാമഹേ|
26 ௨௬ ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடமாட்டேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணமாட்டேன்.
തസ്മാദ് അഹമപി ധാവാമി കിന്തു ലക്ഷ്യമനുദ്ദിശ്യ ധാവാമി തന്നഹി| അഹം മല്ലഇവ യുധ്യാമി ച കിന്തു ഛായാമാഘാതയന്നിവ യുധ്യാമി തന്നഹി|
27 ௨௭ மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாகப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன்.
ഇതരാൻ പ്രതി സുസംവാദം ഘോഷയിത്വാഹം യത് സ്വയമഗ്രാഹ്യോ ന ഭവാമി തദർഥം ദേഹമ് ആഹന്മി വശീകുർവ്വേ ച|