< 1 கொரிந்தியர் 8 >
1 ௧ விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லோருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவளர்ச்சியை உண்டாக்கும்.
А щодо і́дольських жертов, то ми знаємо, що всі маємо знання́. Знання́ ж надимає, любов же будує!
2 ௨ ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய விதத்தில் அவன் இன்னும் அறியவில்லை.
Коли хто ду́має, ніби щось знає, той нічого не знає ще так, як знати повинно.
3 ௩ தேவனிடம் அன்புசெலுத்துகிறவன் யாரோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.
Коли ж любить хто Бога, той пі́знаний Ним.
4 ௪ விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேதவிர வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
Тож про спожива́ння і́дольських же́ртов ми знаємо, що і́дол у світі ніщо, і що іншого Бога нема, окрім Бога Одно́го.
5 ௫ வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக ஆண்டவன்மார்களும் உண்டாயிருந்தாலும்,
Бо хоч і існують так звані „боги“чи на небі, чи то на землі, як існує багато богів і багато панів,
6 ௬ பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, அவராலே அனைத்தும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்கு உண்டு; அவர் மூலமாக அனைத்தும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாக நாமும் உண்டாயிருக்கிறோம்.
та для нас один Бог — Отець, що з Нього походить усе, ми ж для Нього, і один Госпо́дь — Ісус Христос, що все сталося Ним, і ми Ним.
7 ௭ ஆனாலும், இந்த அறிவு எல்லோரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிடுகிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாக இருப்பதால் அசுத்தமாக்கப்படுகிறது.
Та не всі таке мають знання́, бо де́які мають призвича́єння до ідола й досі, і їдять, як ідольську жертву, — і їхнє сумління, бувши недуже, спога́нюється.
8 ௮ உணவானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது ஏனென்றால், சாப்பிடுவதினால் நமக்கு ஒரு மேன்மையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால் நமக்கு ஒரு குறைவும் இல்லை.
Їжа ж нас до Бога не збли́жує: бо коли не їмо, то нічого не тратимо, а коли ми їмо, то не набуваєм нічо́го.
9 ௯ ஆனாலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனர்களுக்கு இடையூறு வராதபடிக்குப் பாருங்கள்.
Але стережіться, щоб ця ваша воля не стала якось за спотика́ння слаби́м!
10 ௧0 எப்படியென்றால், அறிவுள்ளவனாகிய நீ விக்கிரகக் கோவிலிலே சாப்பிடுவதை ஒருவன் பார்த்தால், பலவீனனாக இருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை சாப்பிடுவதற்குத் துணிவு கொள்ளுமல்லவா?
Коли бо хто бачить тебе, маю́чого знання́, як ти в і́дольській божни́ці сидиш за столом, чи ж сумління його, бувши слабе́, не буде спону́кане їсти ідольські жертви?
11 ௧௧ பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
І через знання́ твоє згине недужий твій брат, що за нього Христос був умер!
12 ௧௨ இப்படிச் சகோதரர்களுக்கு விரோதமாகப் பாவம்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியை வருத்தப்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாகப் பாவம் செய்கிறீர்கள்.
Грі́шачи так проти братів та вражаючи їхнє слабе сумління, ви проти Христа грішите́.
13 ௧௩ ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn )
Ось тому́, коли їжа споку́шує брата мого, то повік я не їстиму м'яса, щоб не спокусити брата свого! (aiōn )