< 1 கொரிந்தியர் 5 >
1 ௧ உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று வெளிப்படையாக சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாக இருக்கிறதே.
ⲁ̅ϨⲞⲖⲰⲤ ⲤⲈⲤⲰⲦⲈⲘ ⲈⲞⲨⲠⲞⲢⲚⲒⲀ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲞⲨⲞϨ ⲞⲨⲠⲞⲢⲚⲒⲀ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲐⲀⲒ ⲈⲦⲈⲚⲤϢⲞⲠ ⲀⲚ ϦⲈⲚⲚⲒⲔⲈⲈⲐⲚⲞⲤ ϨⲰⲤⲦⲈ ⲚⲦⲈⲞⲨⲀⲒ ϬⲒ ⲦⲤϨⲒⲘⲒ ⲘⲠⲈϤⲒⲰⲦ.
2 ௨ இப்படிப்பட்டக் காரியத்தைச் செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
ⲃ̅ⲞⲨⲞϨ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲰⲦⲈⲚ ⲦⲈⲦⲈⲚϬⲞⲤⲒ ⲚϨⲎⲦ ⲞⲨⲞϨ ⲈⲐⲂⲈⲞⲨ ⲘⲀⲖⲖⲞⲚ ⲘⲠⲈⲦⲈⲚⲈⲢϨⲎ ⲂⲒ ϨⲒⲚⲀ ⲚⲤⲈⲰⲖⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲦⲈⲦⲈⲚⲘⲎϮ ⲘⲪⲎ ⲈⲦⲀϤⲒⲢⲒ ⲘⲠⲀⲒϨⲰⲂ ⲘⲠⲀⲒⲢⲎϮ.
3 ௩ நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாக இருந்தும், ஆவியினாலே உங்களோடுகூட இருக்கிறவனாக, இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறேன்.
ⲅ̅ⲀⲚⲞⲔ ⲘⲈⲚ ⲄⲀⲢ ⲚϮⲚⲈⲘⲰⲦⲈⲚ ⲀⲚ ϦⲈⲚⲠⲒⲤⲰⲘⲀ ϮⲚⲈⲘⲰⲦⲈⲚ ⲆⲈ ϦⲈⲚⲠⲒⲠⲚⲈⲨⲘⲀϨⲎⲆⲎ ⲈⲒϮϨⲀⲠ ϨⲰⲤ ⲈⲒⲚⲈⲘⲰⲦⲈⲚ ⲘⲪⲎ ⲈⲦⲀϤⲒⲢⲒ ⲘⲠⲀⲒϨⲰⲂ ⲘⲠⲀⲒⲢⲎϮ.
4 ௪ அப்படியே நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடு கூடிவந்திருக்கும்போது,
ⲇ̅ϦⲈⲚ ⲪⲢⲀⲚ ⲘⲠⲈⲚϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲚⲦⲈⲦⲈⲚⲐⲰⲞⲨϮ ⲈⲨⲘⲀ ⲚⲈⲘ ⲠⲀⲠⲚⲈⲨⲘⲀⲚⲈⲘ ϮϪⲞⲘ ⲚⲦⲈⲠⲈⲚϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ.
5 ௫ அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
ⲉ̅ⲈϮ ⲘⲪⲀⲒ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲈⲦⲞⲦϤ ⲘⲠⲤⲀⲦⲀⲚⲀⲤ ⲈⲠⲦⲀⲔⲞ ⲚⲦⲈϮⲤⲀⲢⲜ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲚⲞϨⲈⲘ ϦⲈⲚⲠⲈϨⲞⲞⲨ ⲘⲠⲈⲚϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ.
6 ௬ நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று உங்களுக்குத் தெரியாதா?
ⲋ̅ⲚⲀⲚⲈ ⲠⲈⲦⲈⲚϢⲞⲨϢⲞⲨ ⲀⲚ ⲚⲦⲈⲦⲈⲚⲈⲘⲒ ⲀⲚ ϪⲈ ⲞⲨⲔⲞⲨϪⲒ ⲚϢⲈⲘⲎⲢ ϢⲀϤⲐⲢⲈ ⲠⲒⲞⲨⲰϢⲈⲘ ⲦⲎⲢϤ ϬⲒϢⲈⲘⲎⲢ.
7 ௭ ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
ⲍ̅ⲘⲀⲦⲞⲨⲂⲈ ⲠⲒϢⲈⲘⲎⲢ ⲚⲀⲠⲀⲤ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲦⲈⲚϢⲰⲠⲒ ⲚⲞⲨⲰϢⲈⲘ ⲘⲂⲈⲢⲒ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲈⲦⲈⲚⲞⲒ ⲚⲀⲦϢⲈⲘⲎⲢ ⲔⲈ ⲄⲀⲢ ⲠⲈⲚⲠⲀⲤⲬⲀ ⲀⲨϢⲀⲦϤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ.
8 ௮ ஆதலால் துர்க்குணம் பொல்லாப்பு என்னும் பழைய புளித்தமாவோடு அல்ல, பரிசுத்தம் உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடு பண்டிகையை அனுசரிக்கக்கடவோம்.
ⲏ̅ϨⲰⲤⲦⲈ ⲘⲀⲢⲈⲚⲈⲢϢⲀⲒ ϦⲈⲚⲞⲨϢⲈⲘⲎⲢ ⲚⲀⲠⲀⲤ ⲀⲚ ⲞⲨⲆⲈ ϦⲈⲚⲞⲨϢⲈⲘⲎⲢ ⲚⲔⲀⲔⲒⲀ ⲀⲚ ⲚⲈⲘ ⲠⲞⲚⲎⲢⲒⲀ ⲀⲖⲖⲀ ϦⲈⲚϨⲀⲚⲘⲈⲦⲀⲦϢⲈⲘⲎ ⲢⲚⲦⲈ ⲞⲨⲦⲞⲨⲂⲞ ⲚⲈⲘ ⲞⲨⲘⲈⲐⲘⲎⲒ.
9 ௯ விபசாரக்காரர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன்.
ⲑ̅ⲀⲒⲤϦⲀⲒ ⲚⲰⲦⲈⲚ ϨⲒ ϮⲈⲠⲒⲤⲦⲞⲖⲎ ⲈϢⲦⲈⲘⲘⲞⲨϪⲦ ⲚⲈⲘ ⲚⲒⲠⲞⲢⲚⲞⲤ.
10 ௧0 ஆனாலும், இந்த உலகத்திலுள்ள விபசாரக்காரர்கள், பொருளாசைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், விக்கிரக ஆராதனைக்காரர்கள் இவர்களோடு கொஞ்சம்கூட கலந்திருக்கக்கூடாது என்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டுப் போகவேண்டியதாயிருக்குமே.
ⲓ̅ⲚⲀⲒϪⲈⲢⲈ ⲚⲒⲠⲞⲢⲚⲞⲤ ⲀⲚ ⲚⲦⲈⲠⲀⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲒⲈ ⲚⲒⲢⲈϤϬⲒⲚϪⲞⲚⲤ ⲒⲈ ⲚⲒⲢⲈϤϨⲰⲖⲈⲘ ⲒⲈ ⲚⲒⲢⲈϤϢⲀⲘϢⲈ ⲒⲆⲰⲖⲞⲚ ⲘⲘⲞⲚ ⲚⲀⲤⲘⲠϢⲀ ⲚⲰⲦⲈⲚ ⲠⲈ ⲚⲦⲈⲦⲈⲚⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲀⲒⲔⲞⲤⲘⲞⲤ.
11 ௧௧ நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது.
ⲓ̅ⲁ̅ϮⲚⲞⲨ ⲆⲈ ⲀⲒⲤϦⲀⲒ ⲚⲰⲦⲈⲚ ⲈϢⲦⲈⲘⲘⲞⲨϪⲦ ⲚⲈⲘⲰⲞⲨ ⲈϢⲰⲠ ⲈⲞⲨⲞⲚ ⲞⲨⲀⲒ ⲈⲨϮⲢⲀⲚ ⲈⲢⲞϤ ϪⲈ ⲤⲞⲚ ⲈⲞⲨⲠⲞⲢⲚⲞⲤ ⲒⲈ ⲞⲨⲢⲈϤϬⲒⲚϪⲞⲚⲤ ⲒⲈ ⲞⲨⲢⲈϤϢⲀⲘϢⲈ ⲒⲆⲰⲖⲞⲚ ⲒⲈ ⲞⲨⲢⲈϤϨⲰⲞⲨϢ ⲒⲈ ⲞⲨⲢⲈϤⲐⲒϦⲒ ⲒⲈ ⲞⲨⲢⲈϤϨⲰⲖⲈⲘ ⲪⲀⲒ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲞⲨⲆⲈ ⲘⲠⲈⲢⲈⲢϢⲪⲎⲢ ⲚⲞⲨⲰⲘ ⲚⲈⲘⲀϤ.
12 ௧௨ சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
ⲓ̅ⲃ̅ⲈⲢⲞⲨ ⲄⲀⲢ ⲚⲎⲒ ⲈϮϨⲀⲠ ⲈⲚⲎ ⲈⲦⲤⲀⲂⲞⲖ ⲚⲎ ⲈⲦⲤⲀϦⲞⲨⲚ ⲚⲐⲰⲦⲈⲚ ⲘⲀϨⲀⲠ ⲈⲢⲰⲞⲨ
13 ௧௩ வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.
ⲓ̅ⲅ̅ⲚⲎ ⲈⲦⲤⲀⲂⲞⲖ ⲆⲈ ⲪⲚⲞⲨϮ ⲈϤⲈϮϨⲀⲠ ⲈⲢⲰⲞⲨ ⲀⲖⲒⲞⲨⲒ ⲘⲠⲒⲠⲈⲦϨⲰⲞⲨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ.