< 1 கொரிந்தியர் 4 >
1 ௧ இப்படியாக, எந்த மனிதனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்றும், தேவனுடைய இரகசியங்களின் மேற்பார்வைக்காரர்களென்றும் நினைத்துக்கொள்ளவேண்டும்.
Let a man so account us, as servants of Christ, and stewards of the mysteries of God.
2 ௨ மேலும், மேற்பார்வைக்காரன் உண்மையுள்ளவன் என்று காணப்படுவது அவசியமாகும்.
Here moreover, it is required in stewards, that a man be found faithful.
3 ௩ ஆனாலும் நான் உங்களாலேயாவது மனிதர்களுடைய நியாயநாளின் விசாரணையினாலோ தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் சாதாரண காரியமாக இருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.
But with me it is a very small thing that I should be judged by you, or by a human tribunal; nay, I do not even judge myself;
4 ௪ என்னிடத்தில் நான் எந்தவொரு குற்றத்தையும் அறியேன்; ஆனாலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.
for though I am conscious to myself of nothing wrong, yet not by this am I cleared of blame; but he that judgeth me is the Lord.
5 ௫ ஆதலால், கர்த்தர் வரும்வரைக்கும் நீங்கள் காலத்திற்குமுன்னே எதைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளிப்படையாக்கி, இருதயங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
So then judge nothing before the time, until the Lord come, who will both bring to light the hidden things of darkness, and make manifest the purposes of men's hearts; and then shall every one have his praise from God.
6 ௬ சகோதரர்களே, எழுதப்பட்டதற்கு அதிகமாக நினைக்கவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாக கர்வமடையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் ஆதாரமாக வைத்து, இவைகளை எழுதினேன்.
And these things, brethren, I have transferred in a figure to myself and Apollos for your sakes, that in us ye may learn not to go beyond what is written, that no one of you may pride himself in one against another.
7 ௭ அன்றியும் உன்னை சிறப்பானவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது எது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?
For who maketh thee to differ from another? And what hast thou that thou didst not receive? But if thou didst receive it, why dost thou boast, as if thou hadst not received it?
8 ௮ இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாக இருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாக இருக்கும்; அப்பொழுது உங்களோடுகூட நாங்களும் ஆளுவோமே.
Already ye are full; already ye are rich; without us ye have become kings; and I would indeed ye were kings, that we also might reign with you.
9 ௯ தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாகக் காணப்படப்பண்ணினார் என்று தோன்றுகிறது; நாங்கள் உலகத்திற்கும் தூதர்களுக்கும் மனிதர்களுக்கும் வேடிக்கையானோம்.
For I think that God hath set forth us the apostles as lowest, as men sentenced to death; for we have been made a spectacle to the world, to angels, and to men.
10 ௧0 நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், ஆனால் நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனமானவர்கள், ஆனால் நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேன்மையானவர்கள், ஆனால் நாங்கள் மேன்மையற்றவர்கள்.
We are fools for Christ's sake, but ye are wise in Christ; we are weak, but ye are strong; ye are in honor, but we are despised.
11 ௧௧ இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், கொடூரமாக தாக்கப்பட்டவர்களும், தங்க இடம் இல்லாதவர்களுமாக இருக்கிறோம்.
Even to this very hour we both hunger, and thirst, and are naked, and are buffeted, and have no certain dwelling-place,
12 ௧௨ எங்களுடைய கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம், சபிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறோம், துன்பப்படும்போது சகிக்கிறோம்.
and labor, working with our own hands; being reviled, we bless; being persecuted, we endure it;
13 ௧௩ நிந்திக்கப்படும்போது வேண்டிக்கொள்ளுகிறோம், இந்தநாள்வரை உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனோம்.
being slandered, we exhort; we have become as the filth of the world, the off-scouring of all things until now.
14 ௧௪ உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
I write not these things to shame you, but I am warning you as my beloved children.
15 ௧௫ கிறிஸ்துவிற்குள் பத்தாயிரம் ஆசிரியர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார்கள் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவிற்குள் நற்செய்தியினால் நான் உங்களைப்பெற்றேன்.
For though ye have ten thousand teachers in Christ, yet have ye not many fathers; for in Christ Jesus I begot you through the gospel.
16 ௧௬ ஆகவே, என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
I exhort you therefore, be ye imitators of me.
17 ௧௭ இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவிற்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.
For this end I sent to you Timothy, who is my beloved child, and faithful in the Lord, who will put you in mind of my ways in Christ, according as I teach everywhere in every church.
18 ௧௮ நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.
Now some are puffed up, as though I were not coming to you.
19 ௧௯ ஆனாலும் கர்த்தருக்கு விருப்பமானால் நான் சீக்கிரமாக உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சை அல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
But I shall come to you shortly, if it be the Lord's will, and will know, not the word of those who are puffed up, but the power;
20 ௨0 தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே இல்லை, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
for the kingdom of God is not in word, but in power.
21 ௨௧ உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடம் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?
What will ye? Am I to come to you with a rod, or in love, and the spirit of mildness?