< 1 கொரிந்தியர் 3 >
1 ௧ மேலும், சகோதரர்களே, நான் உங்களை ஆவியானவருக்குரியவர்கள் என்று நினைத்து உங்களோடு பேசாமல், மாம்சத்திற்குரியவர்களென்றும், கிறிஸ்துவிற்குள் குழந்தைகளென்றும் நினைத்துப் பேசவேண்டியதாக இருக்கிறது.
ហេ ភ្រាតរះ, អហមាត្មិកៃរិវ យុឞ្មាភិះ សមំ សម្ភាឞិតុំ នាឝក្នវំ កិន្តុ ឝារីរិកាចារិភិះ ខ្រីឞ្ដធម៌្មេ ឝិឝុតុល្យៃឝ្ច ជនៃរិវ យុឞ្មាភិះ សហ សមភាឞេ។
2 ௨ நீங்கள் பெலன் இல்லாதவர்களானதால், உங்களுக்கு உணவு கொடுக்காமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் சரீரத்திற்குரியவர்களாக இருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
យុឞ្មាន៑ កឋិនភក្ឞ្យំ ន ភោជយន៑ ទុគ្ធម៑ អបាយយំ យតោ យូយំ ភក្ឞ្យំ គ្រហីតុំ តទា នាឝក្នុត ឥទានីមបិ ន ឝក្នុថ, យតោ ហេតោរធុនាបិ ឝារីរិកាចារិណ អាធ្វេ។
3 ௩ பொறாமையும் வாக்குவாதமும் வேறுபாடுகளும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாக இருந்து மனித வழிமுறையில் நடக்கிறீர்களல்லவா?
យុឞ្មន្មធ្យេ មាត្សយ៌្យវិវាទភេទា ភវន្តិ តតះ កិំ ឝារីរិកាចារិណោ នាធ្វេ មានុឞិកមាគ៌េណ ច ន ចរថ?
4 ௪ ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், மற்றொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் சரீரத்திற்குரியவர்களல்லவா?
បៅលស្យាហមិត្យាបល្លោរហមិតិ វា យទ្វាក្យំ យុឞ្មាកំ កៃឝ្ចិត៑ កៃឝ្ចិត៑ កថ្យតេ តស្មាទ៑ យូយំ ឝារីរិកាចារិណ ន ភវថ?
5 ௫ பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு கிருபை அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு காரணமாக இருந்த ஊழியக்காரர்கள்தானே.
បៅលះ កះ? អាបល្លោ រ្វា កះ? តៅ បរិចារកមាត្រៅ តយោរេកៃកស្មៃ ច ប្រភុ រ្យាទ្ឫក៑ ផលមទទាត៑ តទ្វត៑ តយោទ៌្វារា យូយំ វិឝ្វាសិនោ ជាតាះ។
6 ௬ நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர்ப் பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
អហំ រោបិតវាន៑ អាបល្លោឝ្ច និឞិក្តវាន៑ ឦឝ្វរឝ្ចាវទ៌្ធយត៑។
7 ௭ அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாம் ஆகும்.
អតោ រោបយិត្ឫសេក្តារាវសារៅ វទ៌្ធយិតេឝ្វរ ឯវ សារះ។
8 ௮ மேலும் நடுகிறவனும் தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தகுந்தபடி கூலியைப் பெறுவான்.
រោបយិត្ឫសេក្តារៅ ច សមៅ តយោរេកៃកឝ្ច ស្វឝ្រមយោគ្យំ ស្វវេតនំ លប្ស្យតេ។
9 ௯ நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாக இருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாக இருக்கிறீர்கள்.
អាវាមីឝ្វរេណ សហ កម៌្មការិណៅ, ឦឝ្វរស្យ យត៑ ក្ឞេត្រម៑ ឦឝ្វរស្យ យា និម៌្មិតិះ សា យូយមេវ។
10 ௧0 எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்ப ஆசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் எப்படிக் கட்டுகிறான் என்று கவனமாக இருக்கவேண்டும்.
ឦឝ្វរស្យ ប្រសាទាត៑ មយា យត៑ បទំ លព្ធំ តស្មាត៑ ជ្ញានិនា គ្ឫហការិណេវ មយា ភិត្តិមូលំ ស្ថាបិតំ តទុបរិ ចាន្យេន និចីយតេ។ កិន្តុ យេន យន្និចីយតេ តត៑ តេន វិវិច្យតាំ។
11 ௧௧ போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறு அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் முடியாது.
យតោ យីឝុខ្រីឞ្ដរូបំ យទ៑ ភិត្តិមូលំ ស្ថាបិតំ តទន្យត៑ កិមបិ ភិត្តិមូលំ ស្ថាបយិតុំ កេនាបិ ន ឝក្យតេ។
12 ௧௨ ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக்கொண்டு கட்டினால்,
ឯតទ្ភិត្តិមូលស្យោបរិ យទិ កេចិត៑ ស្វណ៌រូប្យមណិកាឞ្ឋត្ឫណនលាន៑ និចិន្វន្តិ,
13 ௧௩ அவனவனுடைய வேலைப்பாடு வெளிப்படும்; நியாயத்தீர்ப்பு நாளானது அதை வெளிப்படுத்தும். ஏனென்றால், அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளது என்று அக்கினியானது பரிசோதிக்கும்.
តហ៌្យេកៃកស្យ កម៌្ម ប្រកាឝិឞ្យតេ យតះ ស ទិវសស្តត៑ ប្រកាឝយិឞ្យតិ។ យតោ ហតោស្តន ទិវសេន វហ្និមយេនោទេតវ្យំ តត ឯកៃកស្យ កម៌្ម កីទ្ឫឝមេតស្យ បរីក្ឞា ពហ្និនា ភវិឞ្យតិ។
14 ௧௪ அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.
យស្យ និចយនរូបំ កម៌្ម ស្ថាស្នុ ភវិឞ្យតិ ស វេតនំ លប្ស្យតេ។
15 ௧௫ ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோல இருக்கும்.
យស្យ ច កម៌្ម ធក្ឞ្យតេ តស្យ ក្ឞតិ រ្ភវិឞ្យតិ កិន្តុ វហ្នេ រ្និគ៌តជន ឥវ ស ស្វយំ បរិត្រាណំ ប្រាប្ស្យតិ។
16 ௧௬ நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாக இருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
យូយម៑ ឦឝ្វរស្យ មន្ទិរំ យុឞ្មន្មធ្យេ ចេឝ្វរស្យាត្មា និវសតីតិ កិំ ន ជានីថ?
17 ௧௭ ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், தேவன் அவனைக் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாக இருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
ឦឝ្វរស្យ មន្ទិរំ យេន វិនាឝ្យតេ សោៜបីឝ្វរេណ វិនាឝយិឞ្យតេ យត ឦឝ្វរស្យ មន្ទិរំ បវិត្រមេវ យូយំ តុ តន្មន្ទិរម៑ អាធ្វេ។
18 ௧௮ ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn )
កោបិ ស្វំ ន វញ្ចយតាំ។ យុឞ្មាកំ កឝ្ចន ចេទិហលោកស្យ ជ្ញានេន ជ្ញានវានហមិតិ ពុធ្យតេ តហ៌ិ ស យត៑ ជ្ញានី ភវេត៑ តទត៌្ហំ មូឍោ ភវតុ។ (aiōn )
19 ௧௯ ஏனெனில், இந்த உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாக இருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
យស្មាទិហលោកស្យ ជ្ញានម៑ ឦឝ្វរស្យ សាក្ឞាត៑ មូឍត្វមេវ។ ឯតស្មិន៑ លិខិតមប្យាស្តេ, តីក្ឞ្ណា យា ជ្ញានិនាំ ពុទ្ធិស្តយា តាន៑ ធរតីឝ្វរះ។
20 ௨0 ஞானிகளுடைய எண்ணங்கள் வீணாக இருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.
បុនឝ្ច។ ជ្ញានិនាំ កល្បនា វេត្តិ បរមេឝោ និរត៌្ហកាះ។
21 ௨௧ இப்படியிருக்க, ஒருவனும் மனிதர்களைக்குறித்து மேன்மைபாராட்டாமலிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;
អតឯវ កោៜបិ មនុជៃរាត្មានំ ន ឝ្លាឃតាំ យតះ សវ៌្វាណិ យុឞ្មាកមេវ,
22 ௨௨ பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், உலகமானாலும், ஜீவனானாலும் மரணமானாலும், நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், எல்லாம் உங்களுடையது;
បៅល វា អាបល្លោ រ្វា កៃផា វា ជគទ៑ វា ជីវនំ វា មរណំ វា វត៌្តមានំ វា ភវិឞ្យទ្វា សវ៌្វាណ្យេវ យុឞ្មាកំ,
23 ௨௩ நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.
យូយញ្ច ខ្រីឞ្ដស្យ, ខ្រីឞ្ដឝ្ចេឝ្វរស្យ។