< 1 கொரிந்தியர் 2 >
1 ௧ சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.
Так і я, брати, прибувши до вас, не прийшов звіщати Божу таємницю майстерністю слова або мудрістю,
2 ௨ நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
адже я вирішив не знати серед вас нічого, окрім Ісуса Христа, і то Його розіп’ятого.
3 ௩ அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடம் இருந்தேன்.
Я перебував серед вас у слабкості, у страху та у великому тремтінні.
4 ௪ உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
Моє слово та моя проповідь не [полягали] в переконливих словах мудрості, а в прояві Духа та сили,
5 ௫ என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது.
щоб ваша віра [ґрунтувалася] не на мудрості людей, а на силі Бога.
6 ௬ அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn )
Усе ж таки ми говоримо про мудрість між довершеними, а не про мудрість цього віку й не про керівників цього віку, які проходять. (aiōn )
7 ௭ உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn )
Ми говоримо про Божу мудрість, заховану в таємниці, яку Бог заздалегідь призначив для нашої слави перед віками. (aiōn )
8 ௮ அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn )
І цієї мудрості не пізнав жоден із правителів цього віку, бо якби пізнали, то не розіп’яли б Господа слави. (aiōn )
9 ௯ எழுதியிருக்கிறபடி: “தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;
Але як написано: «Око не бачило, та вухо не чуло, і до серця людського не підіймалося те, що Бог приготував тим, хто любить Його».
10 ௧0 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.
А нам Бог відкрив це через Духа. Адже Дух усе досліджує, навіть Божі глибини.
11 ௧௧ மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
І дійсно, хто знає те, що є в людині, як не людський дух, який є в ній? Так само ніхто не знає те, що є в Бозі, окрім Божого Духа.
12 ௧௨ நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம்.
Ми ж не маємо духа світу, але Духа від Бога, щоб знати те, що дароване нам Богом.
13 ௧௩ அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.
І говоримо про це не словами, яких навчає людська мудрість, а [словами, ] вивченими в Дусі, пояснюючи духовне духовним.
14 ௧௪ ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான்.
А плотська людина не приймає того, що від Божого Духа, бо для неї це безумство; і вона не може [цього] пізнати, адже про це можна судити лише духовно.
15 ௧௫ ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
Духовний судить усе, а його ніхто не судить.
16 ௧௬ “கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.
Адже «Хто пізнав задум Господа, щоб порадити Йому?» Ми ж маємо розум Христа.