< 1 கொரிந்தியர் 16 >
1 ௧ பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் நன்கொடை பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்கு செய்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
ⲁ̅ⲈⲐⲂⲈ ⲠⲒⲤⲰⲢ ⲆⲈ ⲈⲦⲀϤϢⲰⲠⲒ ⲈⲐⲂⲈ ⲚⲒⲀⲄⲒⲞⲤ ⲘⲪⲢⲎϮ ⲈⲦⲀⲒⲞⲨⲀϨⲤⲀϨⲚⲒ ⲚⲚⲒⲈⲔⲔⲖⲎ ⲤⲒⲀ ⲚⲦⲈⲦⲄⲀⲖⲀⲦⲒⲀ ⲀⲢⲒⲞⲨⲒ ϨⲰⲦⲈⲚ ⲘⲠⲀⲒⲢⲎϮ
2 ௨ நான் வந்திருக்கும்போது பணம் சேர்க்குதல் இல்லாதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவிற்கு ஏற்றபடி எதையாவது தன்னிடத்திலே சேர்த்துவைக்கவேண்டும்.
ⲃ̅ⲔⲀⲦⲀ ⲪⲞⲨⲀⲒ ⲚⲚⲒⲤⲀⲂⲂⲀⲦⲞⲚ ⲘⲀⲢⲈ ⲠⲒⲞⲨⲀⲒ ⲠⲒⲞⲨⲀⲒ ⲘⲘⲰⲦⲈⲚ ⲬⲰ ⲚⲦⲞⲦϤ ⲈϤϨⲒⲞⲨⲒ ⲈϦⲞⲨⲚ ⲘⲪⲎ ⲈⲦⲈ ⲠⲈϤⲘⲰⲒⲦ ⲚⲀⲤⲰⲞⲨⲦⲈⲚ ⲚϦⲎⲦϤ ϨⲒⲚⲀ ⲘⲎⲠⲰⲤ ⲀⲒϢⲀⲚⲒ ⲦⲞⲦⲈ ⲚⲦⲈϨⲀⲚⲰⲠ ϢⲰⲠⲒ.
3 ௩ நான் வரும்போது உங்களுடைய உதவியை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் கடிதங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.
ⲅ̅ⲈϢⲰⲠ ⲆⲈ ⲀⲒϢⲀⲚⲒ ⲚⲎ ⲈⲦⲈⲦⲈⲚⲚⲀⲈⲢⲆⲞⲔⲒⲘⲀⲌⲒⲚ ⲘⲘⲰⲞⲨ ⲚⲀⲒ ⲈⲒⲈⲞⲨⲞⲢⲠⲞⲨ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ϨⲀⲚⲈⲠⲒⲤⲦⲞⲖⲎ ⲈϬⲒ ⲘⲠⲈⲦⲈⲚϨⲘⲞⲦ ⲈⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ.
4 ௪ நானும் அதை நேரில் எடுத்துச்செல்வது தகுதியானது என்று தோன்றினால், அவர்கள் என்னோடுகூட வரலாம்.
ⲇ̅ⲈϢⲰⲠ ⲆⲈ ⲈⲠⲒϨⲰⲂ ⲘⲠϢⲀ ⲈⲐⲢⲒϢⲈ ϨⲰ ⲈⲨⲈⲘⲞϢⲒ ⲚⲈⲘⲎⲒ.
5 ௫ நான் மக்கெதோனியா நாட்டின்வழியாக போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
ⲉ̅ⲈⲒⲈⲒ ⲆⲈ ϨⲀⲢⲰⲦⲈⲚ ⲈϢⲰⲠ ⲀⲒϢⲀⲚⲤⲈⲚ ⲐⲘⲀⲔⲈⲆⲞⲚⲒⲀ ⲐⲘⲀⲔⲈⲆⲞⲚⲒⲀ ⲄⲀⲢ ϮⲚⲀⲤⲈⲚⲤ.
6 ௬ நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழியனுப்பும்படிக்கு, நான் உங்களிடம் சிலநாட்கள் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரைக்கும் இருப்பேன்.
ⲋ̅ⲦⲀⲬⲀ ⲆⲈ ⲚⲦⲀⲞϨⲒ ϦⲀⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲒⲈ ⲚⲦⲀⲈⲢϮⲪⲢⲰ ϨⲒⲚⲀ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲦⲈⲦⲈⲚⲦⲪⲞⲒ ⲈⲠⲒⲘⲀ ⲈϮⲚⲀϢⲈ ⲈⲢⲞϤ.
7 ௭ இப்பொழுது போகிற வழியில் உங்களை சிறிது காலம் சந்தித்துவிட்டுப் போக மனதில்லை; கர்த்தர் உத்தரவு கொடுத்தால் உங்களிடம் வந்து சிலநாட்கள் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.
ⲍ̅ϮⲞⲨⲰϢ ⲄⲀⲢ ⲈⲚⲀⲨ ⲈⲢⲰⲦⲈⲚ ϮⲚⲞⲨ ⲈⲒⲬⲎ ϨⲒ ⲪⲘⲰⲒⲦ ϮⲈⲢϨⲈⲖⲠⲒⲤ ⲄⲀⲢ ⲈⲈⲢⲬⲢⲞⲚⲞⲤ ϦⲀⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲈϢⲰⲠ ⲀⲢⲈϢⲀⲚ ⲠϬⲞⲒⲤ ⲞⲨⲀϨⲤⲀϨⲚⲒ.
8 ௮ ஆனாலும் பெந்தெகோஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.
ⲏ̅ϮⲚⲀϢⲰⲠⲒ ϦⲈⲚⲈⲪⲈⲤⲞⲤ ϢⲀ ϮⲠⲈⲚⲦⲎ ⲔⲞⲤⲦⲎ.
9 ௯ ஏனென்றால், இங்கே பெரிதும் சாதகமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதம் செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
ⲑ̅ⲀϤⲞⲨⲰⲚ ⲄⲀⲢ ⲚⲎⲒ ⲚϪⲈⲞⲨⲚⲒϢϮ ⲚⲢⲞ ⲈϤⲈⲢϨⲰⲂ ⲚⲈⲘ ⲞⲨⲘⲎϢ ⲚⲀⲚⲦⲒⲔⲒⲘⲈⲚⲞⲤ.
10 ௧0 தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடம் பயமில்லாமலிருக்கப்பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய வேலையைச் செய்கிறானே.
ⲓ̅ⲈϢⲰⲠ ⲆⲈ ⲀⲢⲈϢⲀⲚ ⲦⲒⲘⲞⲐⲈⲞⲤ Ⲓ- ⲀⲚⲀⲨ ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲒ ϨⲀⲢⲰⲦⲈⲚ ⲀⲦϬⲚⲈ ϨⲞϮ ⲠⲒϨⲰⲂ ⲄⲀⲢ ⲚⲦⲈⲠϬⲞⲒⲤ ⲠⲈⲦⲈϤⲈⲢϨⲰⲂ ⲈⲢⲞϤ ⲘⲠⲀⲢⲎϮ ϨⲰ.
11 ௧௧ ஆனபடியினால் ஒருவனும் அவனை இழிவாக நினைக்காதிருப்பானாக; சகோதரர்களோடுகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடு வழியனுப்பிவையுங்கள்.
ⲓ̅ⲁ̅ⲘⲠⲈⲚⲐⲢⲈ ϨⲖⲒ ⲞⲨⲚ ϢⲞϢϤ ⲘⲀϮⲪⲞϤ ⲆⲈ ϦⲈⲚⲞⲨϨⲒⲢⲎⲚⲎ ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲒ ϨⲀⲢⲞⲒ ϮⲤⲞⲘⲤ ⲄⲀⲢ ⲈⲂⲞⲖ ϦⲀϪⲰϤ ⲚⲈⲘ ⲚⲒⲤⲚⲎⲞⲨ.
12 ௧௨ சகோதரர்களோடுகூட உங்களிடம் வரும்படி சகோதரனாகிய அப்பொல்லோவை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆனாலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு சமயம் கிடைக்கும்போது வருவான்.
ⲓ̅ⲃ̅ⲈⲐⲂⲈ ⲀⲠⲞⲖⲖⲰ ⲆⲈ ⲠⲒⲤⲞⲚ ⲀⲒϮϨⲞ ⲈⲢⲞϤ ⲈⲘⲀϢⲰ ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲒ ϨⲀⲢⲰⲦⲈⲚ ⲚⲈⲘ ⲚⲒⲤⲚⲎⲞⲨ ⲞⲨⲞϨ ⲠⲀⲚⲦⲰⲤ ⲠⲈ ⲪⲞⲨⲰϢ ⲀⲚ ⲠⲈ ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲒ ϮⲚⲞⲨ ⲈϤⲈⲒ ⲆⲈ ϨⲀⲢⲰⲦⲈⲚ ⲀϤϢⲀⲚϪⲈⲘ ⲦⲈⲨⲔⲈⲢⲒⲀ.
13 ௧௩ விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், துணிவுள்ளவர்களாக இருங்கள், திடன்கொள்ளுங்கள்.
ⲓ̅ⲅ̅ⲢⲰⲒⲤ ⲞⲨⲚ ⲞⲨⲞϨ ⲞϨⲒ ⲈⲢⲀⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ϦⲈⲚⲪⲚⲀϨϮ ϬⲢⲞ ⲘⲘⲰⲦⲈⲚ ⲞⲨⲞϨ ϪⲈⲘⲚⲞⲘϮ.
14 ௧௪ உங்களுடைய காரியங்களெல்லாம் அன்போடு செய்யப்படவேண்டும்.
ⲓ̅ⲇ̅ϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲈⲚⲦⲰⲦⲈⲚ ⲘⲀⲢⲞⲨϢⲰⲠⲒ ϦⲈⲚⲞⲨⲀⲄⲀⲠⲎ.
15 ௧௫ சகோதரர்களே, ஸ்தேவானுடைய குடும்பத்தார் அகாயா நாட்டிலே முதல்கனியானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.
ⲓ̅ⲉ̅ϮϮϨⲞ ⲞⲨⲚ ⲈⲢⲰⲦⲈⲚ ⲚⲈⲚⲤⲚⲎⲞⲨ ⲦⲈⲦⲈⲚⲤⲰⲞⲨⲚ ⲘⲠⲎⲒ ⲚⲤⲦⲈⲪⲀⲚⲀ ⲚⲈⲘ ⲪⲞⲢⲦⲞⲨⲚⲀⲦⲞⲤ ϪⲈ ⲦⲀⲢⲬⲎ ⲚⲦⲈϮⲀⲬⲀⲒⲀ ⲦⲈ ⲞⲨⲞϨ ⲀⲨⲐⲀϢⲞⲨ ⲈⲨⲆⲒⲀⲔⲞⲚⲒⲀ ⲚⲚⲒⲀⲄⲒⲞⲤ.
16 ௧௬ இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாக பிரயாசப்படுகிற மற்ற அனைவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
ⲓ̅ⲋ̅ϨⲒⲚⲀ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲰⲦⲈⲚ ⲚⲦⲈⲦⲈⲚϬⲚⲈϪⲰⲦⲈⲚ ⲚⲚⲀⲒⲞⲨⲞⲚ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲚⲈⲘ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲞⲒ ⲚϢⲪⲎⲢ ⲚⲢⲈϤⲈⲢϨⲰⲂ ⲞⲨⲞϨ ⲈⲦϦⲞⲤⲒ.
17 ௧௭ ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாக இருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
ⲓ̅ⲍ̅ϮⲢⲀϢⲒ ⲆⲈ ⲈϪⲈⲚ ⲦⲠⲀⲢⲞⲨⲤⲒⲀ ⲚⲤⲦⲈⲪⲀⲚⲀ ⲚⲈⲘ ⲪⲞⲢⲦⲞⲨⲚⲀⲦⲞⲤ ⲚⲈⲘ ⲀⲬⲀⲒⲔⲞⲤ ϪⲈ ⲠⲈⲦⲈⲚϬⲢⲞϨ ⲚⲀⲒ ⲀⲨϪⲈⲔⲢⲰϤ.
18 ௧௮ அவர்கள் என் ஆவிக்கும் உங்களுடைய ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கீகாரம்பண்ணுங்கள்.
ⲓ̅ⲏ̅ⲀⲨϮⲘⲦⲞⲚ ⲄⲀⲢ ⲘⲠⲀⲠⲚⲈⲨⲘⲀⲚⲈⲘ ⲪⲰⲦⲈⲚ ⲤⲞⲨⲈⲚ ⲚⲀⲒⲞⲨⲞⲚ ⲞⲨⲚ ⲘⲠⲀⲒⲢⲎϮ.
19 ௧௯ ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்களுடைய வீட்டிலே கூடுகிற சபையோடுகூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.
ⲓ̅ⲑ̅ⲤⲈϢⲒⲚⲒ ⲈⲢⲰⲦⲈⲚ ⲚϪⲈⲚⲒⲈⲔⲔⲖⲎⲤⲒⲀ ⲚⲦⲈϮⲀⲤⲒⲀ ⲤⲈϢⲒⲚⲒ ⲈⲢⲰⲦⲈⲚ ⲈⲘⲀϢⲰ ϦⲈⲚⲠϬⲞⲒⲤ ⲚϪⲈⲀⲔⲨⲖⲀ ⲚⲈⲘ ⲠⲢⲒⲤⲔⲀ ⲚⲈⲘ ϮⲈⲔⲔⲖⲎⲤⲒⲀ ⲚⲦⲈⲠⲞⲨⲎⲒ.
20 ௨0 சகோதரர்களெல்லோரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
ⲕ̅ⲤⲈϢⲒⲚⲒ ⲈⲢⲰⲦⲈⲚ ⲚϪⲈⲚⲒⲤⲚⲎⲞⲨ ⲦⲎⲢⲞⲨ ⲈⲐⲚⲈⲘⲎⲒ ⲀⲢⲒⲀⲤⲠⲀⲌⲈⲤⲐⲈ ⲚⲚⲈⲦⲈⲚⲈⲢⲎ ⲞⲨ ϦⲈⲚⲞⲨⲪⲒ ⲈⲤⲞⲨⲀⲂ.
21 ௨௧ பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.
ⲕ̅ⲁ̅ⲠⲀⲀⲤⲠⲀⲤⲘⲞⲤ ϦⲈⲚⲦⲀϪⲒϪ ⲀⲚⲞⲔ ⲠⲀⲨⲖⲞⲤ.
22 ௨௨ ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புசெலுத்தாமல்போனால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கவேண்டும், கர்த்தர் வருகிறார்.
ⲕ̅ⲃ̅ⲪⲎ ⲈⲦⲈⲚϤⲘⲈⲒ ⲘⲠⲈⲚϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲀⲚ ⲘⲀⲢⲈϤϢⲰⲠⲒ ⲚⲞⲨⲀⲚⲀⲐⲈⲘⲀ ⲘⲀⲢⲀⲚⲀⲐⲀ.
23 ௨௩ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக.
ⲕ̅ⲅ̅ⲠϨⲘⲞⲦ ⲘⲠⲈⲚϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲚⲈⲘⲰⲦⲈⲚ.
24 ௨௪ கிறிஸ்து இயேசுவிற்குள்ளான என்னுடைய அன்பு உங்கள் அனைவரோடும்கூட இருப்பதாக. ஆமென்.
ⲕ̅ⲇ̅ⲦⲀⲀⲄⲀⲠⲎ ⲚⲈⲘⲰⲦⲈⲚ ⲦⲎⲢⲞⲨ ϦⲈⲚⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲀⲘⲎⲚ