< 1 கொரிந்தியர் 15 >
1 ௧ அன்றியும், சகோதரர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
提醒一下:我之前向你们宣讲了福音,你们已经接受了,此后便始终坚守。
2 ௨ நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாக, நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்களுடைய விசுவாசம் பயனில்லாததாக இருக்குமே.
如果你们坚守我所传给你们的福音,就会因这福音得救,否则你们所信的一切都是枉然。
3 ௩ நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
我将之前所获得的福音传递给你们,这是一条至关重要的讯息:如经文所述,耶稣已死,因我们的罪而死。
4 ௪ அடக்கம் செய்யப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
他在被埋葬之后,又按照经文所述在第三天复活。
5 ௫ கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார்.
他曾向彼得显现,然后又向十二使徒显现。
6 ௬ அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்சியளித்தார்; அவர்களில் அநேகர் இந்தநாள்வரை இருக்கிறார்கள், சிலர்மட்டும் மரணமடைந்தார்கள்.
之后他又向五百多名兄弟姐妹显现,这些人中,有的已经死去,但大多数人如今仍然活着。
7 ௭ பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும் காட்சியளித்தார்.
他还曾向雅各显现,再后又向所有使徒显现,
8 ௮ எல்லோருக்கும்பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
直到最后他才向我显现,好像我是一个未在预产期降生的婴儿。
9 ௯ நான் அப்போஸ்தலர்கள் எல்லோரையும்விட குறைந்தவனாக இருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலன் என்று பேர்பெறுவதற்கும் தகுதியற்றவன்.
我原本是所有使徒中最微不足道的那一个,本无资格被称为使徒,因为我曾经迫害上帝的教会。
10 ௧0 ஆனாலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை வீணாயிருக்கவில்லை; அவர்கள் எல்லோரையும்விட நான் அதிகமாகப் பிரயாசப்பட்டேன்; ஆனாலும் நான் இல்லை, என்னுடன் இருக்கிற தேவகிருபையே அப்படிச்செய்தது.
但我能有今天全凭上帝的恩典,他赐予我的恩典也没有付诸东流。相反,我比其他使徒更辛苦地付出,但真正辛苦付出的不是我,而是我所获赐的上帝恩典。
11 ௧௧ ஆகவே, நானாயிருந்தாலும் அவர்களாயிருந்தாலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இதையே விசுவாசித்திருக்கிறீர்கள்.
因此,无论是我或是众使徒,我们都在与你们这些信奉上帝之人,分享这福音。
12 ௧௨ கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
那么,如果这福音宣布基督死而复生,为什么你们中间会有人说没有死而复生这种事?
13 ௧௩ மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லையே.
如果没有死人复活之事,基督也就没有死而复生。
14 ௧௪ கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கவில்லையென்றால், எங்களுடைய பிரசங்கமும் வீண், உங்களுடைய விசுவாசமும் வீண்.
如果基督没有复活,我们向你们所传福音便毫无意义,你们的信也是毫无意义,
15 ௧௫ மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினார் என்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சி சொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
此外,当我们证明上帝让基督死而复生之时,还会被视为上帝的假证人。但如果上帝未让基督死而复生,那么是否根本就没有复活这种事?
16 ௧௬ மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லை.
如果死人无法复活,基督也就无法复活。
17 ௧௭ கிறிஸ்து உயிரோடு எழுந்திராவிட்டால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்களுடைய பாவங்களில் இருப்பீர்கள்.
如果基督没有复活,你们的信仰就是徒然,你们仍是罪人。
18 ௧௮ கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே.
那么也意味着因基督而死之人,也将消亡。
19 ௧௯ இவ்வுலக வாழ்விற்காகமட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எல்லா மனிதர்களையும்விட மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம்.
如果我们心中的希望只为今生而立,我们便是最可怜之人。
20 ௨0 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார்.
但基督的确已经死而复生,成为在死亡之人中所收获的初熟果实。
21 ௨௧ மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது.
正如死是借着一个人而来,死人的复活也是借着一个人而来。
22 ௨௨ ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
与亚当同在的众人都已死去,同理,与基督同在的众人都会复活。
23 ௨௩ அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
只是每个人都有自己复活的顺序:首先是基督这初熟的果实,然后才是他降临之时追随于他的众人。
24 ௨௪ அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாக இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
之后便到了最后关头,基督毁灭了所有统治者、掌权者和力量,将这世间之国交给天父上帝。
25 ௨௫ எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும்.
基督必将为王,但在这之前,基督会将他的所有敌人置于他的脚下。
26 ௨௬ அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம்.
最后被毁灭的敌人就是死亡。
27 ௨௭ எல்லாவற்றையும் அவருடைய காலுக்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆனாலும் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, அனைத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது வெளியரங்கமாக இருக்கிறது.
正如经文所说:“他让万物臣服于他脚下。”(当然了,这里所说的“万物”臣服于他,并不包括上帝,是上帝让万物服从于基督的权力。)
28 ௨௮ அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
在万物服从于基督的权力之后,人子也要服从于上帝的权力。因为人子对万物的权力源自上帝,以此证明上帝的权力才是至高无上的。
29 ௨௯ மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
否则,为死人施洗又是为了什么?如果死人根本不会复活,为什么要为他们施洗?
30 ௩0 நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாக இருக்கிறோம்?
至于我们,我们又何必时时刻刻身处险境?
31 ௩௧ நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக் கொண்டு உண்மையாகச் சொல்லுகிறேன்.
兄弟姐妹们,让我直言不讳地告诉你们,我每天都冒着死亡的风险,但我将其视为一种自豪,为耶稣基督为你们所做的一切而感到自豪。
32 ௩௨ நான் எபேசுவிலே கொடிய மிருகங்களுடனே போராடினேனென்று மனிதர்கள் வழக்கமாகச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்கு பலன் என்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?
之前我曾在以弗所对抗那些人,他们对待我就如同一群野兽。如果从人类的角度来看,那对我又有何益处呢?如果死人不会复活,那么何不“大吃大喝吧,因为明天就要死去。”
33 ௩௩ மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
不要再被欺骗了,“坏朋友会破坏好品德。”
34 ௩௪ நீங்கள் பாவம் செய்யாமல் நீதியுள்ளவர்களாக வாழ்ந்து, தெளிந்தவர்களாக இருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவு இல்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
你们要保持理智,不要犯罪!你们中有的人不认识上帝,我这样说就是为了让你们羞愧。
35 ௩௫ ஆனாலும், மரித்தோர் எப்படி உயிரோடு எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்களென்று ஒருவன் கேட்பானானால்,
当然了,有人会问:“死人又如何复活呢?他们复活后又有着怎样的身体呢?”
36 ௩௬ புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே.
多么无知的问题!你种下的种子不会发芽生长,除非它们死了。
37 ௩௭ நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதைக்காமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
但你种下种子的时候,并非为了它最终长成的样子。你种下的只是一粒种子而已,也许是麦子或其他种子。
38 ௩௮ அதற்கு தேவன் தமது விருப்பத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
但上帝让这种子长成他所选择的形体,每一颗种子都长成不同形体的不同植物。
39 ௩௯ எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு.
用于创造所有生命体的物质也各有不同,人的躯体是一种,走兽、飞鸟和鱼是另外几种,每一种都不相同。
40 ௪0 வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு;
有的躯体为天空之躯,有的为大地之躯。天空之躯自有一种美,大地之躯则是另一种美。
41 ௪௧ சூரியனுடைய மகிமையும் வேறு, சந்திரனுடைய மகிமையும் வேறு, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறு, மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
太阳闪耀着一种光芒,月亮闪耀另一种光,星星也是各不相同,每一种都有自己光芒的方式。
42 ௪௨ மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்;
死人复活也是同样的道理。种下腐朽之躯,复活后即得永生;
43 ௪௩ மதிப்பில்லாததாக விதைக்கப்படும், மகிமையுள்ளதாக எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாக விதைக்கப்படும், பலமுள்ளதாக எழுந்திருக்கும்.
如果种下的是卑微,复活后就会成为荣耀;种下的是软弱,复活后就是力量;
44 ௪௪ சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு.
种下的是自然之躯,复活后就是灵性之躯。因为既有自然之躯,也有灵性之躯。
45 ௪௫ அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவர்.
正如经上如此记载:“亚当作为第一个人类,成为拥有生命的活人。但最后的亚当则变成了赋予人生命的灵。”
46 ௪௬ ஆனாலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, சாதாரண சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
但先来到这世界的并非是灵,而是自然之躯,灵随后来到。
47 ௪௭ முந்தின மனிதன் பூமியிலிருந்து உண்டான மண்ணானவன்; இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
第一个人来自大地的泥土,第二个人来自于天。
48 ௪௮ மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்திற்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்திற்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
来自于泥土的人类,都有着泥土造就人类的模样。来自于天的人类,都有着天造就的模样。
49 ௪௯ மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்.
我们都有着泥土人类的模样,未来也将拥有天造就的模样。
50 ௫0 சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை.
但我的兄弟姐妹们,我告诉你们的是,我们现在的躯体无法继承上帝之国,这些必将腐朽的躯体无法继承不朽。
51 ௫௧ இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லோரும் மரணமடைவதில்லை; ஆனாலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லோரும் மறுரூபமாக்கப்படுவோம்.
听着,我要告诉你们一个奥秘:我们中不是所有人都会死去,但我们都会改变。
52 ௫௨ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
在一剎那,在眨眼之间,在号角最后一次吹响之时。当号角吹响,死人就会复活成为不朽,我们将会改变。
53 ௫௩ அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும்.
这必将腐朽之躯会实现不朽,这必死生命会获得永生。
54 ௫௪ அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
在拥有了不朽之衣后,这必将腐朽之躯就永远不会消亡。这必死生命在获得永生后,就应验了经文所记:“死亡已被彻底征服和消灭。
55 ௫௫ மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs )
死亡啊!你的胜利到哪里去了?死亡啊!你的毒刺到哪里去了?” (Hadēs )
56 ௫௬ மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
死亡的毒刺就是罪,罪的力量就是律法。
57 ௫௭ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
感谢上帝,他通过主耶稣基督赐予我们胜利。
58 ௫௮ ஆகவே, எனக்குப் பிரியமான சகோதரர்களே, கர்த்தருக்குள் நீங்கள் செய்கிற முயற்சி வீணாக இருக்காதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாகவும், அசையாதவர்களாகவும், கர்த்தருடைய செயலிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாகவும் இருப்பீர்களாக.
所以我亲爱的兄弟姐妹们:要坚强,不可动摇,要尽你所能服务于主。要知道,你所做的一切,在主那里都不会付诸东流。