< 1 கொரிந்தியர் 14 >
1 ௧ அன்பை விரும்புங்கள்; ஆவியானவருக்குரிய வரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாகத் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.
ଯୂଯଂ ପ୍ରେମାଚରଣେ ପ୍ରଯତଧ୍ୱମ୍ ଆତ୍ମିକାନ୍ ଦାଯାନପି ୱିଶେଷତ ଈଶ୍ୱରୀଯାଦେଶକଥନସାମର୍ଥ୍ୟଂ ପ୍ରାପ୍ତୁଂ ଚେଷ୍ଟଧ୍ୱଂ|
2 ௨ ஏனென்றால், அந்நிய மொழியில் பேசுகிறவன், ஆவியானவராலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாமலிருக்கிறபடியினாலே, அவன் மனிதர்களிடம் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
ଯୋ ଜନଃ ପରଭାଷାଂ ଭାଷତେ ସ ମାନୁଷାନ୍ ନ ସମ୍ଭାଷତେ କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରମେୱ ଯତଃ କେନାପି କିମପି ନ ବୁଧ୍ୟତେ ସ ଚାତ୍ମନା ନିଗୂଢୱାକ୍ୟାନି କଥଯତି;
3 ௩ தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ மனிதர்களுக்கு பக்திவளர்ச்சியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
କିନ୍ତୁ ଯୋ ଜନ ଈଶ୍ୱରୀଯାଦେଶଂ କଥଯତି ସ ପରେଷାଂ ନିଷ୍ଠାଯୈ ହିତୋପଦେଶାଯ ସାନ୍ତ୍ୱନାଯୈ ଚ ଭାଷତେ|
4 ௪ அந்நிய மொழியில் பேசுகிறவன் தனக்கே பக்திவளர்ச்சி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவளர்ச்சி உண்டாகப்பேசுகிறான்.
ପରଭାଷାୱାଦ୍ୟାତ୍ମନ ଏୱ ନିଷ୍ଠାଂ ଜନଯତି କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରୀଯାଦେଶୱାଦୀ ସମିତେ ର୍ନିଷ୍ଠାଂ ଜନଯତି|
5 ௫ நீங்களெல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆனாலும், அந்நிய மொழிகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் அவனைவிட மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாக விரும்புகிறேன்.
ଯୁଷ୍ମାକଂ ସର୍ୱ୍ୱେଷାଂ ପରଭାଷାଭାଷଣମ୍ ଇଚ୍ଛାମ୍ୟହଂ କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରୀଯାଦେଶକଥନମ୍ ଅଧିକମପୀଚ୍ଛାମି| ଯତଃ ସମିତେ ର୍ନିଷ୍ଠାଯୈ ଯେନ ସ୍ୱୱାକ୍ୟାନାମ୍ ଅର୍ଥୋ ନ କ୍ରିଯତେ ତସ୍ମାତ୍ ପରଭାଷାୱାଦିତ ଈଶ୍ୱରୀଯାଦେଶୱାଦୀ ଶ୍ରେଯାନ୍|
6 ௬ மேலும், சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை சொல்லுகிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நிய மொழிகளில் பேசினால் என்னாலே உங்களுக்கு பலன் என்ன?
ହେ ଭ୍ରାତରଃ, ଇଦାନୀଂ ମଯା ଯଦି ଯୁଷ୍ମତ୍ସମୀପଂ ଗମ୍ୟତେ ତର୍ହୀଶ୍ୱରୀଯଦର୍ଶନସ୍ୟ ଜ୍ଞାନସ୍ୟ ୱେଶ୍ୱରୀଯାଦେଶସ୍ୟ ୱା ଶିକ୍ଷାଯା ୱା ୱାକ୍ୟାନି ନ ଭାଷିତ୍ୱା ପରଭାଷାଂ ଭାଷମାଣେନ ମଯା ଯୂଯଂ କିମୁପକାରିଷ୍ୟଧ୍ୱେ?
7 ௭ அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்களின் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் என்னவென்று எப்படித் தெரியும்?
ଅପରଂ ୱଂଶୀୱଲ୍ଲକ୍ୟାଦିଷୁ ନିଷ୍ପ୍ରାଣିଷୁ ୱାଦ୍ୟଯନ୍ତ୍ରେଷୁ ୱାଦିତେଷୁ ଯଦି କ୍କଣା ନ ୱିଶିଷ୍ୟନ୍ତେ ତର୍ହି କିଂ ୱାଦ୍ୟଂ କିଂ ୱା ଗାନଂ ଭୱତି ତତ୍ କେନ ବୋଦ୍ଧୁଂ ଶକ୍ୟତେ?
8 ௮ அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் போருக்கு ஆயத்தம் செய்வான்?
ଅପରଂ ରଣତୂର୍ୟ୍ୟା ନିସ୍ୱଣୋ ଯଦ୍ୟୱ୍ୟକ୍ତୋ ଭୱେତ୍ ତର୍ହି ଯୁଦ୍ଧାଯ କଃ ସଜ୍ଜିଷ୍ୟତେ?
9 ௯ அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சைப் பேசாவிட்டால் பேசப்பட்டது என்னவென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாக இருப்பீர்களே.
ତଦ୍ୱତ୍ ଜିହ୍ୱାଭି ର୍ୟଦି ସୁଗମ୍ୟା ୱାକ୍ ଯୁଷ୍ମାଭି ର୍ନ ଗଦ୍ୟେତ ତର୍ହି ଯଦ୍ ଗଦ୍ୟତେ ତତ୍ କେନ ଭୋତ୍ସ୍ୟତେ? ୱସ୍ତୁତୋ ଯୂଯଂ ଦିଗାଲାପିନ ଇୱ ଭୱିଷ୍ୟଥ|
10 ௧0 உலகத்திலே எத்தனையோவிதமான மொழிகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
ଜଗତି କତିପ୍ରକାରା ଉକ୍ତଯୋ ୱିଦ୍ୟନ୍ତେ? ତାସାମେକାପି ନିରର୍ଥିକା ନହି;
11 ௧௧ ஆனாலும், மொழியின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாக இருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாக இருப்பான்.
କିନ୍ତୂକ୍ତେରର୍ଥୋ ଯଦି ମଯା ନ ବୁଧ୍ୟତେ ତର୍ହ୍ୟହଂ ୱକ୍ତ୍ରା ମ୍ଲେଚ୍ଛ ଇୱ ମଂସ୍ୟେ ୱକ୍ତାପି ମଯା ମ୍ଲେଚ୍ଛ ଇୱ ମଂସ୍ୟତେ|
12 ௧௨ நீங்களும் ஆவியானவருக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி விரும்புங்கள்;
ତସ୍ମାଦ୍ ଆତ୍ମିକଦାଯଲିପ୍ସୱୋ ଯୂଯଂ ସମିତେ ର୍ନିଷ୍ଠାର୍ଥଂ ପ୍ରାପ୍ତବହୁୱରା ଭୱିତୁଂ ଯତଧ୍ୱଂ,
13 ௧௩ அந்தப்படி அந்நிய மொழியில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம் செய்யவேண்டும்.
ଅତଏୱ ପରଭାଷାୱାଦୀ ଯଦ୍ ଅର୍ଥକରୋଽପି ଭୱେତ୍ ତତ୍ ପ୍ରାର୍ଥଯତାଂ|
14 ௧௪ எதினாலென்றால், நான் அந்நிய மொழியிலே விண்ணப்பம் செய்தால் என் ஆவி விண்ணப்பம் செய்யுமேதவிர, என் கருத்து பயனில்லாததாக இருக்கும்.
ଯଦ୍ୟହଂ ପରଭାଷଯା ପ୍ରର୍ଥନାଂ କୁର୍ୟ୍ୟାଂ ତର୍ହି ମଦୀଯ ଆତ୍ମା ପ୍ରାର୍ଥଯତେ, କିନ୍ତୁ ମମ ବୁଦ୍ଧି ର୍ନିଷ୍ଫଲା ତିଷ୍ଠତି|
15 ௧௫ இப்படியிருக்க, செய்யவேண்டியதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் செய்வேன்; கருத்தோடும் விண்ணப்பம் செய்வேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
ଇତ୍ୟନେନ କିଂ କରଣୀଯଂ? ଅହମ୍ ଆତ୍ମନା ପ୍ରାର୍ଥଯିଷ୍ୟେ ବୁଦ୍ଧ୍ୟାପି ପ୍ରାର୍ଥଯିଷ୍ୟେ; ଅପରଂ ଆତ୍ମନା ଗାସ୍ୟାମି ବୁଦ୍ଧ୍ୟାପି ଗାସ୍ୟାମି|
16 ௧௬ இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் செய்யும்போது, படிப்பறியாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது என்னவென்று அவனுக்குத் தெரியாதே.
ତ୍ୱଂ ଯଦାତ୍ମନା ଧନ୍ୟୱାଦଂ କରୋଷି ତଦା ଯଦ୍ ୱଦସି ତଦ୍ ଯଦି ଶିଷ୍ୟେନେୱୋପସ୍ଥିତେନ ଜନେନ ନ ବୁଦ୍ଧ୍ୟତେ ତର୍ହି ତୱ ଧନ୍ୟୱାଦସ୍ୟାନ୍ତେ ତଥାସ୍ତ୍ୱିତି ତେନ ୱକ୍ତଂ କଥଂ ଶକ୍ୟତେ?
17 ௧௭ நீ நன்றாக ஸ்தோத்திரம் செய்கிறாய், ஆனாலும் மற்றவன் பக்திவளர்ச்சியடையமாட்டானே.
ତ୍ୱଂ ସମ୍ୟଗ୍ ଈଶ୍ୱରଂ ଧନ୍ୟଂ ୱଦସୀତି ସତ୍ୟଂ ତଥାପି ତତ୍ର ପରସ୍ୟ ନିଷ୍ଠା ନ ଭୱତି|
18 ௧௮ உங்களெல்லோரையும்விட நான் அதிகமான மொழிகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ଯୁଷ୍ମାକଂ ସର୍ୱ୍ୱେଭ୍ୟୋଽହଂ ପରଭାଷାଭାଷଣେ ସମର୍ଥୋଽସ୍ମୀତି କାରଣାଦ୍ ଈଶ୍ୱରଂ ଧନ୍ୟଂ ୱଦାମି;
19 ௧௯ அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாக இருக்கும்.
ତଥାପି ସମିତୌ ପରୋପଦେଶାର୍ଥଂ ମଯା କଥିତାନି ପଞ୍ଚ ୱାକ୍ୟାନି ୱରଂ ନ ଚ ଲକ୍ଷଂ ପରଭାଷୀଯାନି ୱାକ୍ୟାନି|
20 ௨0 சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள்.
ହେ ଭ୍ରାତରଃ, ଯୂଯଂ ବୁଦ୍ଧ୍ୟା ବାଲକାଇୱ ମା ଭୂତ ପରନ୍ତୁ ଦୁଷ୍ଟତଯା ଶିଶୱଇୱ ଭୂତ୍ୱା ବୁଦ୍ଧ୍ୟା ସିଦ୍ଧା ଭୱତ|
21 ௨௧ மறுமொழிக்காரர்களாலும், மறு உதடுகளாலும் இந்த மக்களிடத்தில் பேசுவேன்; ஆனாலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.
ଶାସ୍ତ୍ର ଇଦଂ ଲିଖିତମାସ୍ତେ, ଯଥା, ଇତ୍ୟୱୋଚତ୍ ପରେଶୋଽହମ୍ ଆଭାଷିଷ୍ୟ ଇମାନ୍ ଜନାନ୍| ଭାଷାଭିଃ ପରକୀଯାଭି ର୍ୱକ୍ତ୍ରୈଶ୍ଚ ପରଦେଶିଭିଃ| ତଥା ମଯା କୃତେଽପୀମେ ନ ଗ୍ରହୀଷ୍ୟନ୍ତି ମଦ୍ୱଚଃ||
22 ௨௨ அப்படியிருக்க, அந்நியமொழிகள் விசுவாசிகளுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது; தீர்க்கதரிசனமோ விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது.
ଅତଏୱ ତତ୍ ପରଭାଷାଭାଷଣଂ ଅୱିଶ୍ଚାସିନଃ ପ୍ରତି ଚିହ୍ନରୂପଂ ଭୱତି ନ ଚ ୱିଶ୍ୱାସିନଃ ପ୍ରତି; କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରୀଯାଦେଶକଥନଂ ନାୱିଶ୍ୱାସିନଃ ପ୍ରତି ତଦ୍ ୱିଶ୍ୱାସିନଃ ପ୍ରତ୍ୟେୱ|
23 ௨௩ ஆகவே, சபையார் எல்லோரும் ஏகமாகக் கூடிவந்து, எல்லோரும் அந்நிய மொழிகளிலே பேசிக்கொள்ளும்போது, படிப்பறியாதவர்களாவது, விசுவாசம் இல்லாதவர்களாவது உள்ளே நுழைந்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்களல்லவா?
ସମିତିଭୁକ୍ତେଷୁ ସର୍ୱ୍ୱେଷୁ ଏକସ୍ମିନ୍ ସ୍ଥାନେ ମିଲିତ୍ୱା ପରଭାଷାଂ ଭାଷମାଣେଷୁ ଯଦି ଜ୍ଞାନାକାଙ୍କ୍ଷିଣୋଽୱିଶ୍ୱାସିନୋ ୱା ତତ୍ରାଗଚ୍ଛେଯୁସ୍ତର୍ହି ଯୁଷ୍ମାନ୍ ଉନ୍ମତ୍ତାନ୍ କିଂ ନ ୱଦିଷ୍ୟନ୍ତି?
24 ௨௪ எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான்.
କିନ୍ତୁ ସର୍ୱ୍ୱେଷ୍ୱୀଶ୍ୱରୀଯାଦେଶଂ ପ୍ରକାଶଯତ୍ସୁ ଯଦ୍ୟୱିଶ୍ୱାସୀ ଜ୍ଞାନାକାଙ୍କ୍ଷୀ ୱା କଶ୍ଚିତ୍ ତତ୍ରାଗଚ୍ଛତି ତର୍ହି ସର୍ୱ୍ୱୈରେୱ ତସ୍ୟ ପାପଜ୍ଞାନଂ ପରୀକ୍ଷା ଚ ଜାଯତେ,
25 ௨௫ அவனுடைய இருதயத்தின் இரகசியங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புறவிழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாக உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று அறிக்கையிடுவான்.
ତତସ୍ତସ୍ୟାନ୍ତଃକରଣସ୍ୟ ଗୁପ୍ତକଲ୍ପନାସୁ ୱ୍ୟକ୍ତୀଭୂତାସୁ ସୋଽଧୋମୁଖଃ ପତନ୍ ଈଶ୍ୱରମାରାଧ୍ୟ ଯୁଷ୍ମନ୍ମଧ୍ୟ ଈଶ୍ୱରୋ ୱିଦ୍ୟତେ ଇତି ସତ୍ୟଂ କଥାମେତାଂ କଥଯିଷ୍ୟତି|
26 ௨௬ நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நிய மொழியைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் விளக்கம் சொல்லுகிறான். சகோதரர்களே, இது என்ன? அனைத்தும் பக்திவளர்ச்சிக்கேதுவாகச் செய்யப்படவேண்டும்.
ହେ ଭ୍ରାତରଃ, ସମ୍ମିଲିତାନାଂ ଯୁଷ୍ମାକମ୍ ଏକେନ ଗୀତମ୍ ଅନ୍ୟେନୋପଦେଶୋଽନ୍ୟେନ ପରଭାଷାନ୍ୟେନ ଐଶ୍ୱରିକଦର୍ଶନମ୍ ଅନ୍ୟେନାର୍ଥବୋଧକଂ ୱାକ୍ୟଂ ଲଭ୍ୟତେ କିମେତତ୍? ସର୍ୱ୍ୱମେୱ ପରନିଷ୍ଠାର୍ଥଂ ଯୁଷ୍ମାଭିଃ କ୍ରିଯତାଂ|
27 ௨௭ யாராவது அந்நிய மொழியிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டும் அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டும் பேசவும், அவர்கள் ஒவ்வொருவராகப் பேசவும், இன்னொருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
ଯଦି କଶ୍ଚିଦ୍ ଭାଷାନ୍ତରଂ ୱିୱକ୍ଷତି ତର୍ହ୍ୟେକସ୍ମିନ୍ ଦିନେ ଦ୍ୱିଜନେନ ତ୍ରିଜନେନ ୱା ପରଭାଷା କଥ୍ୟତାଂ ତଦଧିକୈର୍ନ କଥ୍ୟତାଂ ତୈରପି ପର୍ୟ୍ୟାଯାନୁସାରାତ୍ କଥ୍ୟତାଂ, ଏକେନ ଚ ତଦର୍ଥୋ ବୋଧ୍ୟତାଂ|
28 ௨௮ அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப்பேசவேண்டும்.
କିନ୍ତ୍ୱର୍ଥାଭିଧାଯକଃ କୋଽପି ଯଦି ନ ୱିଦ୍ୟତେ ତର୍ହି ସ ସମିତୌ ୱାଚଂଯମଃ ସ୍ଥିତ୍ୱେଶ୍ୱରାଯାତ୍ମନେ ଚ କଥାଂ କଥଯତୁ|
29 ௨௯ தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கவேண்டும்.
ଅପରଂ ଦ୍ୱୌ ତ୍ରଯୋ ୱେଶ୍ୱରୀଯାଦେଶୱକ୍ତାରଃ ସ୍ୱଂ ସ୍ୱମାଦେଶଂ କଥଯନ୍ତୁ ତଦନ୍ୟେ ଚ ତଂ ୱିଚାରଯନ୍ତୁ|
30 ௩0 அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாவது வெளிப்படுத்தப்பட்டால், முதலில் பேசினவன் பேசாமலிருக்கவேண்டும்.
କିନ୍ତୁ ତତ୍ରାପରେଣ କେନଚିତ୍ ଜନେନେଶ୍ୱରୀଯାଦେଶେ ଲବ୍ଧେ ପ୍ରଥମେନ କଥନାତ୍ ନିୱର୍ତ୍ତିତୱ୍ୟଂ|
31 ௩௧ எல்லோரும் கற்கிறதற்கும் எல்லோரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனம் சொல்லலாம்.
ସର୍ୱ୍ୱେ ଯତ୍ ଶିକ୍ଷାଂ ସାନ୍ତ୍ୱନାଞ୍ଚ ଲଭନ୍ତେ ତଦର୍ଥଂ ଯୂଯଂ ସର୍ୱ୍ୱେ ପର୍ୟ୍ୟାଯେଣେଶ୍ୱରୀଯାଦେଶଂ କଥଯିତୁଂ ଶକ୍ନୁଥ|
32 ௩௨ தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே.
ଈଶ୍ୱରୀଯାଦେଶୱକ୍ତୃଣାଂ ମନାଂସି ତେଷାମ୍ ଅଧୀନାନି ଭୱନ୍ତି|
33 ௩௩ தேவன் கலகத்திற்கு தேவனாக இல்லாமல், சமாதானத்திற்கு தேவனாக இருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.
ଯତ ଈଶ୍ୱରଃ କୁଶାସନଜନକୋ ନହି ସୁଶାସନଜନକ ଏୱେତି ପୱିତ୍ରଲୋକାନାଂ ସର୍ୱ୍ୱସମିତିଷୁ ପ୍ରକାଶତେ|
34 ௩௪ சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
ଅପରଞ୍ଚ ଯୁଷ୍ମାକଂ ୱନିତାଃ ସମିତିଷୁ ତୂଷ୍ଣୀମ୍ଭୂତାସ୍ତିଷ୍ଠନ୍ତୁ ଯତଃ ଶାସ୍ତ୍ରଲିଖିତେନ ୱିଧିନା ତାଃ କଥାପ୍ରଚାରଣାତ୍ ନିୱାରିତାସ୍ତାଭି ର୍ନିଘ୍ରାଭି ର୍ଭୱିତୱ୍ୟଂ|
35 ௩௫ அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே.
ଅତସ୍ତା ଯଦି କିମପି ଜିଜ୍ଞାସନ୍ତେ ତର୍ହି ଗେହେଷୁ ପତୀନ୍ ପୃଚ୍ଛନ୍ତୁ ଯତଃ ସମିତିମଧ୍ୟେ ଯୋଷିତାଂ କଥାକଥନଂ ନିନ୍ଦନୀଯଂ|
36 ௩௬ தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது?
ଐଶ୍ୱରଂ ୱଚଃ କିଂ ଯୁଷ୍ମତ୍ତୋ ନିରଗମତ? କେୱଲଂ ଯୁଷ୍ମାନ୍ ୱା ତତ୍ କିମ୍ ଉପାଗତଂ?
37 ௩௭ ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது நினைத்தால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கட்டளைகளென்று அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ଯଃ କଶ୍ଚିଦ୍ ଆତ୍ମାନମ୍ ଈଶ୍ୱରୀଯାଦେଶୱକ୍ତାରମ୍ ଆତ୍ମନାୱିଷ୍ଟଂ ୱା ମନ୍ୟତେ ସ ଯୁଷ୍ମାନ୍ ପ୍ରତି ମଯା ଯଦ୍ ଯତ୍ ଲିଖ୍ୟତେ ତତ୍ପ୍ରଭୁନାଜ୍ଞାପିତମ୍ ଈତ୍ୟୁରରୀ କରୋତୁ|
38 ௩௮ ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும்.
କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିତ୍ ଅଜ୍ଞୋ ଭୱତି ସୋଽଜ୍ଞ ଏୱ ତିଷ୍ଠତୁ|
39 ௩௯ இப்படியிருக்க, சகோதரர்களே, தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள், அந்நிய மொழிகளைப் பேசுகிறதற்கும் தடைசெய்யாமலிருங்கள்.
ଅତଏୱ ହେ ଭ୍ରାତରଃ, ଯୂଯମ୍ ଈଶ୍ୱରୀଯାଦେଶକଥନସାମର୍ଥ୍ୟଂ ଲବ୍ଧୁଂ ଯତଧ୍ୱଂ ପରଭାଷାଭାଷଣମପି ଯୁଷ୍ମାଭି ର୍ନ ନିୱାର୍ୟ୍ୟତାଂ|
40 ௪0 அனைத்து காரியங்களும் நல்லொழுக்கமாகவும், முறையாகவும் செய்யப்படவேண்டும்.
ସର୍ୱ୍ୱକର୍ମ୍ମାଣି ଚ ୱିଧ୍ୟନୁସାରତଃ ସୁପରିପାଟ୍ୟା କ୍ରିଯନ୍ତାଂ|