< 1 கொரிந்தியர் 13 >
1 ௧ நான் மனிதர்களுடைய மொழிகளையும் தூதர்களுடைய மொழிகளையும் பேசினாலும், எனக்கு அன்பு இல்லையென்றால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
మర్త్యస్వర్గీయాణాం భాషా భాషమాణోఽహం యది ప్రేమహీనో భవేయం తర్హి వాదకతాలస్వరూపో నినాదకారిభేరీస్వరూపశ్చ భవామి|
2 ௨ நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாக இருந்து, எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாக விசுவாசமும் உள்ளவனாக இருந்தாலும், அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை.
అపరఞ్చ యద్యహమ్ ఈశ్వరీయాదేశాఢ్యః స్యాం సర్వ్వాణి గుప్తవాక్యాని సర్వ్వవిద్యాఞ్చ జానీయాం పూర్ణవిశ్వాసః సన్ శైలాన్ స్థానాన్తరీకర్త్తుం శక్నుయాఞ్చ కిన్తు యది ప్రేమహీనో భవేయం తర్హ్యగణనీయ ఏవ భవామి|
3 ௩ எனக்கு உண்டான எல்லாவற்றையும் நான் அன்னதானம் செய்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லையென்றால் எனக்கு பயன் ஒன்றுமில்லை.
అపరం యద్యహమ్ అన్నదానేన సర్వ్వస్వం త్యజేయం దాహనాయ స్వశరీరం సమర్పయేయఞ్చ కిన్తు యది ప్రేమహీనో భవేయం తర్హి తత్సర్వ్వం మదర్థం నిష్ఫలం భవతి|
4 ௪ அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது,
ప్రేమ చిరసహిష్ణు హితైషి చ, ప్రేమ నిర్ద్వేషమ్ అశఠం నిర్గర్వ్వఞ్చ|
5 ௫ அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது,
అపరం తత్ కుత్సితం నాచరతి, ఆత్మచేష్టాం న కురుతే సహసా న క్రుధ్యతి పరానిష్టం న చిన్తయతి,
6 ௬ அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
అధర్మ్మే న తుష్యతి సత్య ఏవ సన్తుష్యతి|
7 ௭ எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும்.
తత్ సర్వ్వం తితిక్షతే సర్వ్వత్ర విశ్వసితి సర్వ్వత్ర భద్రం ప్రతీక్షతే సర్వ్వం సహతే చ|
8 ௮ அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும்.
ప్రేమ్నో లోపః కదాపి న భవిష్యతి, ఈశ్వరీయాదేశకథనం లోప్స్యతే పరభాషాభాషణం నివర్త్తిష్యతే జ్ఞానమపి లోపం యాస్యతి|
9 ௯ நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது.
యతోఽస్మాకం జ్ఞానం ఖణ్డమాత్రమ్ ఈశ్వరీయాదేశకథనమపి ఖణ్డమాత్రం|
10 ௧0 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்.
కిన్త్వస్మాసు సిద్ధతాం గతేషు తాని ఖణ్డమాత్రాణి లోపం యాస్యన్తే|
11 ௧௧ நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன்.
బాల్యకాలేఽహం బాల ఇవాభాషే బాల ఇవాచిన్తయఞ్చ కిన్తు యౌవనే జాతే తత్సర్వ్వం బాల్యాచరణం పరిత్యక్తవాన్|
12 ௧௨ இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
ఇదానీమ్ అభ్రమధ్యేనాస్పష్టం దర్శనమ్ అస్మాభి ర్లభ్యతే కిన్తు తదా సాక్షాత్ దర్శనం లప్స్యతే| అధునా మమ జ్ఞానమ్ అల్పిష్ఠం కిన్తు తదాహం యథావగమ్యస్తథైవావగతో భవిష్యామి|
13 ௧௩ இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
ఇదానీం ప్రత్యయః ప్రత్యాశా ప్రేమ చ త్రీణ్యేతాని తిష్ఠన్తి తేషాం మధ్యే చ ప్రేమ శ్రేష్ఠం|