< 1 கொரிந்தியர் 13 >

1 நான் மனிதர்களுடைய மொழிகளையும் தூதர்களுடைய மொழிகளையும் பேசினாலும், எனக்கு அன்பு இல்லையென்றால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
মর্ত্যস্ৱর্গীযাণাং ভাষা ভাষমাণোঽহং যদি প্রেমহীনো ভৱেযং তর্হি ৱাদকতালস্ৱরূপো নিনাদকারিভেরীস্ৱরূপশ্চ ভৱামি|
2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாக இருந்து, எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாக விசுவாசமும் உள்ளவனாக இருந்தாலும், அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை.
অপরঞ্চ যদ্যহম্ ঈশ্ৱরীযাদেশাঢ্যঃ স্যাং সর্ৱ্ৱাণি গুপ্তৱাক্যানি সর্ৱ্ৱৱিদ্যাঞ্চ জানীযাং পূর্ণৱিশ্ৱাসঃ সন্ শৈলান্ স্থানান্তরীকর্ত্তুং শক্নুযাঞ্চ কিন্তু যদি প্রেমহীনো ভৱেযং তর্হ্যগণনীয এৱ ভৱামি|
3 எனக்கு உண்டான எல்லாவற்றையும் நான் அன்னதானம் செய்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லையென்றால் எனக்கு பயன் ஒன்றுமில்லை.
অপরং যদ্যহম্ অন্নদানেন সর্ৱ্ৱস্ৱং ত্যজেযং দাহনায স্ৱশরীরং সমর্পযেযঞ্চ কিন্তু যদি প্রেমহীনো ভৱেযং তর্হি তৎসর্ৱ্ৱং মদর্থং নিষ্ফলং ভৱতি|
4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது,
প্রেম চিরসহিষ্ণু হিতৈষি চ, প্রেম নির্দ্ৱেষম্ অশঠং নির্গর্ৱ্ৱঞ্চ|
5 அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது,
অপরং তৎ কুৎসিতং নাচরতি, আত্মচেষ্টাং ন কুরুতে সহসা ন ক্রুধ্যতি পরানিষ্টং ন চিন্তযতি,
6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
অধর্ম্মে ন তুষ্যতি সত্য এৱ সন্তুষ্যতি|
7 எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும்.
তৎ সর্ৱ্ৱং তিতিক্ষতে সর্ৱ্ৱত্র ৱিশ্ৱসিতি সর্ৱ্ৱত্র ভদ্রং প্রতীক্ষতে সর্ৱ্ৱং সহতে চ|
8 அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும்.
প্রেম্নো লোপঃ কদাপি ন ভৱিষ্যতি, ঈশ্ৱরীযাদেশকথনং লোপ্স্যতে পরভাষাভাষণং নিৱর্ত্তিষ্যতে জ্ঞানমপি লোপং যাস্যতি|
9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது.
যতোঽস্মাকং জ্ঞানং খণ্ডমাত্রম্ ঈশ্ৱরীযাদেশকথনমপি খণ্ডমাত্রং|
10 ௧0 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்.
১০কিন্ত্ৱস্মাসু সিদ্ধতাং গতেষু তানি খণ্ডমাত্রাণি লোপং যাস্যন্তে|
11 ௧௧ நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன்.
১১বাল্যকালেঽহং বাল ইৱাভাষে বাল ইৱাচিন্তযঞ্চ কিন্তু যৌৱনে জাতে তৎসর্ৱ্ৱং বাল্যাচরণং পরিত্যক্তৱান্|
12 ௧௨ இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
১২ইদানীম্ অভ্রমধ্যেনাস্পষ্টং দর্শনম্ অস্মাভি র্লভ্যতে কিন্তু তদা সাক্ষাৎ দর্শনং লপ্স্যতে| অধুনা মম জ্ঞানম্ অল্পিষ্ঠং কিন্তু তদাহং যথাৱগম্যস্তথৈৱাৱগতো ভৱিষ্যামি|
13 ௧௩ இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
১৩ইদানীং প্রত্যযঃ প্রত্যাশা প্রেম চ ত্রীণ্যেতানি তিষ্ঠন্তি তেষাং মধ্যে চ প্রেম শ্রেষ্ঠং|

< 1 கொரிந்தியர் 13 >