< 1 கொரிந்தியர் 12 >

1 அன்றியும், சகோதரர்களே, ஆவியானவருக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாமலிருக்க எனக்கு மனதில்லை.
兄們,至論神恩的事,我切願你們明瞭。
2 நீங்கள் தேவனை அறியாதவர்களாக இருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே.
你們記得:當你們還是外教人的時候,好像著了迷,常被勾引到那不會出聲的偶像前。
3 ஆதலால், தேவனுடைய ஆவியானவராலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவன் என்று சொல்லமாட்டான் என்றும், பரிசுத்த ஆவியானவரைத்தவிர வேறு ஒருவனும் இயேசுவைக் கர்த்தரென்று சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
為此,我告訴你們,沒有一個受天主聖神感動的會說:「耶穌是可詛咒的;」除非受聖神感動的,也沒有一個能說:「耶穌是主。」
4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
神恩雖有區別,郤是同一聖神所賜;
5 ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
職份雖有區別,郤是同一的主所賜;
6 கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லோருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
功效雖有區別,郤是同一的天主,在一切人身上行一切事。
7 ஒவ்வொருவனுக்கும் அருளப்பட்ட ஆவியானவரின் வரங்கள் அனைவருடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
顯示在每人身上雖不同,但全是為人的好處。
8 எப்படியென்றால், ஒருவனுக்கு ஆவியானவராலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
這人從聖神遯受了智慧的言語,另一人郤由同一聖神蒙受了知識的言語;
9 வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே குணமாக்கும் வரங்களும்,
有人在同一聖神內蒙受了信心,另有人在同一聖神內郤蒙受了治病的奇恩;
10 ௧0 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது.
有的能行奇蹟,有的能說先知話,有的能辨別神恩,有的能說各種語言,有的能解釋語言,
11 ௧௧ இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது விருப்பத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.
可是這一切都是這惟一而同一的聖神所行的,隨祂的心願,個別分配與人。
12 ௧௨ எப்படியென்றால், சரீரம் ஒன்று, அதற்கு உறுப்புகள் அநேகம்; ஒரே சரீரத்தின் உறுப்புகளெல்லாம் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
就如身體只是一個,郤有許多肢體;身體所有的肢體雖多,仍是一個身體:基督也是這樣。
13 ௧௩ நாம் யூதர்களானாலும், கிரேக்கர்களானாலும், அடிமைகளானாலும், சுயாதீனர்களானாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவியானவருக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம்.
因為我們眾人,不論是猶太人,或是希臘人,或是為奴的,或是自主的,都因一個聖神受了洗,成為一個身體,又都為一個所滋潤。
14 ௧௪ சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது.
原來身體不只有一個肢體,而是有許多
15 ௧௫ காலானது நான் கையாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ?
如果腳說:「我既然不是手,便不屬於身體;」它並不因此不屬於身體。
16 ௧௬ காதானது நான் கண்ணாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ?
如果耳說:「我既不是眼,便不屬於身體;」它並不因此不屬於身體。
17 ௧௭ சரீரம் முழுவதும் கண்ணாக இருந்தால், கேட்கும் திறன் எங்கே? அது முழுவதும் காதாக இருந்தால், மோப்பம் செய்யும் திறன் எங்கே?
若全身是眼,哪裡有聽覺?若全身是聽覺,哪裡有嗅覺?
18 ௧௮ தேவன் தமது விருப்பத்தின்படி உறுப்புகள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
但如今天主天主郤按自己的意思,把肉體個個都安排在身體上了。
19 ௧௯ அவையெல்லாம் ஒரே உறுப்பாக இருந்தால், சரீரம் எங்கே?
假使全身都是一個肢體哪裡還算身體呢?
20 ௨0 உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே.
但如今肢體雖多,身體卻是一個。
21 ௨௧ கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு தேவையில்லையென்றும்; தலையானது கால்களைப் பார்த்து: நீங்கள் எனக்குத் தேவையில்லையென்றும் சொல்லமுடியாது.
眼不能對手說:「我不需要你;」同樣頭也不能對腳說:「我不需要你們。」
22 ௨௨ சரீர உறுப்புகளில் பலவீனமுள்ளவைகளாகக் காணப்படுகிறவைகளே மிகவும் தேவையானவைகளாக இருக்கிறது.
不但如此,而且那些似乎是身體上比較軟弱的肢體,卻更為重要,
23 ௨௩ மேலும், சரீர உறுப்புகளில் கனவீனமாகக் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
並且那些我們以為是身體上比較欠尊責的肢體,我們就越發加上尊責的裝飾,我們不端雅的肢體,就越發顯得端雅
24 ௨௪ நம்மில் இலட்சணமானவைகளுக்கு அலங்கரிப்பு தேவையில்லை.
至於我們端雅的肢體,就無需裝飾了。天主這樣配置了身體,對那欠缺的,賜以加倍的尊責,
25 ௨௫ சரீரத்திலே பிரிவினை உண்டாகாமல், உறுப்புகள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாக இருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
免得在身體內發生分裂,反使各肢體彼此互相關照。
26 ௨௬ ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும்.
若是一個肢體受苦,所的肢體一同受苦,若是一個肢體蒙受尊榮,所有的肢體都一同歡樂樂。
27 ௨௭ நீங்களே கிறிஸ்துவின் சரீரமாகவும், தனித்தனியே உறுப்புகளாகவும் இருக்கிறீர்கள்.
你們便是基督的身體,各自都是肢體。
28 ௨௮ தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், உதவி செய்யும் ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித அந்நிய மொழிகளையும் ஏற்படுத்தினார்.
天主在教會內所設立的:第一是宗徒,第二是先知,其次是行異能的,再其次是有治病奇恩、救助人的、治理人的、說各種語言的。
29 ௨௯ எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் தீர்க்கதரிசிகளா? எல்லோரும் போதகர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?
眾人豈能都作宗徒?豈能都做教師?豈能都行異能?
30 ௩0 எல்லோரும் குணமாக்கும் வரங்களை உடையவர்களா? எல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் வியாக்கியானம் செய்கிறார்களா?
豈能都有治病的奇恩?豈能都說各種語言?豈能都解釋語言?
31 ௩௧ இப்படியிருக்க, முக்கியமான வரங்களை விரும்புங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
你們該追永那更大的恩賜。我現在把一條更超的道路指給你們。

< 1 கொரிந்தியர் 12 >