< 1 கொரிந்தியர் 10 >
1 ௧ இப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்திற்குக் கீழே இருந்தார்கள், எல்லோரும், கடலின்வழியாக நடந்துவந்தார்கள்.
ஹே ப்⁴ராதர: , அஸ்மத்பித்ரு’புருஷாநதி⁴ யூயம்’ யத³ஜ்ஞாதா ந திஷ்ட²தேதி மம வாஞ்சா², தே ஸர்வ்வே மேகா⁴த⁴: ஸ்தி²தா ப³பூ⁴வு: ஸர்வ்வே ஸமுத்³ரமத்⁴யேந வவ்ரஜு: ,
2 ௨ எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் கடலினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ஸர்வ்வே மூஸாமுத்³தி³ஸ்²ய மேக⁴ஸமுத்³ரயோ ர்மஜ்ஜிதா ப³பூ⁴வு:
3 ௩ எல்லோரும் ஒரே ஆவிக்குரிய ஆகாரத்தைச் சாப்பிட்டார்கள்.
ஸர்வ்வ ஏகம் ஆத்மிகம்’ ப⁴க்ஷ்யம்’ பு³பு⁴ஜிர ஏகம் ஆத்மிகம்’ பேயம்’ பபுஸ்²ச
4 ௪ எல்லோரும் ஒரே ஆவிக்குரிய தண்ணீரைக் குடித்தார்கள். எப்படியென்றால், அவர்களோடுகூடச்சென்ற ஆவிக்குரிய கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
யதஸ்தே(அ)நுசரத ஆத்மிகாத்³ அசலாத் லப்³த⁴ம்’ தோயம்’ பபு: ஸோ(அ)சல: க்²ரீஷ்டஏவ|
5 ௫ அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானவர்களிடத்தில் தேவன் பிரியமாக இருக்கவில்லை; ஆகவே வனாந்திரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
ததா² ஸத்யபி தேஷாம்’ மத்⁴யே(அ)தி⁴கேஷு லோகேஷ்வீஸ்²வரோ ந ஸந்துதோஷேதி ஹேதோஸ்தே ப்ரந்தரே நிபாதிதா: |
6 ௬ அவர்கள் இச்சித்ததுபோல நாமும் தீங்கானவைகளை இச்சிக்காதபடிக்கு, இவைகள் நமக்கு அடையாளமாக இருக்கிறது.
ஏதஸ்மிந் தே (அ)ஸ்மாகம்’ நித³ர்ஸ²நஸ்வரூபா ப³பூ⁴வு: ; அதஸ்தே யதா² குத்ஸிதாபி⁴லாஷிணோ ப³பூ⁴வுரஸ்மாபி⁴ஸ்ததா² குத்ஸிதாபி⁴லாஷிபி⁴ ர்ந ப⁴விதவ்யம்’|
7 ௭ மக்கள் உட்கார்ந்து உண்ணவும், குடிக்கவும், வேசித்தன எண்ணத்தோடு விளையாடவும் எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரக ஆராதனைக்காரர்களானதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.
லிகி²தமாஸ்தே, லோகா போ⁴க்தும்’ பாதுஞ்சோபவிவிஸு²ஸ்தத: க்ரீடி³துமுத்தி²தா இதயநேந ப்ரகாரேண தேஷாம்’ கைஸ்²சித்³ யத்³வத்³ தே³வபூஜா க்ரு’தா யுஷ்மாபி⁴ஸ்தத்³வத் ந க்ரியதாம்’|
8 ௮ அவர்களில் சிலர் வேசித்தனம்செய்து, ஒரேநாளில் இருபத்து மூவாயிரம்பேர் இறந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்செய்யாதிருப்போமாக.
அபரம்’ தேஷாம்’ கைஸ்²சித்³ யத்³வத்³ வ்யபி⁴சார: க்ரு’தஸ்தேந சைகஸ்மிந் தி³நே த்ரயோவிம்’ஸ²திஸஹஸ்ராணி லோகா நிபாதிதாஸ்தத்³வத்³ அஸ்மாபி⁴ ர்வ்யபி⁴சாரோ ந கர்த்தவ்ய: |
9 ௯ அவர்களில் சிலர் கர்த்த்தரைச் சோதித்துப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைச் சோதித்துப்பார்க்காமலிருப்போமாக.
தேஷாம்’ கேசித்³ யத்³வத் க்²ரீஷ்டம்’ பரீக்ஷிதவந்தஸ்தஸ்மாத்³ பு⁴ஜங்கை³ ர்நஷ்டாஸ்²ச தத்³வத்³ அஸ்மாபி⁴: க்²ரீஷ்டோ ந பரீக்ஷிதவ்ய: |
10 ௧0 அவர்களில் சிலர் முறுமுறுத்து, மரண தூதனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காமலிருங்கள்.
தேஷாம்’ கேசித்³ யதா² வாக்கலஹம்’ க்ரு’தவந்தஸ்தத்காரணாத் ஹந்த்ரா விநாஸி²தாஸ்²ச யுஷ்மாபி⁴ஸ்தத்³வத்³ வாக்கலஹோ ந க்ரியதாம்’|
11 ௧௧ இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn )
தாந் ப்ரதி யாந்யேதாநி ஜக⁴டிரே தாந்யஸ்மாகம்’ நித³ர்ஸ²நாநி ஜக³த: ஸே²ஷயுகே³ வர்த்தமாநாநாம் அஸ்மாகம்’ ஸி²க்ஷார்த²ம்’ லிகி²தாநி ச ப³பூ⁴வு: | (aiōn )
12 ௧௨ இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று நினைக்கிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அதஏவ ய: கஸ்²சித்³ ஸுஸ்தி²ரம்’மந்ய: ஸ யந்ந பதேத் தத்ர ஸாவதா⁴நோ ப⁴வது|
13 ௧௩ மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார்.
மாநுஷிகபரீக்ஷாதிரிக்தா காபி பரீக்ஷா யுஷ்மாந் நாக்ராமத், ஈஸ்²வரஸ்²ச விஸ்²வாஸ்ய: ஸோ(அ)திஸ²க்த்யாம்’ பரீக்ஷாயாம்’ பதநாத் யுஷ்மாந் ரக்ஷிஷ்யதி, பரீக்ஷா ச யத்³ யுஷ்மாபி⁴: ஸோடு⁴ம்’ ஸ²க்யதே தத³ர்த²ம்’ தயா ஸஹ நிஸ்தாரஸ்ய பந்தா²நம்’ நிரூபயிஷ்யதி|
14 ௧௪ ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடுங்கள்.
ஹே ப்ரியப்⁴ராதர: , தே³வபூஜாதோ தூ³ரம் அபஸரத|
15 ௧௫ உங்களைப் புத்திமான்களென்று நினைத்துப்பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
அஹம்’ யுஷ்மாந் விஜ்ஞாந் மத்வா ப்ரபா⁴ஷே மயா யத் கத்²யதே தத்³ யுஷ்மாபி⁴ ர்விவிச்யதாம்’|
16 ௧௬ நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா?
யத்³ த⁴ந்யவாத³பாத்ரம் அஸ்மாபி⁴ ர்த⁴ந்யம்’ க³த்³யதே தத் கிம்’ க்²ரீஷ்டஸ்ய ஸோ²ணிதஸ்ய ஸஹபா⁴கி³த்வம்’ நஹி? யஸ்²ச பூபோ(அ)ஸ்மாபி⁴ ர்ப⁴ஜ்யதே ஸ கிம்’ க்²ரீஷ்டஸ்ய வபுஷ: ஸஹபா⁴கி³த்வம்’ நஹி?
17 ௧௭ அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லோரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாக இருக்கிறோம்.
வயம்’ ப³ஹவ: ஸந்தோ(அ)ப்யேகபூபஸ்வரூபா ஏகவபு: ஸ்வரூபாஸ்²ச ப⁴வாம: , யதோ வயம்’ ஸர்வ்வ ஏகபூபஸ்ய ஸஹபா⁴கி³ந: |
18 ௧௮ மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடு ஐக்கியமாக இருக்கிறார்களல்லவா?
யூயம்’ ஸா²ரீரிகம் இஸ்ராயேலீயவம்’ஸ²ம்’ நிரீக்ஷத்⁴வம்’| யே ப³லீநாம்’ மாம்’ஸாநி பு⁴ஞ்ஜதே தே கிம்’ யஜ்ஞவேத்³யா: ஸஹபா⁴கி³நோ ந ப⁴வந்தி?
19 ௧௯ இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?
இத்யநேந மயா கிம்’ கத்²யதே? தே³வதா வாஸ்தவிகீ தே³வதாயை ப³லிதா³நம்’ வா வாஸ்தவிகம்’ கிம்’ ப⁴வேத்?
20 ௨0 பிறமார்க்கத்தார்கள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு இல்லை, பேய்களுக்கே பலியிடுகிறார்கள் என்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடு ஐக்கியமாக இருக்க எனக்கு மனதில்லை.
தந்நஹி கிந்து பி⁴ந்நஜாதிபி⁴ ர்யே ப³லயோ தீ³யந்தே த ஈஸ்²வராய தந்நஹி பூ⁴தேப்⁴யஏவ தீ³யந்தே தஸ்மாத்³ யூயம்’ யத்³ பூ⁴தாநாம்’ ஸஹபா⁴கி³நோ ப⁴வதே²த்யஹம்’ நாபி⁴லஷாமி|
21 ௨௧ நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய உணவு பந்திக்கும் பேய்களுடைய உணவு பந்திக்கும் பங்குள்ளவர்களாக இருக்கக்கூடாதே.
ப்ரபோ⁴: கம்’ஸேந பூ⁴தாநாமபி கம்’ஸேந பாநம்’ யுஷ்மாபி⁴ரஸாத்⁴யம்’; யூயம்’ ப்ரபோ⁴ ர்போ⁴ஜ்யஸ்ய பூ⁴தாநாமபி போ⁴ஜ்யஸ்ய ஸஹபா⁴கி³நோ ப⁴விதும்’ ந ஸ²க்நுத²|
22 ௨௨ நாம் கர்த்தருக்கு எரிச்சலைத் தூண்டலாமா? அவரைவிட நாம் பலவான்களா?
வயம்’ கிம்’ ப்ரபு⁴ம்’ ஸ்பர்த்³தி⁴ஷ்யாமஹே? வயம்’ கிம்’ தஸ்மாத்³ ப³லவந்த: ?
23 ௨௩ எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாக இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் பக்திவளர்ச்சியை உண்டாக்காது.
மாம்’ ப்ரதி ஸர்வ்வம்’ கர்ம்மாப்ரதிஷித்³த⁴ம்’ கிந்து ந ஸர்வ்வம்’ ஹிதஜநகம்’ ஸர்வ்வம் அப்ரதிஷித்³த⁴ம்’ கிந்து ந ஸர்வ்வம்’ நிஷ்டா²ஜநகம்’|
24 ௨௪ ஒவ்வொருவனும் தன் சொந்த ஆதாயத்தைத் தேடாமல், மற்றவர்களுடைய ஆதாயத்தைத் தேடவேண்டும்.
ஆத்மஹித: கேநாபி ந சேஷ்டிதவ்ய: கிந்து ஸர்வ்வை: பரஹிதஸ்²சேஷ்டிதவ்ய: |
25 ௨௫ கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிச்சாப்பிடுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை.
ஆபணே யத் க்ரய்யம்’ தத்³ யுஷ்மாபி⁴: ஸம்’வேத³ஸ்யார்த²ம்’ கிமபி ந ப்ரு’ஷ்ட்வா பு⁴ஜ்யதாம்’
26 ௨௬ பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது.
யத: ப்ரு’தி²வீ தந்மத்⁴யஸ்த²ஞ்ச ஸர்வ்வம்’ பரமேஸ்²வரஸ்ய|
27 ௨௭ அன்றியும் விசுவாசம் இல்லாதவர்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனமிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரிக்காமல், உங்கள்முன் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள்.
அபரம் அவிஸ்²வாஸிலோகாநாம்’ கேநசித் நிமந்த்ரிதா யூயம்’ யதி³ தத்ர ஜிக³மிஷத² தர்ஹி தேந யத்³ யத்³ உபஸ்தா²ப்யதே தத்³ யுஷ்மாபி⁴: ஸம்’வேத³ஸ்யார்த²ம்’ கிமபி ந ப்ரு’ஷ்ட்வா பு⁴ஜ்யதாம்’|
28 ௨௮ ஆனாலும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் சாப்பிடாமலிருங்கள்; பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது.
கிந்து தத்ர யதி³ கஸ்²சித்³ யுஷ்மாந் வதே³த் ப⁴க்ஷ்யமேதத்³ தே³வதாயா: ப்ரஸாத³ இதி தர்ஹி தஸ்ய ஜ்ஞாபயிதுரநுரோதா⁴த் ஸம்’வேத³ஸ்யார்த²ஞ்ச தத்³ யுஷ்மாபி⁴ ர்ந போ⁴க்தவ்யம்’| ப்ரு’தி²வீ தந்மத்⁴யஸ்த²ஞ்ச ஸர்வ்வம்’ பரமேஸ்²வரஸ்ய,
29 ௨௯ உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுதந்திரம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாக நினைக்கவேண்டியதென்ன?
ஸத்யமேதத், கிந்து மயா ய: ஸம்’வேதோ³ நிர்த்³தி³ஸ்²யதே ஸ தவ நஹி பரஸ்யைவ|
30 ௩0 மேலும் நான் அதை நன்றியோடு அநுபவித்தால், நன்றிசெலுத்தி அனுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூற்றப்படுவானேன்?
அநுக்³ரஹபாத்ரேண மயா த⁴ந்யவாத³ம்’ க்ரு’த்வா யத்³ பு⁴ஜ்யதே தத்காரணாத்³ அஹம்’ குதோ நிந்தி³ஷ்யே?
31 ௩௧ ஆகவே, நீங்கள், சாப்பிட்டாலும் குடித்தாலும், எதைச்செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
தஸ்மாத்³ போ⁴ஜநம்’ பாநம் அந்யத்³வா கர்ம்ம குர்வ்வத்³பி⁴ ர்யுஷ்மாபி⁴: ஸர்வ்வமேவேஸ்²வரஸ்ய மஹிம்ந: ப்ரகாஸா²ர்த²ம்’ க்ரியதாம்’|
32 ௩௨ நான் என் சொந்தப் பிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லோருக்கும் பிரியமாக நடக்கிறதுபோல;
யிஹூதீ³யாநாம்’ பி⁴ந்நஜாதீயாநாம் ஈஸ்²வரஸ்ய ஸமாஜஸ்ய வா விக்⁴நஜநகை ர்யுஷ்மாபி⁴ ர்ந ப⁴விதவ்யம்’|
33 ௩௩ நீங்களும் யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும், தேவனுடைய சபைக்கும் இடறல் இல்லாதவர்களாக இருங்கள்.
அஹமப்யாத்மஹிதம் அசேஷ்டமாநோ ப³ஹூநாம்’ பரித்ராணார்த²ம்’ தேஷாம்’ ஹிதம்’ சேஷ்டமாந: ஸர்வ்வவிஷயே ஸர்வ்வேஷாம்’ துஷ்டிகரோ ப⁴வாமீத்யநேநாஹம்’ யத்³வத் க்²ரீஷ்டஸ்யாநுகா³மீ தத்³வத்³ யூயம்’ மமாநுகா³மிநோ ப⁴வத|