< 1 கொரிந்தியர் 1 >

1 தேவனுடைய விருப்பத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,
מאת פולוס, שנבחר על־ידי אלוהים להיות שליחו של ישוע המשיח, ומאת סוסתניס אחינו.
2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாகவும் இருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் அவர்களுக்கும் ஆண்டவராக இருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
אל המאמינים המשיחיים בקורינתוס, שנקראו על־ידי אלוהים להיות לו לעם בזכות ישוע המשיח, ואל כל המאמינים המשיחיים באשר הם; אל כל מי שמאמין באמת ובתמים בישוע המשיח אדוננו.
3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
אלוהינו ואדוננו יברך אתכם בכל ברכותיו ויעניק לכם שלום, שלווה ומנוחה.
4 கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே உறுதிப்படுத்தப்பட்டபடியே,
אינני חדל להודות לאלוהים על כל המתנות הנפלאות שהעניק לכם משום שאתם שייכים לו;
5 நீங்கள் இயேசுகிறிஸ்துவிற்குள்ளாக எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், முழு நிறைவுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,
הוא העשיר את חייכם בתוכן ובכל דבר טוב, עזר לכם בכול אומר, ואף העניק לכם הבנה מלאה של האמת.
6 அவர் மூலமாக உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
אמרתי לכם מראש שהמשיח יעשה כל זאת למענכם, ואתם רואים שהוא באמת עשה!
7 அப்படியே நீங்கள் எந்த ஒரு வரத்திலும் குறைவில்லாதவர்களாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.
כעת לא חסר לכם דבר; קיבלתם את כל הברכות, המתנות הרוחניות ואת הכוח למלא את רצונו. ברכות אלה ניתנו לכם למשך הזמן שאתם מצפים לשובו של ישוע המשיח אדוננו.
8 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இறுதிவரைக்கும் அவர் உங்களை உறுதிப்படுத்துவார்.
המשיח יתמיד לעזור לכם להיות טהורים ונקיים מחטא ביום שובו,
9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
שכן אלוהים מקיים תמיד את הבטחותיו, והרי הוא עצמו קרא לכם להתחבר עם בנו ישוע המשיח.
10 ௧0 சகோதரர்களே, நீங்களெல்லோரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகள் இல்லாமல் ஒரே மனதும் ஒரே யோசனையும் உள்ளவர்களாகச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
אחים יקרים, אני מתחנן לפניכם בשם ישוע המשיח אדוננו: הפסיקו את המריבות והוויכוחים! עליכם לחיות באהבה ובשלום כדי שלא יהיו פילוגים בקהילה. אני מבקש מכם, אנא, ותרו איש לרעהו, היו בעלי דעה אחת ומטרה אחת.
11 ௧௧ ஏனென்றால், என் சகோதரர்களே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
בני ביתה של כלואה סיפרו לי על המריבות והוויכוחים שלכם.
12 ௧௨ உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
זה אומר:”אני בעד פולוס!“וזה אומר:”אני בעד אפולוס!“או”אני בעד ‎ כֵּיפָא (פטרוס)!“ויש הטוענים כי הם בלבד תלמידיו האמיתיים של ישוע המשיח.
13 ௧௩ கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
וכך אתם מחלקים את המשיח לחלקים רבים. אך האם אני, פולוס, נצלבתי בעד חטאיכם? או האם מישהו מכם נטבל בשמי?
14 ௧௪ என் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன் என்று ஒருவனும் சொல்லாதபடிக்கு,
אני מודה לאלוהים שלא הטבלתי איש מכם, מלבד קריספוס וגיוס,
15 ௧௫ நான் கிறிஸ்புவிற்கும் காயுவிற்கும்தவிர, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
כך שעכשיו איש אינו יכול לטעון שניסיתי להקים קהילה חדשה –”קהילת פולוס“.
16 ௧௬ ஸ்தேவானுடைய குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் வேறு யாருக்காவது நான் ஞானஸ்நானம் கொடுத்தேனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது.
שכחתי להוסיף שהטבלתי גם את בני משפחתו של סטפנוס. איני זוכר שהטבלתי עוד מישהו.
17 ௧௭ ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாகப் போகாதபடிக்கு, மனித ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
שכן המשיח לא שלח אותי להטביל, כי אם לבשר את דבר־אלוהים. אבל אפילו ההטפה שלי אינה נשמעת מחוכמת ביותר, מפני שאיני משתמש במילים מסובכות ויפות, ואף לא ברעיונות נשגבים ומסובכים, מחשש שאחליש ואקהה את הכוח העצום שבבשורה הפשוטה של צלב המשיח.
18 ௧௮ சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது.
אני יודע היטב שהלא־מאמינים חושבים את מותו של ישוע על הצלב לשטות; אולם אנחנו, המאמינים שנושענו, יודעים שזוהי גבורת אלוהים.
19 ௧௯ அந்தப்படி: “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது.
כי אלוהים אמר:”אאבד חכמת חכמים ובינת נבונים אסתיר“.
20 ௨0 ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn g165)
אלוהים העמיד באור מגוחך את המלומדים, החוקרים, המדענים ומנהיגי העולם, והוכיח שאין כל ערך לחכמתם. (aiōn g165)
21 ௨௧ எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது.
כי אלוהים, בחכמתו הרבה, מנע בעד העולם מלהיוושע באמצעות גאוניות אנושית, ואז בא והושיע את כל מי שהאמין בבשורתו, שהעולם כינה”מטופשת“.
22 ௨௨ யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்;
הבשורה נשמעת מטופשת ליהודים, כי הם דורשים אות מהשמים כהוכחה לאמיתות תוכנה, ואילו היוונים מאמינים רק במה שתואם את הפילוסופיה שלהם – במה שנראה מחוכם.
23 ௨௩ நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார்.
על כן כאשר אנחנו מבשרים שישוע המשיח מת כדי להושיע את כולם, היהודים נעלבים, ואילו הגויים מבטלים את הבשורה בנפנוף.
24 ௨௪ ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார்.
אולם אלוהים פקח את עיניהם של בחיריו מבין היהודים והגויים, כדי שיראו כי המשיח הוא התגלמות כוח הישועה של אלוהים; המשיח עצמו הוא מרכז תוכניתו הנפלאה של אלוהים להושיע אותנו.
25 ௨௫ இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது.
תוכניתו”מטופשת“זו של אלוהים מחוכמת בהרבה מהתוכנית הגאונית ביותר של בני־האדם, ואלוהים ב”חולשתו“– מות ישוע על הצלב – חזק הרבה יותר מכל אדם.
26 ௨௬ எப்படியென்றால், சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மனிதர் பார்வையில் ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை.
בוודאי שמתם לב, אחים יקרים, שרק מעטים מכם בעלי משרות חשובות ועמדות־מפתח, בעלי כוח השפעה או בעלי ממון.
27 ௨௭ ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
כי אלוהים בחר במתכוון ברעיונות שהעולם חושב למטופשים וחסרי־ערך, כדי לבייש את חכמי העולם.
28 ௨௮ உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாக எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார்.
הוא בחר בתוכנית שנראתה חסרת כל ערך בעיני העולם, והשתמש בה להשפיל עד עפר את האנשים החכמים ביותר,
29 ௨௯ மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
כדי שאף אחד לא יתפאר לפני ה׳.
30 ௩0 அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவிற்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,
שכן אלוהים לבדו נתן לנו את החיים דרך ישוע המשיח. המשיח הוא שהציג לפנינו את תוכנית ה׳ לישועתנו, הוא שעשה אותנו רצויים לה׳, הוא שקרב אותנו לאלוהים, טיהר וקידש אותנו, והקריב את עצמו למוות כדי להעניק לנו את ישועתנו.
31 ௩௧ அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
משום כך עלינו לנהוג לפי הכתוב:”המתהלל יתהלל בה׳!“

< 1 கொரிந்தியர் 1 >