< 1 நாளாகமம் 1 >
2 ௨ கேனான், மகலாலெயேல், யாரேத்,
Cainan, Mahalaleel, Jared,
3 ௩ ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
Enoc, Matusalem, Lamech,
4 ௪ நோவா, சேம், காம், யாப்பேத்.
Noe, Sem, Cham, ug Japhet.
5 ௫ யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Japhet: si Gomer, Magog, Madai, Javan, Tubal, Mesec, ug Thiras.
6 ௬ கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Gomer: si Azkenaz, ug si Riphat, ug si Thogarma.
7 ௭ யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
Ug ang mga anak nga lalake ni Javan; si Elisa ug si Tharsis, Kitim, ug si Dodanim.
8 ௮ காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Cham: si Chus, Misraim, Put ug si Canaan,
9 ௯ கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள்.
Ug ang mga anak nga lalake ni Chus: si Seba, ug si Havilla, Sabtha, Raema, ug si Sabtecha. Ug ang mga anak nga lalake ni Raema: si Seba ug si Dedan.
10 ௧0 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான்.
Ug si Chus nanganak kang Nimrod; nagsugod siya sa pagkamakusganon sa yuta.
11 ௧௧ மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும்,
Ug si Mizraim nanganak kang Ludim, ug kang Anamim, ug kang Laabim, ug kang Nephtuim,
12 ௧௨ பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான்.
Ug kang Phatrusim ug Casluim, (diin gumikan ang mga Filistehanon), ug Caphtorim.
13 ௧௩ கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
Ug si Canaan nanganak kang Sidon nga iyang kamagulangan, ug kang Heth.
14 ௧௪ எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
Ug ang Jebusehanon, ug ang Amorehanon, ug ang Gergesehanon,
15 ௧௫ ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும்,
Ug ang Hebehanon ug ang Arcehanon, ug ang Cinehanon;
16 ௧௬ அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான்.
Ug ang Arabadehanon, ug ang Semarehanon, ug ang Hamotehanon.
17 ௧௭ சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Sem: Elam, Assur, Arphaxad, Lud, Aram, Hus, Hul, Gether, ug Mesec,
18 ௧௮ அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
Ug si Arphaxad nanganak kang Sela, ug si Sela nanganak kang Heber.
19 ௧௯ ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
Ug kang Heber natawo ang duha ka anak nga lalake: ang ngalan sa usa mao si Peleg; kay sa iyang mga adlaw ang yuta nabahin; ang ngalan sa iyang igsoon nga lalake mao si Joctan.
20 ௨0 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
Ug si Joctan nanganak kang Elmodad, ug kang Seleph, ug kang Asarmabeth, ug kang Jera,
21 ௨௧ அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
Ug kang Adoram, ug Uzal ug Dicla,
22 ௨௨ ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
Ug Ebal, Abimael, ug Seba,
23 ௨௩ ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள்.
Ug Ophir, ug Havila, ug Jobab. Kining tanan mga anak nga lalake ni Joctan.
24 ௨௪ சேம், அர்பக்சாத், சாலா,
Sem, Arphaxad, Sela,
25 ௨௫ ஏபேர், பேலேகு, ரெகூ,
Heber, Peleg, Reu,
26 ௨௬ செரூகு, நாகோர், தேராகு,
Serug, Nachor, Thare,
27 ௨௭ ஆபிராமாகிய ஆபிரகாம்.
Abram (mao si Abraham).
28 ௨௮ ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Abraham mao si Isaac ug si Ismael.
29 ௨௯ இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
Kini mao ang ilang mga kaliwatan: ang kamagulangan ni Ismael, si Nabajoth; unya si Cedar, ug si Adbeel, ug si Misam,
30 ௩0 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
Misma, ug si Duma, Maasa, Hadad, ug si Thema;
31 ௩௧ யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள்.
Jetur, Naphis ug Cedma. Kini mao ang mga anak nga lalake ni Ismael.
32 ௩௨ ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள்.
Ug ang mga anak nga lalake ni Cethura, nga puyo-puyo ni Abraham: siya nanganak kang Zimram, ug Jocsan, ug Medan, ug Madian, ug Isba, ug Sua. Ug ang mga anak nga lalake ni Jocsan: si Seba, ug si Dedan.
33 ௩௩ மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.
Ug ang mga anak nga lalake ni Madian: Epha, ug Epher, ug Henoch, ug si Abida, ug Eldaa. Kining tanan mao ang mga anak nga lalake ni Cethura.
34 ௩௪ ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
Ug si Abraham nanganak kang Isaac. Ang mga anak nga lalake ni Isaac: Si Esau ug si Israel.
35 ௩௫ ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Esau: Si Eliphas, Rehuel, Jeus, Jalam, ug Core.
36 ௩௬ எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Eliphas: Theman, ug Omar, Sephi, ug Hatham, ug Chenas, ug Timna ug Amalec.
37 ௩௭ ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Rehuel: Si Nahath, Zera, Samma, ug Mizza.
38 ௩௮ சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Seir: Si Lotan, ug Sobal, ug Sibeon, ug Ana, ug Dison, ug Eser ug Disan.
39 ௩௯ லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
Ug ang mga anak nga lalake ni Lotan: si Hori, ug Homam; ug si Timna, igsoon nga babaye ni Lotan.
40 ௪0 சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Sobal: si Alian, ug si Manahach ug si Ebal, ug si Sephi, ug Onan. Ug ang mga anak nga lalake ni Zibeon: si Aia, ug si Ana.
41 ௪௧ ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Ana: si Dison, ug ang mga anak nga lalake ni Dison: si Hamran, ug Hesban ug Ithran, ug Cheran.
42 ௪௨ திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
Ang mga anak nga lalake ni Eser: si Bilhan, ug Zaavan, ug Jaacan. Ang mga anak nga lalake ni Disan: si Hus ug Aran.
43 ௪௩ இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.
Karon mao kini ang mga hari nga naghari sa Edom, sa wala pay hari nga naghari sa mga anak sa Israel: si Belah ang anak nga lalake ni Beor; ug ang ngalan sa iyang lungsod Dinaba.
44 ௪௪ பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Ug si Belah namatay, ug si Jobab ang anak nga lalake ni Zera sa Bosra naghari ilis kaniya.
45 ௪௫ யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Ug si Jobab namatay, ug si Husam sa yuta sa mga Themanhon naghari ilis kaniya.
46 ௪௬ ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத்.
Ug si Husam namatay, ug si Adad anak nga lalake ni Bedad, nga midaug kang Madian sa kapatagan sa Moab, naghari ilis kaniya; ug ang ngalan sa iyang lungsod mao ang Avith.
47 ௪௭ ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Ug si Adad namatay, ug si Samla sa Masreca maoy naghari ilis kaniya.
48 ௪௮ சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Ug si Samla namatay, ug si Saul sa Rehobot tupad sa Suba naghari ilis kaniya.
49 ௪௯ சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Ug namatay si Saul, ug si Baal-hanan anak nga lalake ni Achbor naghari ilis kaniya.
50 ௫0 பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.
Ug si Baal-hanan namatay, ug si Adad naghari ilis kaniya; ug ang ngalan sa iyang lungsod mao ang Pai: ug ang ngalan sa iyang asawa mao si Mehetabel, anak nga babaye ni Matred, ang anak nga babaye ni Mesahab.
51 ௫௧ ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
Ug si Adad namatay. Ug ang pangulo sa Edom mao si pangulo Timna, pangulo Alba, pangulo Jetet,
52 ௫௨ அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
Si pangulo Aholibama, pangulo Ela, pangulo Pinon,
53 ௫௩ கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
Si pangulo Kenas, pangulo Teman, pangulo Mibzar,
54 ௫௪ மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.
Si pangulo Magdiel, pangulo Iram. Kini mao ang mga pangulo sa Edom.