< 1 நாளாகமம் 9 >
1 ௧ இஸ்ரவேல் எல்லோரும் தங்கள் வம்சவரலாற்றின்படி பதிவுசெய்யப்பட்டார்கள்; இவர்களுடைய பெயர்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார்கள் தங்களுடைய துரோகத்தினால், பாபிலோனுக்கு சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
Tak wszyscy Izraelici byli spisani w rodowodach, a oto zostały one zapisane w księdze królów Izraela i Judy, [a] ci zostali uprowadzeni do Babilonu z powodu swego przestępstwa.
2 ௨ தங்களுடைய சொந்த நிலங்களிலும் தங்களுடைய பட்டணங்களிலும் முன்பு குடியிருந்தவர்கள் இஸ்ரவேலர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆலயப்பணியாளர்களுமே.
Pierwszymi mieszkańcami, którzy weszli do swych posiadłości w swoich miastach, byli Izraelici, kapłani, Lewici i Netinici.
3 ௩ யூதா சந்ததிகளிலும், பென்யமீன் சந்ததிகளிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் சந்ததிகளிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,
W Jerozolimie mieszkali spośród synów Judy, Beniamina, Efraima i Manassesa:
4 ௪ யூதாவின் மகனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் மகனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் மகன் ஊத்தாய்.
Utaj, syn Ammihuda, syna Omriego, syna Imriego, syna Baniego, z synów Peresa, syna Judy.
5 ௫ சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவனுடைய பிள்ளைகளும்,
Z Szilonitów: pierworodny Asajasz i jego synowie.
6 ௬ சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவனுடைய சகோதரர்களாகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேர்களுமே.
Z synów Zeracha: Jeuel i ich braci, sześciuset dziewięćdziesięciu.
7 ௭ பென்யமீன் சந்ததியில் அசெனூவாவின் மகனாகிய ஒதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.
Z synów Beniamina: Sallu, syn Meszullama, syna Hodawiasza, syna Hassenuy;
8 ௮ எரோகாமின் மகன் இப்னெயா; மிக்கிரியின் மகனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்;
I Jibnejasz, syn Jerochama, Ela, syn Uzziego, syna Mikriego, i Meszullam, syn Szefatiasza, syna Reuela, syna Jibniasza.
9 ௯ தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரர்களாகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனிதர்கள் எல்லோரும், தங்களுடைய பிதாக்களின் வம்சத்திலே முன்னோர்களின் தலைவர்களாக இருந்தார்கள்.
Ich braci według rodowodów [było] dziewięćset pięćdziesięciu sześciu. Ci wszyscy [byli] naczelnikami rodów według domów swoich ojców.
10 ௧0 ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.
Z kapłanów: Jedajasz, Jehojarib, Jakin;
11 ௧௧ அகிதூபின் மகனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் மகனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்காரன்.
I Azariasz, syn Chilkiasza, syna Meszullama, syna Sadoka, syna Merajota, syna Achituba, przełożonego domu Bożego;
12 ௧௨ மல்கியாவின் மகனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மேரின் மகனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் மகனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
I Adajasz, syn Jerochama, syna Paszchura, syna Malkiasza, i Maasaj, syn Adiela, syna Jachzery, syna Meszullama, syna Meszillemita, syna Immera;
13 ௧௩ அவர்களுடைய சகோதரர்களும், தங்கள் முன்னோர்களின் வம்சத்தலைவர்களான ஆயிரத்து எழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்தின் பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
Ich braci, naczelników swoich rodów, [było] tysiąc siedmiuset sześćdziesięciu, ludzi zdolnych do pełnienia służby w domu Bożym.
14 ௧௪ லேவியர்களில் மெராரியின் சந்ததியான அசபியாவின் மகனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,
A z Lewitów: Szemejasz, syn Chaszuba, syna Azrikama, syna Chaszabiasza, z synów Merariego;
15 ௧௫ பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் மகனாகிய சிக்ரிக்குப் பிறந்த மீகாவின் மகன் மத்தனியா,
I Bakbakar, Cheresz, Galal, Mattaniasz, syn Micheasza, syna Zikriego, syna Asafa;
16 ௧௬ எதுத்தூனின் மகனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியர்களின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் மகனாகிய ஆசாவின் மகன் பெரகியா,
I Obadiasz, syn Szemajasza, syna Galala, syna Jedutuna, i Berechiasz, syn Asy, syna Elkany, który mieszkał we wsiach Netofatytów.
17 ௧௭ வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகீமான் என்பவர்களும், இவர்கள் சகோதரர்களுமே; இவர்கள் தலைவன் சல்லூம்.
A odźwierni: Szallum, Akkub, Talmon, Achiman i ich bracia. Szallum [był ich] zwierzchnikiem;
18 ௧௮ லேவி சந்ததியின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல் காத்துவந்தார்கள்.
[Który] aż dotąd [stawał] przy bramie królewskiej od wschodu. Ci byli odźwiernymi w obozach synów Lewiego.
19 ௧௯ கோராகின் மகனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களாகிய அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் யெகோவாவுடைய இடத்திலே கூடாரத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, கூடாரத்துவாசல்களைக் காத்துவந்தார்கள்.
Szallum, syn Korego, syna Ebiazafa, syna Koracha, i jego bracia z domu jego ojca, Korachici, pełnili służbę, [byli] stróżami progów namiotu, a ich ojcowie byli stróżami wejścia do obozu PANA.
20 ௨0 எலெயாசாரின் மகனாகிய பினேகாசுடனே யெகோவா இருந்ததால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாக இருந்தான்.
Pinchas, syn Eleazara, był niegdyś zwierzchnikiem nad nimi, a PAN był z nim.
21 ௨௧ மெசெல்மியாவின் மகனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாக இருந்தான்.
Zachariasz, syn Meszelemiasza, [był] odźwiernym przy wejściu do Namiotu Zgromadzenia.
22 ௨௨ வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரெண்டுபேர்களாக இருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்களுடைய வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், தரிசனம்காண்கிறவனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்களுடைய வேலைகளில் வைத்தார்கள்.
Wszystkich wybranych na odźwiernych przy bramach było dwustu dwunastu. Byli oni policzeni według ich rodowodu w swoich osiedlach, a ustanowił ich Dawid i Samuel, widzący.
23 ௨௩ அப்படியே அவர்களும், அவர்களுடைய மகன்களும் யெகோவாவுடைய ஆலயமாகிய கூடாரத்து வாசல்களைக் காக்கிறவர்களை வரிசையாக விசாரித்து வந்தார்கள்.
Oni więc i ich synowie [czuwali] nad bramami domu PANA, w domu namiotu, jako stróże.
24 ௨௪ ஆலயத்தின் வாசல்களைக் காக்கிறவர்கள் நான்கு திசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.
Odźwierni znajdowali się z czterech stron: od wschodu, od zachodu, od północy i od południa.
25 ௨௫ அவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய கிராமங்களிலிருந்து, ஏழுநாட்களுக்கு ஒருமுறை மாறிமாறி அவர்களோடு இருக்க வருவார்கள்.
Ich bracia zaś, [mieszkający] w swoich osiedlach, przychodzili co siódmy dzień, w swoich porach, aby [być] z nimi.
26 ௨௬ தேவாலயத்தின் அறைகள்மேலும் கருவூல அறைகள்மேலும் உள்ள விசாரிக்கும் வேலை லேவியர்களான அந்த நான்கு தலைமைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Czterej bowiem naczelni odźwierni pełnili stałą służbę. [Byli] to Lewici [odpowiedzialni] za komnaty i skarbiec domu Bożego;
27 ௨௭ காவல் அவர்களுக்கு ஒப்படைத்திருந்ததால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இரவு தங்கியிருந்து, காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.
I nocowali dokoła domu Bożego, gdyż do nich należała straż i obowiązek otwierania [go] każdego ranka.
28 ௨௮ அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.
[Niektórzy] z nich mieli pieczę nad naczyniami do służby, by je wnosić i wynosić w tej samej liczbie.
29 ௨௯ அவர்களில் சிலர் மற்றப் பொருட்களின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மாவு, திராட்சைரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்களின்மேலும் விசாரணைக்காரர்களாக இருந்தார்கள்.
[Inni] spośród nich byli ustanowieni [do opieki] nad naczyniami i przyborami Miejsca Najświętszego – nad mąką pszenną, winem, oliwą, kadzidłem i wonnościami.
30 ௩0 ஆசாரியர்களின் மகன்களில் சிலர் நறுமணப் பொருட்களால் பரிமளதைலம் இறக்குவார்கள்.
A niektórzy z synów kapłanów sporządzali olejki z wonności.
31 ௩௧ லேவியர்களில் கோராகியனான சல்லூமின் மூத்த மகனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
Mattitiasz, spośród Lewitów, pierworodny Szalluma Korachity, był przełożonym nad tym, co przygotowane w patelniach.
32 ௩௨ அவர்கள் சகோதரர்களாகிய கோகாத்தியர்களின் மகன்களில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
[Niektórzy] ich bracia spośród synów Kehata [byli] ustanowieni [do opieki] nad chlebami pokładnymi, aby [je] przygotowywać w każdy szabat.
33 ௩௩ இவர்களில் லேவியர்களுடைய குடும்பத்தலைவர்களாகிய சங்கீதக்காரர்கள் இரவும் பகலும் தங்களுடைய வேலையை நடத்தவேண்டியதிருந்ததால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்களுடைய அறைகளில் இருந்தார்கள்.
Ci [byli] śpiewakami, naczelnikami rodów Lewitów, którzy mieszkają w komnatach; byli wolni od innych zajęć, gdyż we dnie i w nocy zajmowali się tą służbą.
34 ௩௪ லேவியர்களில் குடும்பத்தலைவர்களாகிய இவர்கள் தங்களுடைய சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
Byli oni naczelnikami rodów Lewitów, naczelnikami według swoich rodowodów, a mieszkali w Jerozolimie.
35 ௩௫ கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
W Gibeonie mieszkał Jejel, ojciec Gibeona, a jego żona miała na imię Maaka;
36 ௩௬ அவன் மூத்த மகனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
A jego synem pierworodnym był Abdon, a następni to: Sur, Kisz, Baal, Neer, Nadab;
37 ௩௭ கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
I Gedor, Achio, Zachariasz, i Miklot.
38 ௩௮ மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலிருக்கிற தங்களுடைய சகோதரர்களுக்கு சமீபத்தில் குடியிருந்தார்கள்.
A Miklot spłodził Szimmeama. Tamci również mieszkali ze swoimi braćmi w Jerozolimie naprzeciw swoich braci.
39 ௩௯ நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
Neer spłodził Kisza, a Kisz spłodził Saula, a Saul spłodził Jonatana, Malkiszuę, Abinadaba i Eszbaala.
40 ௪0 யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
Synem Jonatana [był] Meribbaal, a Meribbaal spłodził Micheasza.
41 ௪௧ மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
Synowie zaś Micheasza to: Piton, Melek, Tarea i [Achaz].
42 ௪௨ ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
Achaz spłodził Jarę, a Jara spłodził Alemeta, Azmaweta i Zimriego, a Zimri spłodził Mosę.
43 ௪௩ மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பாயா; இவனுடைய மகன் எலியாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
Mosa spłodził Bineę, a jego synem [był] Rafa, jego synem [był] Elasa, jego synem [był] Asel.
44 ௪௪ ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் மகன்கள்.
Asel miał sześciu synów, a oto ich imiona: Azrikam, Bokru, Izmael, Szeariasz, Obadiasz i Chanan. Ci [byli] synami Asela.