< 1 நாளாகமம் 8 >

1 பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
و بنيامين نخست زاده خود بالَع را آورد و دومين اَشبيل و سومش اَخرَخ،۱
2 நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
و چهارم نُوحَه و پنجم را فارا.۲
3 பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
و پسران بالَع: اَدّار و جِيرا و اَبِيهُود.۳
4 அபிசுவா, நாகாமான், அகோவா,
و اَبيشُوع و نُعمان و اَخُوخ.۴
5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.
و جيرا و شَفُوفان و حُورام بودند.۵
6 கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
و اينانند پسران اَحُود که رؤساي خاندان آباي ساکنان جَبَع بودند و ايشان را به مناحت کوچانيدند.۶
7 கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.
و او نُعمان و اَخِيا و جيرا را کوچانيد و او عُزّا و اَخِيحُود را توليد نمود.۷
8 அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,
و شَحرايم در بلاد موآب بعد از طلاق دادن زنان خود حُوشيم و بَعَرا فرزندان توليد نمود.۸
9 தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
پس از زن خويش که خُوداش نام داشت يوباب و ظبيا و ميشا و مَلکام را آورد.۹
10 ௧0 எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
و يعُوض و شَکِيا و مِرمَه را که اينها پسران او و رؤساي خاندانهاي آبا بودند.۱۰
11 ௧௧ ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
و از حوشيم ابيطوب و اَلفَعل را آورد.۱۱
12 ௧௨ எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
و پسران اَلفَعل عابَر و مِشعام و شامَر که اُونُو و لُود و دهاتش را بنا نهاد بودند.۱۲
13 ௧௩ பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
و بَرِيعه و شامع که ايشان رؤساي خاندان آباي ساکنان اَيلُون بودند و ايشان ساکنان جَّت را اخراج نمودند.۱۳
14 ௧௪ அகியோ, சாஷாக், எரேமோத்,
و اَخِيو و شاشَق و يرِيمُوت.۱۴
15 ௧௫ செபதியா, ஆராத், ஆதேர்,
و زَبَديا و عارَد و عادَر.۱۵
16 ௧௬ மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
و ميکائيل و يشفَه و يوخا پسران بَريعه بودند.۱۶
17 ௧௭ செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
و زَبَديا و مَشُلاّم و جِزقِي و حابَر،۱۷
18 ௧௮ இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
و يشمَراي و يزلِيآه و يوباب پسران اَلفَعل بودند.۱۸
19 ௧௯ யாக்கிம், சிக்ரி, சப்தி,
و يعقيم و زِکرِي و زَبدِي،۱۹
20 ௨0 எலியேனாய், சில்தாய், ஏலியேல்,
و اَلِيعيناي و صِلَّتاي و ايليئيل،۲۰
21 ௨௧ அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
و اَدايا و بريا و شِمرَت پسران شِمعي،۲۱
22 ௨௨ இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
و يشفان و عابَر و ايليئيل.۲۲
23 ௨௩ அப்தோன், சிக்ரி, ஆனான்,
و عَبدون و زِکرِي و حانان،۲۳
24 ௨௪ அனனியா, ஏலாம், அந்தோதியா,
و حَنَنيا و عيلام و عَنتُوتِيا،۲۴
25 ௨௫ இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
و يفَديا و فَنُوئيل پسران شاشَق بودند.۲۵
26 ௨௬ சம்சேராய், செகரியா, அத்தாலியா,
و شِمشَراي و شَحَريا و عَتَليا.۲۶
27 ௨௭ யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.
و يعرَشيا و ايليا و زِکرِي پسران يرُحام بودند.۲۷
28 ௨௮ இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
اينان رؤساي خاندان آبا بر حسب انساب خود و سرداران بودند و ايشان در اورشليم سکونت داشتند.۲۸
29 ௨௯ கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
و در جِبعُون پدر جِبعُون سکونت داشت و اسم زنش مَعکَه بود.۲۹
30 ௩0 அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
و نخست زاده اش عَبدُون بود، پس صور و قَيس و بَعل و ناداب،۳۰
31 ௩௧ கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
و جَدُور و اَخِيو و زاکَر؛۳۱
32 ௩௨ மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
و مِقلُوت شِمآه را آورد و ايشان نيز با برادران خود در اورشليم در مقابل برادران ايشان ساکن بودند.۳۲
33 ௩௩ நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
و نير قَيس را آورد و قَيس شاؤل را آورد و شاؤل يهُوناتان و مَلکيشوع و ابيناداب و اَشبَعل را آورد.۳۳
34 ௩௪ யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
و پسر يهُوناتان مَرِيب بَعل بود و مَرِيبِ بَعل ميکا را آورد.۳۴
35 ௩௫ மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
و پسران ميکا، فيتون و مالَک و تاريع و آحاز بودند.۳۵
36 ௩௬ ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
و آحاز يهُوعَدَه را آورد، يهُوعَدَه عَلمَت و عَزمُوت و زِمري را آورد و زِمري موصا را آورد.۳۶
37 ௩௭ மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
و موصا بِنعا را آورد و پسرش رافَه بود و پسرش اَلعاسَه و پسرش آصيل بود.۳۷
38 ௩௮ ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.
و آصيل را شش پسر بود و نامهاي ايشان اينها است: عَزرِيقام و بُکرُو و اِسمَعِيل و شَعريا و عُوبَديا و حانان. و جميع اينها پسران آصيل اند.۳۸
39 ௩௯ அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
و پسران عِيشَق برادر او نخست زاده اش اُولام و دومين يعُوش و سومين اَلِيفَلَط.۳۹
40 ௪0 ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.
و پسران اُولام، مردان زورآورِ شجاع و تيرانداز بودند؛ و پسران و پسرانِ پسران ايشان بسيار يعني صد و پنجاه نفر بودند. جميع اينها از بني بنيامين ميباشند.۴۰

< 1 நாளாகமம் 8 >