< 1 நாளாகமம் 7 >
1 ௧ இசக்காருடைய மகன்கள் தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நான்கு பேர்.
and to/for son: child Issachar Tola and Puah (Jashub *Q(K)*) and Shimron four
2 ௨ தோலாவின் மகன்கள் ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்களுடைய பிதாக்கள் வம்சத்தலைவர்களும் தங்களுடைய சந்ததிகளிலே பெலசாலிகளுமாக இருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்து அறுநூறு பேர்களாக இருந்தது.
and son: descendant/people Tola Uzzi and Rephaiah and Jeriel and Jahmai and Ibsam and Shemuel head: leader to/for house: household father their to/for Tola mighty man strength to/for generation their number their in/on/with day David twenty and two thousand and six hundred
3 ௩ ஊசியின் மகன்களில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் மகன்கள் மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவர்களாக இருந்தார்கள்.
and son: child Uzzi Izrahiah and son: child Izrahiah Michael and Obadiah and Joel Isshiah five head: leader all their
4 ௪ அவர்கள் முன்னோர்களின் வம்சத்தார்களான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனிதர்களான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடு இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
and upon them to/for generation their to/for house: household father their band army battle thirty and six thousand for to multiply woman: wife and son: child
5 ௫ இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்கு சகோதரர்களான பெலசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம் பேர்களாக இருந்தார்கள்.
and brother: male-relative their to/for all family Issachar mighty man strength: soldiers eighty and seven thousand to enroll they to/for all
6 ௬ பென்யமீன் மகன்கள் பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
Benjamin Bela and Becher and Jediael three
7 ௭ பேலாவின் மகன்கள் எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெலசாலிகளான ஐந்து தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களுடைய வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்திரெண்டாயிரத்து முப்பத்துநான்குபேர்.
and son: child Bela Ezbon and Uzzi and Uzziel and Jerimoth and Iri five head: leader house: household father mighty man strength: soldiers and to enroll they twenty and two thousand and thirty and four
8 ௮ பெகேரின் மகன்கள் செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள்.
and son: child Becher Zemirah and Joash and Eliezer and Elioenai and Omri and Jeremoth and Abijah and Anathoth and Alemeth all these son: child Becher
9 ௯ தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவர்களாகிய அவர்களுடைய சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பெலசாலிகள் இருபதாயிரத்து இருநூறுபேர்.
and to enroll they to/for generation their head: leader house: household father their mighty man strength: soldiers twenty thousand and hundred
10 ௧0 யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான்; பில்கானின் மகன்கள் ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
and son: child Jediael Bilhan and son: child Bilhan (Jeush *Q(K)*) and Benjamin and Ehud and Chenaanah and Zethan and Tarshish and Ahishahar
11 ௧௧ யெதியாயேலின் மகன்களாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தார்களில் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களான பெலசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
all these son: child Jediael to/for head: leader [the] father mighty man strength: soldiers seven ten thousand and hundred to come out: regular army: war to/for battle
12 ௧௨ சுப்பீமும், உப்பீமும் ஈரின் மகன்கள் ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன்.
and Shuppim and Huppim son: descendant/people Ir Hushim son: descendant/people Aher
13 ௧௩ நப்தலியின் மகன்களான பில்காளின் பேரன்மார்கள், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
son: child Naphtali Jahziel and Guni and Jezer and Shallum son: descendant/people Bilhah
14 ௧௪ மனாசேயின் மகன்களில் ஒருவன் அஸ்ரியேல்; அவனுடைய மறுமனையாட்டியாகிய அராமிய பெண்ணிடம் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.
son: descendant/people Manasseh Asriel which to beget concubine his [the] Aramean to beget [obj] Machir father Gilead
15 ௧௫ மாகீர் மாகாள் என்னும் பெயருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியைத் திருமணம் செய்தான்; மனாசேயின் இரண்டாம் மகன் செலோப்பியாத்; செலொப்பியாத்திற்கு மகள்கள் இருந்தார்கள்.
and Machir to take: take woman: wife to/for Huppim and to/for Shuppim and name sister his Maacah and name [the] second Zelophehad and to be to/for Zelophehad daughter
16 ௧௬ மாகீரின் மனைவியாகிய மாக்காள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள்; இவனுடைய சகோதரனின் பெயர் சேரேஸ்; இவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.
and to beget Maacah woman: wife Machir son: child and to call: call by name his Peresh and name brother: male-sibling his Sheresh and son: child his Ulam and Rakem
17 ௧௭ ஊலாமின் மகன்களில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் மகன்கள்.
and son: child Ulam Bedan these son: child Gilead son: child Machir son: child Manasseh
18 ௧௮ இவனுடைய சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
and sister his Hammolecheth to beget [obj] Ishhod and [obj] Abiezer and [obj] Mahlah
19 ௧௯ செமீதாவின் மகன்கள் அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.
and to be son: child Shemida Ahian and Shechem and Likhi and Aniam
20 ௨0 எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய மகன் பேரேத்; இவனுடைய மகன் தாகாத்; இவனுடைய மகன் எலாதா; இவனுடைய மகன் தாகாத்.
and son: descendant/people Ephraim Shuthelah and Bered son: child his and Tahath son: child his and Eleadah son: child his and Tahath son: child his
21 ௨௧ இவனுடைய மகன் சாபாத்; இவனுடைய மகன்கள் சுத்தெலாக், ஏசேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூரார்களுடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனதால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
and Zabad son: child his and Shuthelah son: child his and Ezer and Elead and to kill them human Gath [the] to beget in/on/with land: country/planet for to go down to/for to take: bring [obj] livestock their
22 ௨௨ அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேக நாட்கள் துக்கங்கொண்டாடும்போது, அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.
and to mourn Ephraim father their day many and to come (in): come brother: male-sibling his to/for to be sorry: comfort him
23 ௨௩ பின்பு அவன் தன்னுடைய மனைவியிடம் இணைந்ததால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு மகனைப் பெற்றாள்; அவன், தன்னுடைய குடும்பத்திற்குத் தீங்கு உண்டானதால், இவனுக்கு பெரீயா என்று பெயரிட்டான்.
and to come (in): come to(wards) woman: wife his and to conceive and to beget son: child and to call: call by [obj] name his Beriah for in/on/with distress: harm to be in/on/with house: household his
24 ௨௪ இவனுடைய மகளாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தொரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
and daughter his Sheerah and to build [obj] (Lower) Beth-horon (Lower) Beth-horon [the] Lower (Beth Horon) and [obj] [the] Upper (Beth Horon) and [obj] Uzzen-sheerah Uzzen-sheerah
25 ௨௫ அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான்.
and Rephah son: child his and Resheph (son: child his *X*) and Telah son: child his and Tahan son: child his
26 ௨௬ இவனுடைய மகன் லாதான்; இவனுடைய மகன் அம்மீயூத்; இவனுடைய மகன் எலிஷாமா.
Ladan son: child his Ammihud son: child his Elishama son: child his
27 ௨௭ இவனுடைய மகன் நூன்; இவனுடைய மகன் யோசுவா.
Nun son: child his Joshua son: child his
28 ௨௮ அவர்களுடைய சொந்த நிலங்களும், தங்குமிடங்களும், கிழக்கே இருக்கிற நாரானும், மேற்கே இருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாவரையுள்ள அதின் கிராமங்களும்,
and possession their and seat their Bethel Bethel and daughter: village her and to/for east Naaran and to/for west Gezer and daughter: village her and Shechem and daughter: village her till Gaza and daughter: village her
29 ௨௯ மனாசே கோத்திரத்தின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இந்த இடங்களில் இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் சந்ததியர்கள் குடியிருந்தார்கள்.
and upon hand: power son: descendant/people Manasseh Beth-shean Beth-shean and daughter: village her Taanach and daughter: village her Megiddo and daughter: village her Dor and daughter: village her in/on/with these to dwell son: descendant/people Joseph son: child Israel
30 ௩0 ஆசேரின் மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராள்.
son: child Asher Imnah and Ishvah and Ishvi and Beriah and Serah sister their
31 ௩௧ பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
and son: child Beriah Heber and Malchiel he/she/it father (Birzaith *Q(K)*)
32 ௩௨ ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஓதாமையும், இவர்களுடைய சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
and Heber to beget [obj] Japhlet and [obj] Shomer and [obj] Hotham and [obj] Shua sister their
33 ௩௩ யப்லேத்தின் மகன்கள் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
and son: child Japhlet Pasach and Bimhal and Ashvath these son: child Japhlet
34 ௩௪ சோமேரின் மகன்கள் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.
and son: child Shemer `brother` (and Rohgah and Jehubbah *Q(K)*) and Aram
35 ௩௫ அவனுடைய சகோதரனாகிய ஏலேமின் மகன்கள் சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
and son: child Helem brother: male-sibling his Zophah and Imna and Shelesh and Amal
36 ௩௬ சோபாக்கின் மகன்கள் சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
son: child Zophah Suah and Harnepher and Shual and Beri and Imrah
37 ௩௭ பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.
Bezer and Hod and Shamma and Shilshah and Ithran and Beera
38 ௩௮ யெத்தேரின் மகன்கள் எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
and son: child Jether Jephunneh and Pispa and Ara
39 ௩௯ உல்லாவின் மகன்கள் ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.
and son: child Ulla Arah and Hanniel and Rizia
40 ௪0 ஆசேரின் சந்ததிகளாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தலைவர்களும் தெரிந்துகொள்ளப்பட்ட பெலசாலிகளும், பிரபுக்களின் தலைவர்களுமாக இருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர்.
all these son: descendant/people Asher head: leader house: household [the] father to purify mighty man strength: soldiers head: leader [the] leader and to enroll they in/on/with army: duty in/on/with battle number their human twenty and six thousand