< 1 நாளாகமம் 3 >

1 தாவீதுக்கு எப்ரோனில் பிறந்த மகன்கள்: யெஸ்ரெயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் முதலில் பிறந்தவன்; கர்மேலின் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் இரண்டாம் மகன்.
EIA hoi na keikikane a Davida, i hanau nana ma Heberona; o Amenona ka makahiapo, na Ahinoama no Iezereela; o Daniela ka lua, na Abigaila no Karamela;
2 கெசூரின் ராஜாவாகிய தல்மாயின் மகள் மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் மகன்; ஆகீத் பெற்ற அதோனியா நான்காம் மகன்.
A o ke kolu o Abesaloma ke keiki a Maaka a ke kaikamahine a Talemai ke alii o Gasura; o ka ha, o Adoniia ke keiki a Hagita;
3 அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் மகன்; அவனுடைய மனைவியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் மகன்.
O ka lima, o Sepatia na Abitala; o ke ono, o Itereama na Egela ka Davida wahine.
4 இந்த ஆறு மகன்கள் அவனுக்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆட்சிசெய்தான்; எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான்.
Ua hanau nana keia poe eono ma Heberona; ilaila oia i alii ai i na makahiki ehiku a me na malama keu eono: a ma Ierusalema hoi oia i alii iho ai i na makahiki he kanakolu a me kumamakolu.
5 எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் மகளாகிய பத்சேபாளிடம் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நான்குபேர்களும்,
Eia hoi ka poe i hanau nana ma Ierusalema; o Simea, o Sobaba, o Natana, a o Solomona, eha, na Batesua na ke kaikamahine a Amiela.
6 இப்பார், எலிஷாமா, எலிப்பெலேத்,
O Ibehara hoi, o Elisama, o Elipeleta,
7 நோகா, நெப்பேக், யப்பியா,
O Noga, o Nepega, o Iapia.
8 எலிஷாமா, எலியாதா, எலிப்பெலேத் என்னும் ஒன்பதுபேர்களுமே.
O Elisama, o Eliada, a o Elipeleta, eiwa.
9 மறுமனையாட்டிகளின் மகன்களையும் இவர்களுடைய சகோதரியாகிய தாமாரையும்தவிர, இவர்களெல்லோரும் தாவீதின் மகன்கள்.
O lakou na keiki a pau a Davida, he okoa na keikikane a na haiawahine, a o Tamara ko lakou kaikuwahine.
10 ௧0 சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; இவனுடைய மகன் அபியா; இவனுடைய மகன் ஆசா; இவனுடைய மகன் யோசபாத்.
A o ke keikikane a Solomona, oia o Rehoboama, o Abia kana keiki, o Asa kana keiki, o Iehosapata kana keiki,
11 ௧௧ இவனுடைய மகன் யோராம்; இவனுடைய மகன் அகசியா; இவனுடைய மகன் யோவாஸ்.
O Iorama kana keiki, o Ahazia kana keiki, o Ioasa kana keiki,
12 ௧௨ இவனுடைய மகன் அமத்சியா; இவனுடைய மகன் அசரியா; இவனுடைய மகன் யோதாம்.
O Amazia kana keiki, o Azaria kana keiki, o Iotama kana keiki,
13 ௧௩ இவனுடைய மகன் ஆகாஸ்; இவனுடைய மகன் எசேக்கியா; இவனுடைய மகன் மனாசே.
O Ahaza kana keiki, o Hezekia kana keiki, o Manase kana keiki,
14 ௧௪ இவனுடைய மகன் ஆமோன்; இவனுடைய மகன் யோசியா.
O Amona kana keiki, o Iosia kana keiki
15 ௧௫ யோசியாவின் மகன்கள், முதலில் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் மகனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் மகனும், சல்லூம் என்னும் நான்காம் மகனுமே.
Eia na keikikane a Iosia; o Iohanana ka hanau mua, o Iehoiakima ka lua, o Zedekia ke kolu; a o Saluma ka ha.
16 ௧௬ யோயாக்கீமின் மகன்கள் எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
Eia na keikikane a Iehoiakima, o Iekonia kana keiki, o Zedekia kana keiki.
17 ௧௭ கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் செயல்தியேல்,
O na keikikane a Iekonia, o Asira; o Salatiela kana keiki
18 ௧௮ மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
O Malekirama hoi, o Pedaia, o Senazara, o Iekamia, o Hosama, a o Nedabia.
19 ௧௯ பெதாயாவின் மகன்கள் செருபாபேல், சீமேயி என்பவர்கள்; செருபாபேலின் மகன்கள் மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.
A o na keikikane a Pedaia, o Zerubabela, a o Simei; o na keikikane a Zerubabela, o Mesulama, a o Hanania; a o Selomita, ko laua kaikuwahine.
20 ௨0 அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேர்களுமே.
O Hasuba hoi, o Ohela, o Berekia, o Hasadia, a o Iusabaheseda, elima.
21 ௨௧ அனனியாவின் மகன்கள், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய மகன் ரெபாயா; இவனுடைய மகன் அர்னான்; இவனுடைய மகன் ஒபதியா; இவனுடைய மகன் செக்கனியா.
A na keikikane a Hanania; o Peletia, a o Iesaia; a o na keikikane a Repaia, o na keikikane a Arenana, o na keikikane a Obadia, o na keikikane a Sekania.
22 ௨௨ செக்கனியாவின் மகன்கள் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் மகன்கள் அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.
O ke keikikane a Sekania; o Semaia; a o na keikikane a Semaia; o Hatusa, o Igeala, o Baria, o Nearia, a o Sapata, eono.
23 ௨௩ நெயாரியாவின் மகன்கள் எலியோனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூன்றுபேர்.
A o na keikikane a Nearia; o Elioenai, o Hezekia, a o Azarikama, ekolu.
24 ௨௪ எலியோனாவின் ஏழு மகன்கள் ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்பவர்கள்.
A o na keikikane a Elioenai; o Hodaia, o Eliasiba, o Pelaia, o Akuba, o Iohanana, o Delaia, a o Anani, ehiku.

< 1 நாளாகமம் 3 >