< 1 நாளாகமம் 3 >
1 ௧ தாவீதுக்கு எப்ரோனில் பிறந்த மகன்கள்: யெஸ்ரெயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் முதலில் பிறந்தவன்; கர்மேலின் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் இரண்டாம் மகன்.
Ovo su Davidovi sinovi koji mu se rodiše u Hebronu: prvenac Amnon od Jizreelke Ahinoame, drugi Daniel od Karmelke Abigajle,
2 ௨ கெசூரின் ராஜாவாகிய தல்மாயின் மகள் மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் மகன்; ஆகீத் பெற்ற அதோனியா நான்காம் மகன்.
treći Abšalom, sin Maake, kćeri Talmaja, gešurskoga kralja, četvrti Adonija, sin Hagitin,
3 ௩ அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் மகன்; அவனுடைய மனைவியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் மகன்.
peti Šefatja od Abitale, šesti Jitream od njegove žene Egle.
4 ௪ இந்த ஆறு மகன்கள் அவனுக்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆட்சிசெய்தான்; எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான்.
Šest mu se sinova rodilo u Hebronu, gdje je kraljevao sedam godina i šest mjeseci; a trideset je i tri godine kraljevao u Jeruzalemu.
5 ௫ எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் மகளாகிய பத்சேபாளிடம் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நான்குபேர்களும்,
Ovi mu se sinovi rodiše u Jeruzalemu: Šimeja, Šobab, Natan i Salomon; četiri od Bat-Šebe, kćeri Amielove.
6 ௬ இப்பார், எலிஷாமா, எலிப்பெலேத்,
Jibhar, Elišama, Elifalet,
7 ௭ நோகா, நெப்பேக், யப்பியா,
Nogah, Nefeg, Jafija,
8 ௮ எலிஷாமா, எலியாதா, எலிப்பெலேத் என்னும் ஒன்பதுபேர்களுமே.
Elišama, Elijada, Elifelet: devet.
9 ௯ மறுமனையாட்டிகளின் மகன்களையும் இவர்களுடைய சகோதரியாகிய தாமாரையும்தவிர, இவர்களெல்லோரும் தாவீதின் மகன்கள்.
Sve Davidovi sinovi osim inočkih sinova i njihove sestre Tamare.
10 ௧0 சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; இவனுடைய மகன் அபியா; இவனுடைய மகன் ஆசா; இவனுடைய மகன் யோசபாத்.
Salomonov je sin bio Roboam, njegov sin Abija, njegov sin Asa, njegov sin Jošafat,
11 ௧௧ இவனுடைய மகன் யோராம்; இவனுடைய மகன் அகசியா; இவனுடைய மகன் யோவாஸ்.
njegov sin Joram, njegov sin Ahazja, njegov sin Joaš,
12 ௧௨ இவனுடைய மகன் அமத்சியா; இவனுடைய மகன் அசரியா; இவனுடைய மகன் யோதாம்.
njegov sin Amasja, njegov sin Azarja, njegov sin Jotam,
13 ௧௩ இவனுடைய மகன் ஆகாஸ்; இவனுடைய மகன் எசேக்கியா; இவனுடைய மகன் மனாசே.
njegov sin Ahaz, njegov sin Ezekija, njegov sin Manaše,
14 ௧௪ இவனுடைய மகன் ஆமோன்; இவனுடைய மகன் யோசியா.
njegov sin Amon, njegov sin Jošija.
15 ௧௫ யோசியாவின் மகன்கள், முதலில் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் மகனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் மகனும், சல்லூம் என்னும் நான்காம் மகனுமே.
Jošijini su sinovi bili: prvenac Johanan, drugi Jojakim, treći Sidkija, četvrti Šalum.
16 ௧௬ யோயாக்கீமின் மகன்கள் எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
Jojakimovi su sinovi bili: Jekonija, njegov sin, i Sidkija, njegov sin.
17 ௧௭ கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் செயல்தியேல்,
Sinovi sužnja Jekonje bili su Šealtiel, njegov sin,
18 ௧௮ மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
Malkiram, Pedaja, Šenasar, Jekamja, Jošama i Nebadja.
19 ௧௯ பெதாயாவின் மகன்கள் செருபாபேல், சீமேயி என்பவர்கள்; செருபாபேலின் மகன்கள் மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.
Pedajini su sinovi bili: Zerubabel i Šimej; Zerubabelovi sinovi: Mešulam i Hananija, i sestra im Šelomita.
20 ௨0 அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேர்களுமே.
Hašuba, Ohel, Berekja, Hasadja i Jušab-Hesed, njih petorica.
21 ௨௧ அனனியாவின் மகன்கள், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய மகன் ரெபாயா; இவனுடைய மகன் அர்னான்; இவனுடைய மகன் ஒபதியா; இவனுடைய மகன் செக்கனியா.
Hananijini su sinovi bili: Pelatja i Jišaja, Refajini sinovi, Arnanov sin, Obadjin sin, Šekanijin sin.
22 ௨௨ செக்கனியாவின் மகன்கள் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் மகன்கள் அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.
Šekanijini su sinovi bili: Šemaja, a Šemajini su sinovi bili: Hatuš, Jigal, Barijah, Nearja i Šafat, šestorica.
23 ௨௩ நெயாரியாவின் மகன்கள் எலியோனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூன்றுபேர்.
Nearjini su sinovi bili Elijoenaj, Ezekija i Azrikam, trojica.
24 ௨௪ எலியோனாவின் ஏழு மகன்கள் ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்பவர்கள்.
Elijoenajevi su sinovi bili Hodavja, Elijašib, Felaja, Akub, Johanan, Delaja i Anani, sedmorica.