< 1 நாளாகமம் 25 >
1 ௧ மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருக்களாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை, தாவீதும் தேவாலய சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் செய்கைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையாவது:
மேலும் தாவீது தனது படைத் தளபதிகளுடன் ஒன்றுசேர்ந்து ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை யாழ், வீணை, கைத்தாளம் ஆகியவற்றை இசைப்பதற்கும், இறைவாக்கு உரைக்கிற பணிக்குமென வேறுபிரித்தான். இந்த பணியைச் செய்த மனிதரின் பெயர் பட்டியல் இதுவே:
2 ௨ ராஜாவுடைய கட்டளையின்படித் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பினிடத்திலிருக்கிற, ஆசாப்பின் மகன்களில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
ஆசாப்பின் மகன்களில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அசரேலா என்பவர்கள், ஆசாப்பின் மகன்கள் ஆசாப்பின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் அரசனின் மேற்பார்வையின்கீழ் இறைவாக்கு உரைத்தனர்.
3 ௩ யெகோவாவைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனினிடம் சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் மகன்களாகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
எதுத்தூனின் மகன்களில் கெதலியா, செரீ, எஷாயா, சீமேய், அஷாபியா, மத்தத்தியா என்னும் ஆறுபேர் தங்கள் தகப்பன் எதுத்தூனின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் யாழ் மீட்டி நன்றியுடன் யெகோவாவைத் துதித்து இறைவாக்கு உரைத்தனர்.
4 ௪ கொம்பைத் தொனிக்கச்செய்ய, தேவனுடைய காரியத்தில் ராஜாவுக்கு தீர்க்கதரிசியான வாலிபனாகிய ஏமானின் மகன்களான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.
ஏமானின் மகன்கள் புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுயேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பேக்காஷா, மலோத்தி, ஒத்தீர், மகாசியோத் ஆகியோர்.
5 ௫ இவர்கள் எல்லோரும் ஏமானின் மகன்களாக இருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினான்கு மகன்களையும் மூன்று மகள்களையும் கொடுத்தார்.
இவர்கள் எல்லோரும் அரசனின் தரிசனக்காரனான ஏமானின் மகன்கள். இவர்களை இறைவன் தம்மை மகிமைப்படுத்தும்படி, தமது வாக்குத்தத்தத்தின் மூலம் அவனுக்குக் கொடுத்தார். இறைவன் ஏமானுக்கு பதினான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் கொடுத்தார்.
6 ௬ இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்படிக் யெகோவாவுடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருக்கள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மார்களாகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்களிடத்தில் இருந்தார்கள்.
இவர்கள் எல்லோரும் யெகோவாவினுடைய ஆலயத்தின் இசைக்காகத் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் யாழ், வீணை, கைத்தாளம் போன்ற இசைக்கருவிகளை மீட்பதற்காக இறைவனுடைய ஆலயப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆசாப்பும், எதுத்தூனும், ஏமானும் அரசனின் மேற்பார்வையின்கீழ் இருந்தார்கள்.
7 ௭ யெகோவாவைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, திறமைவாய்ந்தவர்கள் தங்களுடைய சகோதரர்களோடு அவர்கள் எண்ணிக்கைக்கு இருநூற்று எண்பத்தெட்டுப்பேர்களாக இருந்தார்கள்.
இவர்கள் யாவரும் யெகோவாவின் பாடல்களைப் பாடுவதில் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், திறமைசாலிகளுமாக இருந்தார்கள். தங்கள் உறவினர்களுடன் அவர்கள் இருநூற்று எண்பத்தெட்டுபேராய் இருந்தனர்.
8 ௮ அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும், மாணவனும், சரிசமமாக முறைவரிசைக்காக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.
அவர்கள் சிறியவர்கள், பெரியவர்கள், ஆசிரியர், மாணவர்கள் என்ற வேறுபாடின்றி ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகளுக்கென சீட்டுப்போட்டார்கள்.
9 ௯ முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், இரண்டாவது கெதலியா குடும்பத்தில், அவனுடைய சகோதரர்கள், அவனுடைய மகன்கள் என்றும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
முதலாவது சீட்டு ஆசாபின் வம்சமான யோசேப்பிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. இரண்டாவது சீட்டு கெதலியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கு விழுந்தது.
10 ௧0 மூன்றாவது சக்கூர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
மூன்றாவது சீட்டு சக்கூருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
11 ௧௧ நான்காவது இஸ்ரி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
நான்காவது சீட்டு இஸ்ரிக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
12 ௧௨ ஐந்தாவது நெதானியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
ஐந்தாவது சீட்டு நெதானியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
13 ௧௩ ஆறாவது புக்கியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
ஆறாவது சீட்டு புக்கியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
14 ௧௪ ஏழாவது எசரேலா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
ஏழாவது சீட்டு எசரேலாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
15 ௧௫ எட்டாவது எஷாயா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
எட்டாவது சீட்டு எஷாயாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
16 ௧௬ ஒன்பதாவது மத்தனியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
ஒன்பதாவது சீட்டு மத்தனியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
17 ௧௭ பத்தாவது சிமேயா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பத்தாவது சீட்டு சீமேயிவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
18 ௧௮ பதினோராவது அசாரியேல், அவனுடைய மகன்கள் அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பதினோராவது சீட்டு அசாரியேலுக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
19 ௧௯ பன்னிரண்டாவது அஷாபியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பன்னிரெண்டாவது சீட்டு அஷாபியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
20 ௨0 பதின்மூன்றாவது சுபவேல், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பதிமூன்றாவது சீட்டு சுபயேலிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
21 ௨௧ பதினான்காவது மத்தித்தியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பதினான்காவது சீட்டு மத்தத்தியாவிற்கும் அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
22 ௨௨ பதினைந்தாவது எரேமோத், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பதினைந்தாவது சீட்டு எரிமோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
23 ௨௩ பதினாறாவது அனனியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பதினாறாவது சீட்டு அனனியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
24 ௨௪ பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பதினேழாவது சீட்டு யோஸ்பேக்காஷாவிற்கும் அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
25 ௨௫ பதினெட்டாவது அனானி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பதினெட்டாவது சீட்டு அனானிக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
26 ௨௬ பத்தொன்பதாவது மலோத்தி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
பத்தொன்பதாவது சீட்டு மலோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
27 ௨௭ இருபதாவது எலியாத்தா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
இருபதாவது சீட்டு எலியாத்தாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
28 ௨௮ இருபத்தோராவது ஒத்திர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
இருபத்தோராவது சீட்டு ஒத்தீருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
29 ௨௯ இருபத்திரண்டாவது கிதல்தி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
இருபத்திரெண்டாவது சீட்டு கிதல்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
30 ௩0 இருபத்துமூன்றாவது மகாசியோத், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
இருபத்துமூன்றாவது சீட்டு மகாசியோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
31 ௩௧ இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும் விழுந்தது.
இருபத்துநான்காவது சீட்டு ரொமந்தியேசருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.