< 1 நாளாகமம் 21 >

1 சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி, இஸ்ரவேலைக் கணக்கெடுக்க தாவீதைத் தூண்டிவிட்டது.
Ɔbonsam sɔre tiaa Israel, maa Dawid kan Israelfo.
2 அப்படியே தாவீது யோவாபையும், படைத்தளபதிகளையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதுவங்கி தாண்வரை இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்.
Dawid hyɛɛ Yoab ne nʼasahene sɛ, “Monkan nnipa a wɔwɔ asase yi so nyinaa efi Beer-Seba a ɛwɔ anafo fam kosi Dan a ɛwɔ atifi fam, na momfa wɔn dodow mmrɛ me, na ɛmma minhu wɔn ano.”
3 அப்பொழுது யோவாப்: யெகோவாவுடைய மக்கள் இப்போது இருக்கிறதைவிட நூறு மடங்காக அவர் பெருகச்செய்வாராக; ஆனாலும் ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, அவர்கள் எல்லோரும் என்னுடைய ஆண்டவனுக்கு பணிவிடை செய்வதில்லையா? என்னுடைய ஆண்டவன் இதை ஏன் விசாரிக்கவேண்டும்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது எதற்காக நடக்கவேண்டும் என்றான்.
Na Yoab kae se, “Awurade mmɔ ne nkurɔfo no dodow ho mpɛn ɔha ɔha! Na me wura, adɛn nti na wopɛ sɛ woyɛ saa? Wɔn nyinaa nyɛ wʼasomfo ana? Adɛn nti na ɛsɛ sɛ woyɛ ma Israel yɛ bɔne?”
4 யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலோங்கியதால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமிற்கு வந்து,
Nanso ɔhene no kae se, nea ɛte biara ɛsɛ sɛ Yoab kan nnipa no. Enti Yoab kyinkyinii Israel nyinaa kan nnipa no. Na ɔsan baa Yerusalem
5 போர் வீரர்களைக் கணக்கெடுத்து, எண்ணிக்கையை தாவீதிடம் கொடுத்தான்; இஸ்ரவேலெங்கும் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேர்களும், யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் நான்குலட்சத்து எழுபதாயிரம்பேர்களும் இருந்தார்கள்.
bɛkaa nnipa no dodow kyerɛɛ Dawid. Na wɔn dodow yɛ mmarima ɔpepem baako ne mpem ɔha a wɔaso ɔsakɔ wɔ Israel ne mpem ahannan aduɔson wɔ Yuda.
6 ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாக இருந்ததால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய கணக்கெடுப்பிற்குள் வராதபடி எண்ணாமற்போனான்.
Nanso Yoab amfa Lewi ne Benyamin mmusuakuw anka nnipakan no ho, efisɛ na nea ɔhene ahyɛ no sɛ ɔnyɛ no yɛ no ahometew.
7 இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியால் அவர் இஸ்ரவேலைத் தண்டித்தார்.
Onyankopɔn ampɛ nnipakan no koraa, enti ɔtwee Israel aso wɔ ho.
8 தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; பெரிய முட்டாள்தனமாக செய்தேன் என்றான்.
Na Dawid ka kyerɛɛ Onyankopɔn se, “Mayɛ bɔne kɛse. Anka ɛnsɛ sɛ mekan nnipa no. Mesrɛ wo, fa me nkwaseade a mayɛ no kyɛ me.”
9 அப்பொழுது யெகோவா, தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்துடனே பேசி,
Na Awurade kasa kyerɛɛ Gad a ɔyɛ Dawid ɔdehufo no se,
10 ௧0 நீ தாவீதிடம் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.
“Kɔ na kɔka kyerɛ Dawid se, ‘Sɛnea Awurade se ni: Merema wo nsɛm ahorow abiɛsa. Paw emu baako na menyɛ ntia wo.’”
11 ௧௧ அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி:
Enti Gad baa Dawid nkyɛn bɛkae se, “Sɛnea Awurade se ni: ‘Paw emu nea wopɛ:
12 ௧௨ மூன்று வருடத்துப் பஞ்சமோ? அல்லது உன்னுடைய எதிரியின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன்னுடைய எதிரிகளுக்கு முன்பாக ஓடிப்போகச் செய்யும் மூன்றுமாதத் துரத்துதலோ? அல்லது மூன்றுநாட்கள் யெகோவாவுடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் அழிவு உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் யெகோவாவுடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று யெகோவா சொல்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.
mfe abiɛsa a ɔkɔm kɛse bɛba anaa asram abiɛsa a wʼatamfo bekunkum mo anaa nnansa a ɔyaredɔm a ano yɛ den yiye a, Awurade bɔfo nam so de ɔsɛe bɛba Israel asase so.’ Afei dwene eyi ho, na ma minhu mmuae ko a memfa nkɔma Awurade.”
13 ௧௩ அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் யெகோவாவுடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான்.
Dawid buaa Gad se, “Mewɔ ahohiahia mu. Ma mentɔ Awurade nsam, efisɛ nʼahummɔbɔ no so. Mma me nkɔtɔ nnipa nsam.”
14 ௧௪ ஆகையால் யெகோவா இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரச்செய்தார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள்.
Na Awurade maa ɔyaredɔm baa Israel so, maa nnipa mpem aduɔson wuwui.
15 ௧௫ எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கும்போது யெகோவா பார்த்து, அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, அழிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; யெகோவாவுடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திற்கு அருகில் நின்றான்.
Afei, Onyankopɔn somaa ɔsoro ɔbɔfo sɛ ɔnkɔsɛe Yerusalem. Na bɔfo no reyɛ no, Awurade nyaa ahummɔbɔ ka kyerɛɛ owu ɔbɔfo no se, “Gyae! Ɛno ara dɔɔso!” Saa bere no na ɔbɔfo no gyina Yebusini Arauna awiporowbea hɔ.
16 ௧௬ தாவீது தன்னுடைய கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற யெகோவாவுடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன்னுடைய கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் சாக்கைப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
Dawid pagyaw nʼani huu sɛ Awurade bɔfo no gyina ɔsoro ne asase ntam a, watwe nʼafoa de akyerɛ Yerusalem so. Enti Dawid ne Israel mpanyimfo furaa atweaatam de kyerɛɛ wɔn ahoyeraw, na wɔhwehwee fam de wɔn anim butubutuw hɔ.
17 ௧௭ தாவீது தேவனை நோக்கி: மக்களை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவம் செய்தேன்; தீங்கு நடக்கச்செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என்னுடைய தேவனாகிய யெகோவாவே, தண்டிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய மக்களுக்கு விரோதமாக இராமல், எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டிற்கும் விரோதமாக இருப்பதாக என்றான்.
Na Dawid ka kyerɛɛ Onyankopɔn se, “Me na mede nnipakan no ho asɛm bae! Me ne obi a mayɛ bɔne na mafom. Saa nkurɔfo yi de, ɛso bi nna wɔn so. Dɛn na wɔayɛ? Awurade me Nyankopɔn, ma wʼabufuw mmra me ne me fifo so, na nsɛe wo nkurɔfo.”
18 ௧௮ அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று யெகோவாவுடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.
Na Awurade bɔfo no ka kyerɛɛ Gad se ɔnka nkyerɛ Dawid mma onsi afɔremuka mma Awurade wɔ Yebusini Arauna awiporowbea hɔ.
19 ௧௯ அப்படியே தாவீது யெகோவாவின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படி போனான்.
Na Dawid yɛɛ nea Awurade nam Gad so ka kyerɛɛ no no.
20 ௨0 ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நான்கு மகன்களும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளிந்துகொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான்.
Arauna a saa bere no na nʼani abere reporow nʼatoko so no dan ne ho huu ɔbɔfo no wɔ hɔ. Ne mmabarima baanan a na wɔka ne ho wɔ hɔ no guan kohintawee.
21 ௨௧ தாவீது ஒர்னானிடம் வந்தபோது, ஒர்னான் கவனித்து தாவீதைப் பார்த்து, அவனுடைய களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைவரை குனிந்து தாவீதை வணங்கினான்.
Bere a Arauna huu sɛ ɔhene Dawid reba awiporowbea hɔ no, ofi hɔ kɔkotow nʼanim.
22 ௨௨ அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி அதை எனக்குக் கொடு; வாதை மக்களைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதை உரிய விலைக்குக் கொடு என்றான்.
Na Dawid ka kyerɛɛ Arauna se, “Tɔn awiporowbea yi ma me sɛnea ne bo te. Na mesi afɔremuka ama Awurade wɔ hɔ sɛnea obesiw ɔyaredɔm no ano.”
23 ௨௩ ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் அதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்க தகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், உணவுபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான்.
Arauna ka kyerɛɛ Dawid se, “Fa, me wura, na fa yɛ nea wopɛ. Anantwi a wode bɛbɔ afɔre ni. Wubetumi de awiporowbea nnua yi ayɛ nnyina de asɔ gya wɔ afɔremuka no so. Fa atoko no nso bɔ atoko afɔre. Mede ne nyinaa bɛma wo.”
24 ௨௪ அதற்கு தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாக வாங்கி, யெகோவாவுக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை உரிய விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,
Na ɔhene no buaa Arauna se, “Dabi! Mepɛ sɛ mitua nea ɛfata ma wo. Merentumi nnye wʼagyapade mfa mma Awurade. Meremmɔ ɔhyew afɔre a memmɔɔ ho ka.”
25 ௨௫ தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் எடையுள்ள பொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
Enti Dawid tuaa sikakɔkɔɔ kilogram ason maa Arauna, de tɔɔ awiporowbea no.
26 ௨௬ அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்திரவு கொடுத்ததுமல்லாமல்,
Dawid sii afɔremuka wɔ hɔ maa Awurade, bɔɔ ɔhyew afɔre ne asomdwoe afɔre wɔ so. Na Dawid bɔɔ mpae no, Awurade tiee no, nam so de ogya fi soro bɛhyew afɔrebɔde a ɛwɔ afɔremuka no so no.
27 ௨௭ தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்.
Afei, Awurade kasa kyerɛɛ ɔbɔfo no ma ɔsan de nʼafoa no hyɛɛ ne boha mu.
28 ௨௮ எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே யெகோவா தனக்கு பதில் சொன்னதை தாவீது அந்த காலத்திலே கண்டு அங்கேயே பலியிட்டான்.
Bere a Dawid huu sɛ Awurade atie ne mpaebɔ no, ɔbɔɔ afɔre pii wɔ Yebusini Arauna awiporowbea hɔ.
29 ௨௯ மோசே வனாந்திரத்தில் உண்டாக்கின யெகோவா தங்குமிடமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
Saa bere no na Awurade Ahyiae Ntamadan ne afɔremuka a Mose sii wɔ sare so hɔ no sisi Gibeon sorɔnsorɔmmea hɔ.
30 ௩0 தாவீது யெகோவாவுடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கமுடியாமலிருந்தது.
Nanso Dawid antumi ankɔ hɔ ankobisa Onyankopɔn ase, efisɛ afoa a Awurade bɔfo no twee no bɔɔ no hu.

< 1 நாளாகமம் 21 >