< 1 நாளாகமம் 18 >

1 இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தர்களைத் தாக்கி, அவர்களைத் தோற்கடித்து, காத் பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தர்களின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.
And it came to pass after this, that David smote the Philistines, and humbled them; and he took Gath and its dependent towns out of the hand of the Philistines.
2 அவன் மோவாபியர்களையும் தோற்கடித்ததால், மோவாபியர்கள் தாவீதிற்கு பணிவிடை செய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
And he smote Moab, and the Moabites became David's servants, bringing presents.
3 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐப்பிராத் நதி அருகில் தன்னுடைய இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் அருகில் தோற்கடித்தான்.
David also smote Hadar'ezer the king of Zobah, at Chamath, as he went to establish his dominion at the river Euphrates.
4 அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும் இருபதாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டித்துப்போட்டான்.
And David captured from him a thousand chariots, and seven thousand horsemen, and twenty thousand men on foot; and David hamstringed all the chariot-teams, but reserved of them a hundred chariot-teams.
5 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்கு பட்டணத்தார்களாகிய சீரியர்கள் வந்தார்கள்; தாவீது சீரியர்களில் இருபத்திரெண்டாயிரம்பேரை வெட்டிப்போட்டு,
And the Syrians of Damascus came to aid Hadar'ezer the king of Zobah, when David slew of the Syrians two and twenty thousand men.
6 தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே படைகளை வைத்தான்; சீரியர்கள் தாவீதுக்கு பணிவிடைசெய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.
Then did David put [garrisons] in Syria of Damascus, and the Syrians became unto David servants, bringing presents. And the Lord helped David withersoever he went.
7 ஆதாரேசரின் வேலைக்காரர்களுக்கு இருந்த பொன்கேடகங்களை தாவீது எடுத்து, அவைகளை எருசலேமிற்குக் கொண்டுவந்தான்.
And David took the quivers of gold that were on the servants of Hadar'ezer, and brought them to Jerusalem.
8 ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலத் தொட்டியையும் தூண்களையும் வெண்கலப் பொருட்களையும் உண்டாக்கினான்.
And from Tibchath, and from Kun, cities of Hadar'ezer, did David take exceedingly much copper; thereof made Solomon the copper sea, and the pillars, and the vessels of copper.
9 தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் தோற்கடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,
And when To'u the king of Chamath heard that David had smitten all the host of Hadar'ezer the king of Zobah:
10 ௧0 அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்செய்து, அவனைத் தோற்கடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தன்னுடைய மகனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான எல்லாவித பொருட்களையும், அவனிடத்திற்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம் செய்கிறவனாக இருந்தான்.
Then did he send Hadoram his son unto king David, to ask him after his well-being, and to bless him, because he had fought against Hadar'ezer, and smitten him: for Hadar'ezer had been engaged in wars with To'u; and [he had with him] all manner of vessels of gold and silver and copper.
11 ௧௧ அந்த பொருட்களையும், தான் ஏதோமியர்கள், மோவாபியர்கள், அம்மோனிய மக்கள், பெலிஸ்தர்கள், அமலேக்கியர்கள் என்னும் எல்லா தேசங்களின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையுங்கூட தாவீது ராஜா யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.
Also these did king David sanctify unto the Lord, with the silver and the gold that he had carried away from all the nations, from Edom, and from Moab, and from the children of 'Ammon, and from the Philistines, and from 'Amalek.
12 ௧௨ செருயாவின் மகன் அபிசாயி உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெட்டாயிரம் ஏதோமியர்களைத் தோற்கடித்தான்.
And Abshai the son of Zeruyah smote of the Edomites in the valley of salt eighteen thousand [men].
13 ௧௩ ஆகையால் தாவீது ஏதோமிலே படைகளை வைத்தான்; ஏதோமியர்கள் எல்லோரும் அவனுக்குப் பணிவிடை செய்கிறவர்களானார்கள்; தாவீது போன இடங்களிலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.
And he put garrisons in Edom, and all the Edomites became servants unto David. And the Lord helped David withersoever he went.
14 ௧௪ தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய மக்களுக்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான்.
And David reigned over all Israel, and he did what is just and right unto all his people.
15 ௧௫ செருயாவின் மகன் யோவாப் இராணுவத்தலைவனாக இருந்தான்; அகிலூதின் மகனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான்.
And Joab the son of Zeruyah was over the army, and Jehoshaphat the son of Achilud, recorder.
16 ௧௬ அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அபிமெலேக்கும் ஆசாரியர்களாக இருந்தார்கள்; சவிஷா எழுத்தாளனாக இருந்தான்.
And Zadok the son of Achitub, and Abimelech the son of Ebyathar, were [the] priests; and Shavsha was scribe;
17 ௧௭ யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும் தலைவனாக இருந்தான்; தாவீதின் மகன்கள் ராஜாவிடம் முன்னணி ஆலோசகர்களாக இருந்தார்கள்.
And Benayahu the son of Jehoyada' was over the Kerethites and the Pelethites; and the sons of David were the first at the side of the king.

< 1 நாளாகமம் 18 >