< 1 நாளாகமம் 14 >
1 ௧ தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவற்குக் கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்.
Then Hiram, king of Tyre, sent messengers to David along with cedar timber, stonemasons, and carpenters to build him a palace.
2 ௨ யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஏற்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய மக்களுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
In this way David realized that the Lord had placed him on the throne as king of Israel and had blessed by supporting his kingdom for the sake of the Lord's people Israel.
3 ௩ எருசலேமிலே தாவீது பின்னும் அநேக பெண்களைத் திருமணம்செய்து, பின்னும் மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
David married more wives in Jerusalem, and had more sons and daughters.
4 ௪ எருசலேமிலே அவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
This is a list of the names of the children he had in Jerusalem: Shammua, Shobab, Nathan, Solomon,
5 ௫ இப்பார், எலிசூவா, எல்பெலேத்,
Ibhar, Elishua, Elpelet,
6 ௬ நோகா, நெப்பேக், யப்பியா,
Nogah, Nepheg, Japhia,
7 ௭ எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
Elishama, Beeliada, and Eliphelet.
8 ௮ தாவீது அனைத்து இஸ்ரவேலர்களின்மேலும் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டதைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்கள் எல்லோரும் தாவீதைத் தேட வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டான்.
When the Philistines heard that David had been anointed king over all of Israel, they gathered their whole army to go after him. But David heard they were coming and went out to confront them.
9 ௯ பெலிஸ்தர்கள் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
The Philistines arrived and raided the valley of Rephaim.
10 ௧0 பெலிஸ்தர்களுக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, யெகோவா: போ, அவர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
David consulted God, asking “Shall I go and attack the Philistines? Will you make me victorious over them?” “Go ahead,” the Lord told him, “I will make you victorious over them.”
11 ௧௧ அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களைத் தோற்கடித்து: தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல, தேவன் என்னுடைய கையால் என்னுடைய எதிரிகளை உடைந்து ஓடச்செய்தார் என்றான்; அதினால் அந்த இடத்திற்கு பாகால்பிராசீம் என்னும் பெயரிட்டார்கள்.
So David attacked and defeated them there at Baal-perazim. “God used me to defeat my enemies like a torrent of water that bursts out,” he declared. That's why the place was named Baal-perazim.
12 ௧௨ அங்கே அவர்கள் தங்களுடைய தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன.
The Philistines had left their gods behind, so David gave orders that they should be burned.
13 ௧௩ பெலிஸ்தர்கள் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
However, the Philistines returned and made another raid on the valley.
14 ௧௪ அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடம் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களைச் சுற்றிவளைத்து, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
David consulted God again. “Don't make a frontal attack,” God told him. “Instead go around behind them and attack them in front of the balsam trees.
15 ௧௫ முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.
As soon as you hear the sound of marching in the tops of the balsam trees, go and attack for the Lord has gone before you to strike down the Philistine army.”
16 ௧௬ தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் கேசேர்வரைத் தோற்கடித்தார்கள்.
So David did what God told him, striking down the Philistine army all the way from Gibeon to Gezer.
17 ௧௭ அப்படியே தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பிரபலமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் யெகோவா எல்லா தேசங்களின்மேலும் வரச்செய்தார்.
As a result David's reputation was spread everywhere, and the Lord made all the nations afraid of David.