< ரோமர் 3 >

1 ஆகவே, யூதனாயிருப்பதில் என்ன மேன்மை இருக்கிறது? விருத்தசேதனத்தில் என்ன பயன் இருக்கிறது?
அபரஞ்ச யிஹூதி³ந​: கிம்’ ஸ்²ரேஷ்ட²த்வம்’? ததா² த்வக்சே²த³ஸ்ய வா கிம்’ ப²லம்’?
2 எல்லாவகையிலும், அவர்களுக்கு மேன்மை இருக்கவே செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய வார்த்தைகள் யூதர்களிடமே ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனவே.
ஸர்வ்வதா² ப³ஹூநி ப²லாநி ஸந்தி, விஸே²ஷத ஈஸ்²வரஸ்ய ஸா²ஸ்த்ரம்’ தேப்⁴யோ(அ)தீ³யத|
3 சிலரிடம் விசுவாசமில்லாதிருந்தால் அதினாலென்ன? அவர்களுடைய விசுவாசக் குறைவு, இறைவனுடைய உண்மையை இல்லாமல் போகச்செய்யுமோ?
கைஸ்²சித்³ அவிஸ்²வஸநே க்ரு’தே தேஷாம் அவிஸ்²வஸநாத் கிம் ஈஸ்²வரஸ்ய விஸ்²வாஸ்யதாயா ஹாநிருத்பத்ஸ்யதே?
4 ஒருபோதும் இல்லை! மனிதர்கள் அனைவரும் பொய்யராக இருந்தாலும் இறைவனோ உண்மையுள்ளவராய் இருக்கிறார். “நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவர் என்றும், நீர் நியாயம் விசாரிக்கும்போது உமது தீர்ப்பு வெற்றியடையும் என நிரூபிக்கப்படுகிறது” என்று எழுதியிருக்கிறதே.
கேநாபி ப்ரகாரேண நஹி| யத்³யபி ஸர்வ்வே மநுஷ்யா மித்²யாவாதி³நஸ்ததா²பீஸ்²வர​: ஸத்யவாதீ³| ஸா²ஸ்த்ரே யதா² லிகி²தமாஸ்தே, அதஸ்த்வந்து ஸ்வவாக்யேந நிர்த்³தோ³ஷோ ஹி ப⁴விஷ்யஸி| விசாரே சைவ நிஷ்பாபோ ப⁴விஷ்யஸி ந ஸம்’ஸ²ய​: |
5 இவ்விதமாய் நம்முடைய அநீதி இறைவனுடைய நீதியை அதிகமாய்த் தெளிவுபடுத்தப்படுகிறது என்று சொன்னால், நாம் என்ன சொல்லுவோம்? அப்பொழுது இறைவன் நம்மேல் தமது கோபத்தை வரப்பண்ணினால், இறைவன் அநீதியுள்ளவர் என்று சொல்லலாமா? நான் இதை மனித வழக்கமாகவே வாதாடுகிறேன்.
அஸ்மாகம் அந்யாயேந யதீ³ஸ்²வரஸ்ய ந்யாய​: ப்ரகாஸ²தே தர்ஹி கிம்’ வதி³ஷ்யாம​: ? அஹம்’ மாநுஷாணாம்’ கதா²மிவ கதா²ம்’ கத²யாமி, ஈஸ்²வர​: ஸமுசிதம்’ த³ண்ட³ம்’ த³த்த்வா கிம் அந்யாயீ ப⁴விஷ்யதி?
6 நிச்சயமாக அவர் அப்படிப்பட்டவரல்ல. அப்படியிருக்குமானால், உலகத்தை நியாயந்தீர்க்க இறைவனால் எப்படி முடியும்?
இத்த²ம்’ ந ப⁴வது, ததா² ஸதீஸ்²வர​: கத²ம்’ ஜக³தோ விசாரயிதா ப⁴விஷ்யதி?
7 “என்னுடைய பொய் இறைவனுடைய சத்தியத்தை உயர்வுபடுத்தி, அப்படியே அவருடைய மகிமையை அதிகரிக்கச் செய்யுமானால், நான் ஏன் இன்னும் பாவி என்று தீர்ப்பிடப்படுகிறேன்?” என்று ஒருவர் வாதாடலாம்.
மம மித்²யாவாக்யவத³நாத்³ யதீ³ஸ்²வரஸ்ய ஸத்யத்வேந தஸ்ய மஹிமா வர்த்³த⁴தே தர்ஹி கஸ்மாத³ஹம்’ விசாரே(அ)பராதி⁴த்வேந க³ண்யோ ப⁴வாமி?
8 அப்படியானால், “நன்மை வரும்படி தீமை செய்வோம்” என்று ஏன் சொல்லக்கூடாது? நாங்களும் அப்படிச் சொல்வதாகவே சிலரால் பொய்யாகத் தூற்றப்படுகிறோம். ஆகவே இப்படியானவர்களைக் குற்றவாளிகளெனத் தீர்ப்பது நியாயமானதே!
மங்க³லார்த²ம்’ பாபமபி கரணீயமிதி வாக்யம்’ த்வயா குதோ நோச்யதே? கிந்து யைருச்யதே தே நிதாந்தம்’ த³ண்ட³ஸ்ய பாத்ராணி ப⁴வந்தி; ததா²பி தத்³வாக்யம் அஸ்மாபி⁴ரப்யுச்யத இத்யஸ்மாகம்’ க்³லாநிம்’ குர்வ்வந்த​: கியந்தோ லோகா வத³ந்தி|
9 எனவே, நாம் என்ன முடிவுக்கு வருவோம்? யூதர்களாகிய நாங்கள் மேன்மையானவர்களா? ஒருபோதும் இல்லை. யூதர்களும் யூதரல்லாத மக்களும் வேறுபாடின்றி, பாவத்திற்குட்பட்டு இருக்கிறார்கள் என்று நாங்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டினோம்.
அந்யலோகேப்⁴யோ வயம்’ கிம்’ ஸ்²ரேஷ்டா²​: ? கதா³சந நஹி யதோ யிஹூதி³நோ (அ)ந்யதே³ஸி²நஸ்²ச ஸர்வ்வஏவ பாபஸ்யாயத்தா இத்யஸ்ய ப்ரமாணம்’ வயம்’ பூர்வ்வம் அத³தா³ம|
10 அத்துடன் வேதப்புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி: “நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை;
லிபி ர்யதா²ஸ்தே, நைகோபி தா⁴ர்ம்மிகோ ஜந​: |
11 விளங்கிக்கொள்கிறவன் ஒருவனுமில்லை, இறைவனைத் தேடுகிறவன் ஒருவனுமில்லை.
ததா² ஜ்ஞாநீஸ்²வரஜ்ஞாநீ மாநவ​: கோபி நாஸ்தி ஹி|
12 எல்லோரும் வழிவிலகி, ஒன்றாக உதவாதவர்களாய்ப் போய்விட்டார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலுமில்லை.”
விமார்க³கா³மிந​: ஸர்வ்வே ஸர்வ்வே து³ஷ்கர்ம்மகாரிண​: | ஏகோ ஜநோபி நோ தேஷாம்’ ஸாது⁴கர்ம்ம கரோதி ச|
13 “அவர்களுடைய தொண்டைகள்; திறந்திருக்கிறப் பிரேதக்குழிகள்.” “அவர்களுடைய நாவுகள், வஞ்சனை பேசுகின்றன. விரியன் பாம்புகளின் விஷம் அவர்கள் உதடுகளில் இருக்கிறது.”
ததா² தேஷாந்து வை கண்டா² அநாவ்ரு’தஸ்²மஸா²நவத்| ஸ்துதிவாத³ம்’ ப்ரகுர்வ்வந்தி ஜிஹ்வாபி⁴ஸ்தே து கேவலம்’| தேஷாமோஷ்ட²ஸ்ய நிம்நே து விஷம்’ திஷ்ட²தி ஸர்ப்பவத்|
14 “அவர்களுடைய வாய்கள் சாபத்தினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கின்றன.”
முக²ம்’ தேஷாம்’ ஹி ஸா²பேந கபடேந ச பூர்ய்யதே|
15 “அவர்களுடைய கால்கள் இரத்தம் சிந்துவதற்கு விரைகின்றன;
ரக்தபாதாய தேஷாம்’ து பதா³நி க்ஷிப்ரகா³நி ச|
16 அழிவும் அவலமும் அவர்கள் வழிகளைப் பின்பற்றுகின்றன.
பதி² தேஷாம்’ மநுஷ்யாணாம்’ நாஸ²​: க்லேஸ²ஸ்²ச கேவல​: |
17 சமாதான வழியோ, அவர்களுக்குத் தெரியாது.”
தே ஜநா நஹி ஜாநந்தி பந்தா²நம்’ ஸுக²தா³யிநம்’|
18 “அவர்களுடைய கண்களில் இறைவனைப்பற்றிய பயம் இல்லை.”
பரமேஸா²த்³ ப⁴யம்’ யத்தத் தச்சக்ஷுஷோரகோ³சரம்’|
19 மோசேயின் சட்டத்தில் சொல்லப்படுவதெல்லாம், மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கே சொல்லப்படுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே யாரும் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் மவுனமாகும்படியாகவும் இவை எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு முழு உலகமும் இறைவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயும் இருக்கிறார்கள்.
வ்யவஸ்தா²யாம்’ யத்³யல்லிக²தி தத்³ வ்யவஸ்தா²தீ⁴நாந் லோகாந் உத்³தி³ஸ்²ய லிக²தீதி வயம்’ ஜாநீம​: | ததோ மநுஷ்யமாத்ரோ நிருத்தர​: ஸந் ஈஸ்²வரஸ்ய ஸாக்ஷாத்³ அபராதீ⁴ ப⁴வதி|
20 ஆகவே, மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதனால், ஒருவரும் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் ஆக்கப்படுவதில்லை; ஆனால், மோசேயின் சட்டத்தின் மூலமாக, நாம் பாவத்தைப்பற்றிய உணர்வுள்ளவர்கள் ஆகிறோம்.
அதஏவ வ்யவஸ்தா²நுரூபை​: கர்ம்மபி⁴​: கஸ்²சித³பி ப்ராணீஸ்²வரஸ்ய ஸாக்ஷாத் ஸபுண்யீக்ரு’தோ ப⁴விதும்’ ந ஸ²க்ஷ்யதி யதோ வ்யவஸ்த²யா பாபஜ்ஞாநமாத்ரம்’ ஜாயதே|
21 இப்பொழுது மோசேயின் சட்டம் இல்லாமல், இறைவனிடமிருந்து வரும் வேறொரு நீதியை அறியமுடிகிறது. அதற்கு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் சாட்சியிடுகின்றன.
கிந்து வ்யவஸ்தா²யா​: ப்ரு’த²க்³ ஈஸ்²வரேண தே³யம்’ யத் புண்யம்’ தத்³ வ்யவஸ்தா²யா ப⁴விஷ்யத்³வாதி³க³ணஸ்ய ச வசநை​: ப்ரமாணீக்ரு’தம்’ ஸத்³ இதா³நீம்’ ப்ரகாஸ²தே|
22 இறைவனால் வரும் இந்த நீதியானது, விசுவாசிக்கிற எல்லோருக்கும் இயேசுகிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின்மூலமாய் வருகிறது. அது ஒருவருக்கும் வித்தியாசம் காட்டுவதில்லை.
யீஸு²க்²ரீஷ்டே விஸ்²வாஸகரணாத்³ ஈஸ்²வரேண த³த்தம்’ தத் புண்யம்’ ஸகலேஷு ப்ரகாஸி²தம்’ ஸத் ஸர்வ்வாந் விஸ்²வாஸிந​: ப்ரதி வர்த்ததே|
23 ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை அடையாமற்போனார்கள்.
தேஷாம்’ கோபி ப்ரபே⁴தோ³ நாஸ்தி, யத​: ஸர்வ்வஏவ பாபிந ஈஸ்²வரீயதேஜோஹீநாஸ்²ச ஜாதா​: |
24 ஆனால் இப்பொழுது கிறிஸ்து இயேசுவினால் வந்த மீட்பின் மூலமாக, இலவசமாகவே இறைவனுடைய கிருபையினால் நீதிமான்களாகிறார்கள்.
த ஈஸ்²வரஸ்யாநுக்³ரஹாத்³ மூல்யம்’ விநா க்²ரீஷ்டக்ரு’தேந பரித்ராணேந ஸபுண்யீக்ரு’தா ப⁴வந்தி|
25 இறைவன் நமது பாவங்களுக்கான பாவநிவிர்த்தி பலியாக கிறிஸ்துவைக் கொடுத்தார். இயேசு நமக்குரிய தண்டனையைத் தாமே சுமந்து, இறைவனின் கோபத்தை அகற்றி, நமது பாவத்தை நீக்கிப்போட்டார். எனவே அவர் நமக்காக சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைக்கிறவர்களுக்குப் பாவநிவிர்த்தி உண்டு. முற்காலத்தில் செய்யப்பட்டப் பாவங்களை இறைவன் பொறுத்துக்கொண்டு அவைகளைத் தண்டிக்காமல் விட்டிருந்து, அவற்றிற்காகவும் பாவநிவிர்த்திச் செய்து, தம்முடைய நீதியைக் காண்பித்தார்.
யஸ்மாத் ஸ்வஸோ²ணிதேந விஸ்²வாஸாத் பாபநாஸ²கோ ப³லீ ப⁴விதும்’ ஸ ஏவ பூர்வ்வம் ஈஸ்²வரேண நிஸ்²சித​: , இத்த²ம் ஈஸ்²வரீயஸஹிஷ்ணுத்வாத் புராக்ரு’தபாபாநாம்’ மார்ஜ்ஜநகரணே ஸ்வீயயாதா²ர்த்²யம்’ தேந ப்ரகாஸ்²யதே,
26 இக்காலத்தில் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்படி இறைவன் இதைச் செய்தார். இதனால் அவர் நீதியுள்ளவர் என்றும், தன் நீதியில் மாறாமல் இயேசுவில் விசுவாசம் வைக்கிற பாவிகளை நீதிமான்களாக்க வல்லவர் என்றும் காண்பித்தார்.
வர்த்தமாநகாலீயமபி ஸ்வயாதா²ர்த்²யம்’ தேந ப்ரகாஸ்²யதே, அபரம்’ யீஸௌ² விஸ்²வாஸிநம்’ ஸபுண்யீகுர்வ்வந்நபி ஸ யாதா²ர்தி²கஸ்திஷ்ட²தி|
27 ஆகவே, யாருக்காவது மேன்மைபாராட்டுவதற்கு இடமுண்டோ? அதற்கு இடமில்லை. எதனால் அப்படிச் சொல்லலாம்? நீதிமான்களாக்கப்பட்டு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளும் செயல்களினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது.
தர்ஹி குத்ராத்மஸ்²லாகா⁴? ஸா தூ³ரீக்ரு’தா; கயா வ்யவஸ்த²யா? கிம்’ க்ரியாரூபவ்யவஸ்த²யா? இத்த²ம்’ நஹி கிந்து தத் கேவலவிஸ்²வாஸரூபயா வ்யவஸ்த²யைவ ப⁴வதி|
28 ஏனெனில் ஒரு மனிதன் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே நீதிமான் ஆக்கப்படுகிறான் என்றே நாம் தீர்க்கிறோம்.
அதஏவ வ்யவஸ்தா²நுரூபா​: க்ரியா விநா கேவலேந விஸ்²வாஸேந மாநவ​: ஸபுண்யீக்ரு’தோ ப⁴விதும்’ ஸ²க்நோதீத்யஸ்ய ராத்³தா⁴ந்தம்’ த³ர்ஸ²யாம​: |
29 இறைவன் யூதர்களுடைய இறைவனாக மாத்திரம் இருக்கிறாரா? அவர் மற்றவர்களின் இறைவனாகவும் இருக்கிறார் அல்லவா? ஆம், மற்றவர்களுக்கும் இறைவன் அவரே.
ஸ கிம்’ கேவலயிஹூதி³நாம் ஈஸ்²வரோ ப⁴வதி? பி⁴ந்நதே³ஸி²நாம் ஈஸ்²வரோ ந ப⁴வதி? பி⁴ந்நதே³ஸி²நாமபி ப⁴வதி;
30 ஏனெனில் இறைவன் ஒருவரே. அவர் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களை விசுவாசத்தினால், நீதிமான்கள் ஆக்குகிறார். விருத்தசேதனம் பெறாதவர்களையும் அதே விசுவாசத்தின் மூலமாகவே நீதிமான்கள் ஆக்குவார்.
யஸ்மாத்³ ஏக ஈஸ்²வரோ விஸ்²வாஸாத் த்வக்சே²தி³நோ விஸ்²வாஸேநாத்வக்சே²தி³நஸ்²ச ஸபுண்யீகரிஷ்யதி|
31 அப்படியானால், இந்த விசுவாசத்தின் மூலமாக, மோசேயின் சட்டத்தை ரத்து செய்கிறோமா? அதை நாம் மறக்கலாமா? ஒருபோதும் இல்லை. நாம் விசுவாசத்தினால்தான் மோசேயின் சட்டத்தை உறுதியாக்குகிறோம்.
தர்ஹி விஸ்²வாஸேந வயம்’ கிம்’ வ்யவஸ்தா²ம்’ லும்பாம? இத்த²ம்’ ந ப⁴வது வயம்’ வ்யவஸ்தா²ம்’ ஸம்’ஸ்தா²பயாம ஏவ|

< ரோமர் 3 >