< வெளிப்படுத்தின விசேஷம் 6 >
1 நான் பார்த்துக்கொண்டிருக்கையில் ஆட்டுக்குட்டியானவர், அந்த ஏழு முத்திரைகளில் முதலாவது முத்திரையைத் திறந்தார். அப்பொழுது அந்த நான்கு உயிர்களில் ஒன்று, “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன். அதன் குரலோ இடி முழக்கத்தைப்போல் இருந்தது.
அநந்தரம்’ மயி நிரீக்ஷமாணே மேஷஸா²வகேந தாஸாம்’ ஸப்தமுத்³ராணாம் ஏகா முத்³ரா முக்தா ததஸ்தேஷாம்’ சதுர்ணாம் ஏகஸ்ய ப்ராணிந ஆக³த்ய பஸ்²யேதிவாசகோ மேக⁴க³ர்ஜநதுல்யோ ரவோ மயா ஸ்²ருத: |
2 அப்பொழுது அங்கே எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக்குதிரை நின்றதை நான் பார்த்தேன்! அதில் ஏறி இருந்தவன் ஒரு வில்லைப் பிடித்திருந்தான், அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் வெற்றி வீரனாக வெற்றி பெறுகிறதற்காகவே புறப்பட்டுச் சென்றான்.
தத: பரம் ஏக: ஸு²க்லாஸ்²சோ த்³ரு’ஷ்ட: , ததா³ரூடோ⁴ ஜநோ த⁴நு ர்தா⁴ரயதி தஸ்மை ச கிரீடமேகம் அதா³யி தத: ஸ ப்ரப⁴வந் ப்ரப⁴விஷ்யம்’ஸ்²ச நிர்க³தவாந்|
3 ஆட்டுக்குட்டியானவர், இரண்டாவது முத்திரையைத் திறந்தபோது, இரண்டாவதாய் இருந்த உயிரினம், “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன்.
அபரம்’ த்³விதீயமுத்³ராயாம்’ தேந மோசிதாயாம்’ த்³விதீயஸ்ய ப்ராணிந ஆக³த்ய பஸ்²யேதி வாக் மயா ஸ்²ருதா|
4 அப்பொழுது இன்னொரு குதிரை வெளியே வந்தது, அது கருஞ்சிவப்பு நிறம் உடையதாயிருந்தது. அதில் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலிருந்து சமாதானத்தை நீக்கிவிடவும், மனிதர்கள் தங்களில் ஒருவரையொருவர் கொன்றுபோடும்படி செய்யவும், வல்லமை கொடுக்கப்பட்டது. அவனுக்கு ஒரு பெரிய வாள் கொடுக்கப்பட்டது.
ததோ (அ)ருணவர்ணோ (அ)பர ஏகோ (அ)ஸ்²வோ நிர்க³தவாந் ததா³ரோஹிணி ப்ரு’தி²வீத: ஸா²ந்த்யபஹரணஸ்ய லோகாநாம்’ மத்⁴யே பரஸ்பரம்’ ப்ரதிகா⁴தோத்பாத³நஸ்ய ச ஸாமர்த்²யம்’ ஸமர்பிதம், ஏகோ ப்³ரு’ஹத்க²ங்கோ³ (அ)பி தஸ்மா அதா³யி|
5 ஆட்டுக்குட்டியானவர், மூன்றாவது முத்திரையைத் திறந்தபோது, மூன்றாவதாய் இருந்த உயிரினம், “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன். நான் பார்த்தபோது, அங்கே எனக்கு முன்பாக, ஒரு கருப்புக்குதிரை நின்றது. அதில் ஏறியிருந்தவன் தன் கையிலே, தராசு ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்தான்.
அபரம்’ த்ரு’தீயமுத்³ராயாம்’ தந மோசிதாயாம்’ த்ரு’தீயஸ்ய ப்ராணிந ஆக³த்ய பஸ்²யேதி வாக் மயா ஸ்²ருதா, தத: காலவர்ண ஏகோ (அ)ஸ்²வோ மயா த்³ரு’ஷ்ட: , ததா³ரோஹிணோ ஹஸ்தே துலா திஷ்ட²தி
6 அப்பொழுது ஒரு குரல் போன்ற சத்தம், “ஒரு நாள் கூலிக்கு கோதுமை ஒரு கிலோகிராம்; வாற்கோதுமை மூன்று கிலோகிராம்; எண்ணெயையும், திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே!” என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன். அந்தக் குரல் அந்த நான்கு உயிரினங்களின் நடுவிலிருந்தே வந்ததுபோல் எனக்குக் காணப்பட்டது.
அநந்தரம்’ ப்ராணிசதுஷ்டயஸ்ய மத்⁴யாத்³ வாகி³யம்’ ஸ்²ருதா கோ³தூ⁴மாநாமேக: ஸேடகோ முத்³ராபாதை³கமூல்ய: , யவாநாஞ்ச ஸேடகத்ரயம்’ முத்³ராபாதை³கமூல்யம்’ தைலத்³ராக்ஷாரஸாஸ்²ச த்வயா மா ஹிம்’ஸிதவ்யா: |
7 ஆட்டுக்குட்டியானவர், நான்காவது முத்திரையைத் திறந்தபோது, நான்காவதாய் இருந்த உயிரினத்தின் குரலை நான் கேட்டேன். அது, “வா” என்று சொன்னது.
அநந்தரம்’ சதுர்த²முத்³ராயாம்’ தேந மோசிதாயாம்’ சதுர்த²ஸ்ய ப்ராணிந ஆக³த்ய பஸ்²யேதி வாக் மயா ஸ்²ருதா|
8 அப்பொழுது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நின்றதை நான் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. பாதாளம் அவனுக்குப் பின்னாலேயே நெருக்கமாய் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும் கொல்வதற்கு அவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
தத: பாண்டு³ரவர்ண ஏகோ (அ)ஸ்²வோ மயா த்³ரு’ஷ்ட: , ததா³ரோஹிணோ நாம ம்ரு’த்யுரிதி பரலோகஸ்²ச தம் அநுசரதி க²ங்கே³ந து³ர்பி⁴க்ஷேண மஹாமார்ய்யா வந்யபஸு²பி⁴ஸ்²ச லோகாநாம்’ ப³தா⁴ய ப்ரு’தி²வ்யாஸ்²சதுர்தா²ம்’ஸ²ஸ்யாதி⁴பத்யம்’ தஸ்மா அதா³யி| (Hadēs )
9 ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையைத் திறந்தபோது, பலிபீடத்தின் கீழே இறைவனுடைய வார்த்தைக்காகவும், சாட்சிகளாய் வாழ்ந்ததற்காகவும், கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைக் கண்டேன்.
அநந்தரம்’ பஞ்சமமுத்³ராயாம்’ தேந மோசிதாயாம் ஈஸ்²வரவாக்யஹேதோஸ்தத்ர ஸாக்ஷ்யதா³நாச்ச சே²தி³தாநாம்’ லோகாநாம்’ தே³ஹிநோ வேத்³யா அதோ⁴ மயாத்³ரு’ஸ்²யந்த|
10 அவர்கள் உரத்த குரலில், “ஆண்டவராகிய கர்த்தாவே, பரிசுத்தமும் சத்தியமும் உள்ளவரே, நீர் பூமியில் குடியிருக்கிறவர்களை நியாயந்தீர்ப்பது எப்போது? எங்களுடைய இரத்தப்பழிக்கான தண்டனையை அவர்களுக்குக் கொடுப்பதற்கு எவ்வளவு காலம் செல்லும்?” என்று கூக்குரலிட்டார்கள்.
த உச்சைரித³ம்’ க³த³ந்தி, ஹே பவித்ர ஸத்யமய ப்ரபோ⁴ அஸ்மாகம்’ ரக்தபாதே ப்ரு’தி²வீநிவாஸிபி⁴ ர்விவதி³தும்’ தஸ்ய ப²ல தா³துஞ்ச கதி காலம்’ விலம்ப³ஸே?
11 அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு வெள்ளை உடை கொடுக்கப்பட்டது. அத்துடன், அவர்கள் இன்னும் சிறிதுகாலம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஏனெனில், அவர்களைப்போல் கொல்லப்பட இருக்கும், அவர்களுடைய எல்லா உடன் ஊழியர்களும், சகோதரர்களும் கொல்லப்படும் வரைக்கும், அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.
ததஸ்தேஷாம் ஏகைகஸ்மை ஸு²ப்⁴ர: பரிச்ச²தோ³ (அ)தா³யி வாகி³யஞ்சாகத்²யத யூயமல்பகாலம் அர்த²தோ யுஷ்மாகம்’ யே ஸஹாதா³ஸா ப்⁴ராதரோ யூயமிவ கா⁴நிஷ்யந்தே தேஷாம்’ ஸம்’க்²யா யாவத் ஸம்பூர்ணதாம்’ ந க³ச்ச²தி தாவத்³ விரமத|
12 ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையைத் திறப்பதை நான் பார்த்தேன். அப்பொழுது பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அவ்வேளையில், சூரியன் கருப்புக் கம்பளியைப்போல் கருத்துப்போனது. சந்திரன் முழுவதும் இரத்த சிவப்பு நிறமாய் மாறியது.
அநந்தரம்’ யதா³ ஸ ஷஷ்ட²முத்³ராமமோசயத் ததா³ மயி நிரீக்ஷமாணே மஹாந் பூ⁴கம்போ (அ)ப⁴வத் ஸூர்ய்யஸ்²ச உஷ்ட்ரலோமஜவஸ்த்ரவத் க்ரு’ஷ்ணவர்ணஸ்²சந்த்³ரமாஸ்²ச ரக்தஸங்காஸோ² (அ)ப⁴வத்
13 வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன. பலத்த காற்றினால் அத்திமரம் அசைக்கப்படும்போது, பருவம் பிந்திக்காய்த்த அத்திக்காய்கள் விழுவதுபோல், அவை விழுந்தன.
க³க³நஸ்த²தாராஸ்²ச ப்ரப³லவாயுநா சாலிதாத்³ உடு³ம்ப³ரவ்ரு’க்ஷாத் நிபாதிதாந்யபக்கப²லாநீவ பூ⁴தலே ந்யபதந்|
14 ஒரு புத்தக சுருள் சுருட்டப்படுவது போல வானம் சுருட்டப்பட்டு மறைந்து போனது. ஒவ்வொரு மலையும், தீவும், அவைகளுக்குரிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டன.
ஆகாஸ²மண்ட³லஞ்ச ஸங்குச்யமாநக்³ரந்த²இவாந்தர்தா⁴நம் அக³மத் கி³ரய உபத்³வீபாஸ்²ச ஸர்வ்வே ஸ்தா²நாந்தரம்’ சாலிதா:
15 அப்பொழுது பூமியில் உள்ள அரசர்களும், இளவரசர்களும், சேனாதிபதிகளும், செல்வந்தர்களும், வலிமையுள்ளவர்களும், ஒவ்வொரு அடிமையும், ஒவ்வொரு சுதந்திரக் குடிமகனும், குகைகளிலும், மலைகளிலுள்ள கற்பாறைகளிலும் ஒளிந்துகொண்டார்கள்.
ப்ரு’தி²வீஸ்தா² பூ⁴பாலா மஹால்லோகா: ஸஹஸ்த்ரபதயோ த⁴நிந: பராக்ரமிணஸ்²ச லோகா தா³ஸா முக்தாஸ்²ச ஸர்வ்வே (அ)பி கு³ஹாஸு கி³ரிஸ்த²ஸை²லேஷு ச ஸ்வாந் ப்ராச்சா²த³யந்|
16 அவர்கள் அந்த மலைகளையும், கற்பாறைகளையும் பார்த்து, “நீங்கள் எங்கள்மேல் விழுங்கள். அரியணையில் அமர்ந்திருக்கிறவருடைய பார்வையிலிருந்தும், ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும், எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!
தே ச கி³ரீந் ஸை²லாம்’ஸ்²ச வத³ந்தி யூயம் அஸ்மது³பரி பதித்வா ஸிம்’ஹாஸநோபவிஷ்டஜநஸ்ய த்³ரு’ஷ்டிதோ மேஷஸா²வகஸ்ய கோபாச்சாஸ்மாந் கோ³பாயத;
17 அவருடைய கோபத்தின் பெரிதான நாள் வந்துவிட்டது; யாரால் தாங்கமுடியும்?” என்று சொன்னார்கள்.
யதஸ்தஸ்ய க்ரோத⁴ஸ்ய மஹாதி³நம் உபஸ்தி²தம்’ க: ஸ்தா²தும்’ ஸ²க்நோதி?