< வெளிப்படுத்தின விசேஷம் 15 >

1 நான் பரலோகத்திலே பெரும் வியப்புக்குரிய இன்னுமொரு அடையாளத்தைப் பார்த்தேன்: ஏழு தூதர்கள் ஏழு வாதைகளுடன் நின்றார்கள்; இவை கடைசி வாதைகள்; ஏனெனில், இவற்றுடன் இறைவனுடைய கோபம் நிறைவுபெறும்.
Я побачив на небі ще одне велике й дивовижне знамення: сім ангелів із сімома останніми карами, бо ними закінчується Божий гнів.
2 நான் கண்ணாடிக்கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். அதில் நெருப்பு கலந்திருந்தது. அதற்கருகில் அந்த மிருகத்தையும், அதனுடைய உருவச்சிலையையும், அதன் பெயருக்குரிய எண்ணையும் மேற்கொண்டு வெற்றிகொண்டவர்கள், நின்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் இறைவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வீணைகளைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
І я побачив щось схоже на скляне море, змішане з вогнем, і тих, хто переміг звіра, його образ та число його імені. Вони стояли біля моря й тримали Божі арфи.
3 அவர்கள் இறைவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவருடைய பாடலையும் பாடினார்கள்: “எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே, உமது செயல்கள் பெரிதானவை. அவை வியக்கத்தகுந்தவை. எல்லா யுகங்களுக்கும் அரசனாயிருக்கிறவரே, உமது வழிகள் நீதியும் சத்தியமுமானவை.
Вони співали пісню раба Божого Мойсея та Агнця, кажучи: «Великі та дивовижні діла Твої, Господи Боже, Вседержителю! Праведні та правдиві шляхи Твої, Царю народів!
4 கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமல் இருப்பார்கள்? யார் உமது பெயருக்கு மகிமையைக் கொடுக்காமலும் இருப்பார்கள்? ஏனெனில், நீர் ஒருவரே பரிசுத்தர். எல்லா நாட்டினரும் வந்து உமக்கு முன்பாக ஆராதனை செய்வார்கள், ஏனெனில், உமது நீதியான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.”
Хто не боятиметься Тебе, Господи, і не принесе слави Твоєму імені? Бо Ти один святий. Усі народи прийдуть і поклонятимуться перед Тобою, бо відкрились Твої праведні вчинки!»
5 இதற்குப் பின்பு, நான் நோக்கிப் பார்த்தபொழுது, பரலோகத்திலுள்ள ஆலயம் திறந்திருந்தது. இதுவே சாட்சியின் இறைசமுகக் கூடாரம்.
Після цього я подивився й побачив на небі відкритий Храм – Оселю одкровення.
6 ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளுடன் ஏழு இறைத்தூதர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் சுத்தமான, பிரகாசமுள்ள மென்பட்டு உடையை உடுத்தியிருந்தார்கள்; தங்கள் மார்புகளைச் சுற்றி, தங்கச் சால்வைகளைக் கட்டியிருந்தார்கள்.
Із Храму вийшли сім ангелів із сімома карами. Вони були одягнені в чистий блискучий льняний [одяг] і були оперезані на грудях золотими поясами.
7 அப்பொழுது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, ஏழு தூதருக்கு ஏழு தங்கக் கிண்ணங்களைக் கொடுத்தது. அந்தக் கிண்ணங்கள், என்றென்றும் வாழ்கிற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்தன. (aiōn g165)
Тоді одна з чотирьох живих істот дала семи ангелам сім золотих чаш, наповнених гнівом Бога, Який живе навіки-віків. (aiōn g165)
8 அந்த ஆலயம் இறைவனுடைய மகிமையிலிருந்தும், அவருடைய வல்லமையிலிருந்தும் எழும்பிய புகையினால் நிறைந்திருந்தது. அந்த ஏழு இறைத்தூதர்களுடைய ஏழு வாதைகளும் நிறைவேறி முடியும்வரைக்கும், ஒருவராலும் அந்த ஆலயத்திற்குள் செல்ல முடியவில்லை.
І Храм наповнився димом від слави Божої та від Його сили, і ніхто не міг увійти до Храму, поки не буде закінчено сім кар сімох ангелів.

< வெளிப்படுத்தின விசேஷம் 15 >