< சங்கீதம் 99 >
1 யெகோவா ஆட்சி செய்கிறார், நாடுகள் நடுங்கட்டும்; அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; பூமி அதிரட்டும்.
上主為王,萬民戰慄驚恐,祂坐於革魯賓之上,大地震動;
2 சீயோனிலே யெகோவா பெரியவர்; அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
熙雍的上主,偉大當皇,崇高尊貴,而超越萬邦。
3 பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்; அவர் பரிசுத்தமானவர்.
願他們讚美您的大名,它可敬可畏,至尊神聖。
4 அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்; நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்; நீர் யாக்கோபில் நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர்.
您是愛正義的大能君王,是您制定了法律的正綱,對雅各伯彿的合理合章。
5 நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி, அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்; அவர் பரிசுத்தமானவர்.
請您們尊崇上主,我們的天主,還要向著祂的腳凳伏地叩首。因為祂的腳凳也是神聖無偶。
6 அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்; அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்; அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்குப் பதிலளித்தார்.
梅瑟和亞郎列於上主的司祭中,撒慕爾屬於呼號上主聖名的人中,他們呼號上主,上主即俯聽他們。
7 அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர் அவர்களுக்குக் கொடுத்த அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள்.
祂從前曾在雲柱中訓示了他們,他們就守了祂吩咐的誡命章程。
8 எங்கள் இறைவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்; இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும், நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர்.
上主,您原是我們的天主,您曾俯聽他們;天主,您寬赦宥他們,但也報復他們的惡行。
9 நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்; ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.
請您們尊崇上主,我們的天主,還要向著祂的聖山伏地叩首,因我們的天主,上主神聖無偶。