< சங்கீதம் 93 >
1 யெகோவா ஆட்சி செய்கிறார், அவர் மாட்சிமையை அணிந்திருக்கிறார்; யெகோவா மாட்சிமையை அணிந்து பெலத்தைத் தரித்துக்கொண்டிருக்கிறார்; உண்மையில், உலகம் நிலைபெற்று உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது.
সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমায় সজ্জিত; সদাপ্রভু গৌরবে আবৃত ও পরাক্রমে সজ্জিত; সত্যিই, এই পৃথিবী প্রতিষ্ঠিত, সুদৃঢ় ও সুরক্ষিত।
2 உமது சிங்காசனம் பூர்வகாலத்திலே ஏற்படுத்தப்பட்டது; நீர் நித்தியத்தில் இருந்தே இருக்கிறீர்.
তোমার সিংহাসন প্রাচীনকাল থেকে বিদ্যমান; তুমি স্বয়ং অনন্তকাল থেকে।
3 யெகோவாவே, கடல்கள் எழும்பின; கடல்கள் தங்கள் குரலை எழுப்பின; கடல்கள் மோதியடிக்கும் தங்கள் அலைகளை எழுப்பின.
হে সদাপ্রভু, সমুদ্রেরা উঠেছে, সমুদ্রেরা তাদের আওয়াজ তুলেছে; সমুদ্রেরা তাদের উত্তাল ঢেউ তুলেছে।
4 பெருவெள்ளத்தின் முழக்கத்தைப் பார்க்கிலும், கடல்களின் அலைகளைப் பார்க்கிலும் உன்னதத்தில் இருக்கும் யெகோவா வல்லமையுள்ளவர்.
মহাজলধির গর্জন থেকেও, সমুদ্রের উত্তাল ঢেউ থেকেও উচ্চে অবস্থিত সদাপ্রভু বলবান।
5 யெகோவாவே, உமது நியமங்கள் உறுதியாய் நிற்கின்றன; பரிசுத்தம் உமது ஆலயத்தை என்றென்றும் அலங்கரிக்கிறது.
হে সদাপ্রভু, তোমার বিধিবিধান, সুদৃঢ়; অনন্তকাল ধরে পবিত্রতাই তোমার গৃহের শোভা।