< சங்கீதம் 92 >

1 ஓய்வுநாளுக்கான பாடலாகிய சங்கீதம். யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது.
A Psalm, a Song for the sabbath day. It is a good thing to give thanks unto Jehovah, And to sing praises unto thy name, O Most High;
2 காலையிலே உமது அன்பையும் இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது.
To show forth thy lovingkindness in the morning, And thy faithfulness every night,
3 பத்து நரம்பு வீணையின் இசையினாலும், யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது.
With an instrument of ten strings, and with the psaltery; With a solemn sound upon the harp.
4 யெகோவாவே, நீர் உமது செயல்களினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறீர்; உமது கைகளின் வேலைகளினிமித்தம் நான் மகிழ்ந்து பாடுகிறேன்.
For thou, Jehovah, hast made me glad through thy work: I will triumph in the works of thy hands.
5 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு பெரிதானவை, உம்முடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை!
How great are thy works, O Jehovah! Thy thoughts are very deep.
6 உணர்வற்ற மனிதன் அறியாததும், மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே,
A brutish man knoweth not; Neither doth a fool understand this:
7 கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும், தீங்கு செய்கிறவர்கள் எல்லோரும் செழித்தாலும், என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள்.
When the wicked spring as the grass, And when all the workers of iniquity do flourish; It is that they shall be destroyed for ever.
8 ஆனாலும் யெகோவாவே, நீர் என்றென்றுமாய் புகழ்ந்து உயர்த்தப்படுகிறீர்.
But thou, O Jehovah, art on high for evermore.
9 யெகோவாவே, உமது பகைவர், நிச்சயமாகவே உம்முடைய பகைவர் அழிந்தேபோவார்கள்; தீமை செய்வோர் எல்லோருமே சிதறடிக்கப்படுவார்கள்.
For, lo, thine enemies, O Jehovah, For, lo, thine enemies shall perish; All the workers of iniquity shall be scattered.
10 காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்; சிறந்த எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டன.
But my horn hast thou exalted like [the horn of] the wild-ox: I am anointed with fresh oil.
11 என் விரோதிகளின் தோல்வியைக் கண்ணாரக் கண்டேன்; என் செவிகள் என் கொடிய எதிரிகள் முறியடிக்கப்படுவதைக் காதாரக் கேட்டேன்.
Mine eye also hath seen [my desire] on mine enemies, Mine ears have heard [my desire] of the evil-doers that rise up against me.
12 நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள், அவர்கள் லெபனோனின் கேதுரு மரம்போல் வளர்வார்கள்;
The righteous shall flourish like the palm-tree: He shall grow like a cedar in Lebanon.
13 அவர்கள் யெகோவாவினுடைய வீட்டிலே நாட்டப்பட்டு, நமது இறைவனுடைய ஆலய முற்றங்களில் செழிப்பார்கள்.
They are planted in the house of Jehovah; They shall flourish in the courts of our God.
14 அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து, தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள்.
They shall still bring forth fruit in old age; They shall be full of sap and green:
15 “யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை; அவரிடத்தில் அநீதி இல்லை” என்று அவர்கள் பிரசித்தப்படுத்துவார்கள்.
To show that Jehovah is upright; He is my rock, and there is no unrighteousness in him.

< சங்கீதம் 92 >