< சங்கீதம் 86 >
1 தாவீதின் மன்றாட்டு. யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும், ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்.
大衛的祈禱。 耶和華啊,求你側耳應允我, 因我是困苦窮乏的。
2 நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; உம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் உமது அடியேனைக் காப்பாற்றும். நீரே என் இறைவன்;
求你保存我的性命,因我是虔誠人。 我的上帝啊,求你拯救這倚靠你的僕人!
3 என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே, நான் நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
主啊,求你憐憫我, 因我終日求告你。
4 யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்; ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மேல் வைக்கிறேன்.
主啊,求你使僕人心裏歡喜, 因為我的心仰望你。
5 யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்; உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர்.
主啊,你本為良善,樂意饒恕人, 有豐盛的慈愛賜給凡求告你的人。
6 யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்; இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.
耶和華啊,求你留心聽我的禱告, 垂聽我懇求的聲音。
7 என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர்.
我在患難之日要求告你, 因為你必應允我。
8 யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை; உமது செயல்களை யாராலும் செய்யமுடியாது.
主啊,諸神之中沒有可比你的; 你的作為也無可比。
9 யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும் உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்; அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள்.
主啊,你所造的萬民都要來敬拜你; 他們也要榮耀你的名。
10 நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்; நீர் ஒருவரே இறைவன்.
因你為大,且行奇妙的事; 惟獨你是上帝。
11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்; நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும்.
耶和華啊,求你將你的道指教我; 我要照你的真理行; 求你使我專心敬畏你的名!
12 என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன்.
主-我的上帝啊,我要一心稱讚你; 我要榮耀你的名,直到永遠。
13 நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். (Sheol )
因為,你向我發的慈愛是大的; 你救了我的靈魂免入極深的陰間。 (Sheol )
14 இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்; கொடூரமான கூட்டத்தார் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர், அவர்கள் உம்மை மதிக்காதவர்கள்.
上帝啊,驕傲的人起來攻擊我, 又有一黨強橫的人尋索我的命; 他們沒有將你放在眼中。
15 ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்; கோபப்படுவதில் தாமதிப்பவராயும், அன்பும் உண்மையும் நிறைந்தவராயும் இருக்கிறீர்.
主啊,你是有憐憫有恩典的上帝, 不輕易發怒,並有豐盛的慈愛和誠實。
16 என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்; உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்; என்னைக் காப்பாற்றும், ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன்.
求你向我轉臉,憐恤我, 將你的力量賜給僕人,救你婢女的兒子。
17 என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக, உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்; ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர்.
求你向我顯出恩待我的憑據, 叫恨我的人看見便羞愧, 因為你-耶和華幫助我,安慰我。