< சங்கீதம் 85 >

1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட கோராகின் மகன்களின் சங்கீதம். யெகோவாவே, நீர் உமது நாட்டுக்குத் தயவு காட்டினீர்; யாக்கோபின் மக்கள் இழந்த நல்ல நிலையை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்தீர்.
לַמְנַצֵּחַ ׀ לִבְנֵי־קֹרַח מִזְמֽוֹר׃ רָצִיתָ יְהוָה אַרְצֶךָ שַׁבְתָּ שבות שְׁבִית יַעֲקֹֽב׃
2 நீர் உமது மக்களின் அநியாயத்தை மன்னித்து, அவர்களுடைய பாவங்களையெல்லாம் மூடிவிட்டீர்.
נָשָׂאתָ עֲוֺן עַמֶּךָ כִּסִּיתָ כָל־חַטָּאתָם סֶֽלָה׃
3 நீர் உமது கடுங்கோபத்தையெல்லாம் விலக்கிவிட்டு, உமது பெருங்கோபத்திலிருந்தும் திரும்பினீர்.
אָסַפְתָּ כָל־עֶבְרָתֶךָ הֱשִׁיבוֹתָ מֵחֲרוֹן אַפֶּֽךָ׃
4 எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்; எங்கள் மேலுள்ள உமது கோபத்தை அகற்றும்.
שׁוּבֵנוּ אֱלֹהֵי יִשְׁעֵנוּ וְהָפֵר כַּֽעַסְךָ עִמָּֽנוּ׃
5 நீர் எங்களுடன் என்றென்றும் கோபமாய் இருப்பீரோ? உமது கோபத்தைத் தலைமுறைகள்தோறும் நீடிக்கச் செய்வீரோ?
הַלְעוֹלָם תֶּֽאֱנַף־בָּנוּ תִּמְשֹׁךְ אַפְּךָ לְדֹר וָדֹֽר׃
6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களை மீண்டும் உயிர்ப்பிக்கமாட்டீரோ?
הֽ͏ֲלֹא־אַתָּה תָּשׁוּב תְּחַיֵּנוּ וְעַמְּךָ יִשְׂמְחוּ־בָֽךְ׃
7 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்குத் தாரும்.
הַרְאֵנוּ יְהוָה חַסְדֶּךָ וְיֶשְׁעֲךָ תִּתֶּן־לָֽנוּ׃
8 யெகோவாவாகிய இறைவன் சொல்வதை நான் கேட்பேன்; அவர் தமது மக்களுக்கும் தமது பரிசுத்தவான்களுக்கும் சமாதானத்தை வாக்குப் பண்ணுகிறார்; ஆனால் அவர்கள் மதியீனத்துக்குத் திரும்பாதிருக்கட்டும்.
אֶשְׁמְעָה מַה־יְדַבֵּר הָאֵל ׀ יְהוָה כִּי ׀ יְדַבֵּר שָׁלוֹם אֶל־עַמּוֹ וְאֶל־חֲסִידָיו וְֽאַל־יָשׁוּבוּ לְכִסְלָֽה׃
9 அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு, அவருடைய இரட்சிப்பு நிச்சயமாகவே சமீபமாய் இருப்பதால், அவருடைய மகிமையும் நமது நாட்டில் தங்கியிருக்கும்.
אַךְ ׀ קָרוֹב לִירֵאָיו יִשְׁעוֹ לִשְׁכֹּן כָּבוֹד בְּאַרְצֵֽנוּ׃
10 அன்பும் உண்மையும் ஒன்றாய்ச் சந்திக்கின்றன; நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தம் செய்கின்றன.
חֶֽסֶד־וֶאֱמֶת נִפְגָּשׁוּ צֶדֶק וְשָׁלוֹם נָשָֽׁקוּ׃
11 உண்மை பூமியிலிருந்து முளைத்தெழும்புகிறது, நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கிறது.
אֱמֶת מֵאֶרֶץ תִּצְמָח וְצֶדֶק מִשָּׁמַיִם נִשְׁקָֽף׃
12 யெகோவா உண்மையாகவே நன்மையானதைத் தருவார்; நம்முடைய நாடும் அதின் விளைச்சலைக் கொடுக்கும்.
גַּם־יְהוָה יִתֵּן הַטּוֹב וְאַרְצֵנוּ תִּתֵּן יְבוּלָֽהּ׃
13 நீதி அவருக்கு முன்சென்று, அவருடைய காலடிகளுக்காக வழியை ஆயத்தப்படுத்துகிறது.
צֶדֶק לְפָנָיו יְהַלֵּךְ וְיָשֵׂם לְדֶרֶךְ פְּעָמָֽיו׃

< சங்கீதம் 85 >