< சங்கீதம் 70 >
1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்; யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
Til songmeisteren; av David; til minnesofferet. Gud, ver meg til berging! Herre, kom meg snart til hjelp!
2 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; எனது அழிவை விரும்புகிற யாவரும் அவமானமடைந்து திரும்புவார்களாக.
Lat deim verta til skam og spott, dei som stend etter mitt liv! Lat deim vika attende og skjemmast, som hev hugnad i mi ulukka!
3 என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள், அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக.
Lat deim snu for si skjemd dei som segjer: «Ha, ha!»
4 ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; உமது இரட்சிப்பை விரும்புவோர், “இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக.
Lat deim fegnast og gleda seg i deg, alle dei som søkjer deg! Lat deim som elskar di frelsa, alltid segja: «Høglova vere Gud!»
5 நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; இறைவனே, என்னிடம் விரைந்து வாரும். நீரே என் துணை, நீரே என் மீட்பர்; யெகோவாவே, தாமதியாதேயும்.
For eg er arm og fatig; Gud, kom snart til meg! Du er mi hjelp og min frelsar; Herre, dryg ikkje!