< சங்கீதம் 67 >
1 கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக.
Zborovođi. Uza žičana glazbala. Psalam. Pjesma. Smilovao nam se Bog i blagoslovio nas, obasjao nas licem svojim,
2 இறைவனே, உமது வழிகள் பூமியிலும், உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும்.
da bi sva zemlja upoznala putove tvoje, svi puci tvoje spasenje!
3 இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
Neka te slave narodi, Bože, svi narodi neka te slave!
4 நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால், மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக.
Nek' se vesele i kliču narodi, jer sudiš pucima pravedno i narode vodiš na zemlji.
5 இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
Neka te slave narodi, Bože, svi narodi neka te slave!
6 அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
Zemlja plodom urodila! Bog nas blagoslovio, Bog naš!
7 இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.
Bog nas blagoslovio! Neka ga štuju svi krajevi svjetski!