< சங்கீதம் 41 >
1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். ஏழைகள்மீது கவனம் வைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; துன்ப நாளில் யெகோவா அவர்களை விடுவிப்பார்.
Fún adarí orin. Saamu Dafidi. Ìbùkún ni fún ẹni tí ó ń ro ti aláìní: Olúwa yóò gbà á ní ìgbà ìpọ́njú.
2 யெகோவா அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய உயிரைப் பாதுகாப்பார்; அவர்கள் பூமியில் ஆசீர்வாதமாக இருப்பார்கள்; யெகோவா அவர்களுடைய பகைவர்களின் கைக்கு அவர்களை அவனை ஒப்புவிக்கமாட்டார்.
Olúwa yóò dáàbò bò ó yóò sì pa ọkàn rẹ̀ mọ́: yóò bùkún fún un ní orí ilẹ̀ kò sì ní fi sílẹ̀ fún ìfẹ́ àwọn ọ̀tá rẹ̀.
3 அவர்களுடைய வியாதிப்படுக்கையில் யெகோவா அவர்களைத் தாங்குவார்; படுக்கையில் வியாதியாய் இருக்கும் அவர்களுக்குச் சுகத்தைக் கொடுப்பார்.
Olúwa yóò gbà á lórí àkéte àìsàn rẹ̀ yóò sì mú un padà bọ̀ sípò kúrò nínú àìsàn rẹ̀.
4 நான், “யெகோவாவே என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருக்கிறேன், என்னைக் குணமாக்கும்” என்று சொன்னேன்.
Ní ti èmi, mo wí pé “Olúwa, ṣàánú fún mi; wò mí sàn, nítorí pé mo ti ṣẹ̀ sí ọ”.
5 என் பகைவர்கள் என்னைக்குறித்து தீமையானதைப் பேசி, “அவன் எப்பொழுது சாவான்? அவன் பெயர் எப்பொழுது அழியும்” என்று சொல்கிறார்கள்.
Àwọn ọ̀tá mi ń sọ̀rọ̀ mi nínú àrankàn, pé, “Nígbà wo ni yóò kú, ti orúkọ rẹ̀ yóò sì run?”
6 அவர்களில் ஒருவன் என்னைப் பார்க்க வருகையில், தன் உள்ளத்தில் அவதூறை சேகரித்து உதட்டில் வஞ்சனையாகப் பேசுகிறான்; பின்பு அவன் வெளியே போய் அதைப் பரப்புகிறான்.
Nígbàkígbà tí ẹnìkan bá wá wò mí, wọn ń sọ̀rọ̀ ẹ̀tàn, nígbà tí àyà rẹ̀ bá kó ẹ̀ṣẹ̀ jọ sí ara rẹ̀; nígbà tí ó bá jáde lọ yóò sì máa tàn án kálẹ̀.
7 என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு விரோதமாய் ஒன்றுகூடி, முணுமுணுத்து, அவர்கள் எனக்குப் பெருங்கேடு நினைத்து சொன்னதாவது:
Àwọn ọ̀tá mi gbìmọ̀ papọ̀ nípa mi; èmi ni wọ́n ń gbìmọ̀ ibi sí,
8 “ஒரு கொடியநோய் அவனைப் பிடித்துக்கொண்டது; அவன் படுத்திருக்கிற இடத்தைவிட்டு ஒருபோதும் எழுந்திருக்கமாட்டான்.”
wọ́n wí pé, “Ohun búburú ni ó dì mọ́ ọn ṣinṣin àti ní ibi tí ó dùbúlẹ̀ sí, kì yóò dìde mọ́.”
9 நான் நம்பியிருந்தவனும் அப்பத்தை என்னுடன் பகிர்ந்து சாப்பிட்டவனுமான, என் நெருங்கிய நண்பன் தன் குதிகாலை எனக்கெதிராகத் தூக்கினான்.
Pàápàá, ọ̀rẹ́ mi tímọ́tímọ́, ẹni tí mo gbẹ́kẹ̀lé, ẹni tí ó ń jẹ nínú oúnjẹ mi, tí gbé gìgísẹ̀ rẹ̀ sókè sí mi.
10 ஆனாலும் யெகோவாவே, நீர் என்மேல் இரக்கமாயிரும்; நான் அவர்களுக்குப் பதிற்செய்யும்படி என்னை எழுப்பும்.
Ṣùgbọ́n ìwọ Olúwa, ṣàánú fún mi; gbé mi sókè, kí ń ba lè san fún wọn.
11 என் பகைவன் என்னை மேற்கொள்ளாதபடியால், நீர் என்னில் பிரியமாய் இருக்கிறீரென்று நான் அறிகிறேன்.
Èmi mọ̀ pé inú rẹ̀ dùn sí mi, nítorí ọ̀tá mi kò borí mi.
12 நீர் என் உத்தமத்தில் என்னை ஆதரித்து, உமது சமுகத்தில் எப்போதும் என்னை வைத்துக்கொள்கிறீர்.
Bí ó ṣe tèmi ni ìwọ dì mímú nínú ìwà òtítọ́ mi ìwọ sì gbé mi kalẹ̀ níwájú rẹ títí láé.
13 இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு நித்திய நித்தியமாய் துதி உண்டாகட்டும்.
Olùbùkún ni Olúwa, Ọlọ́run Israẹli, láé àti láéláé.