< சங்கீதம் 36 >

1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட யெகோவாவினுடைய ஊழியனாகிய தாவீதின் சங்கீதம். இறைவனிடமிருந்து என் உள்ளத்திற்கு வந்த செய்தி: கொடியவர்களின் பாவம் அவர்களுடைய இருதயங்களில் நிலைத்திருக்கிறது; அவர்களுடைய கண்களில் இறைவனைப்பற்றிய பயம் இல்லை.
聖歌隊の指揮者によってうたわせた主のしもべダビデの歌 とがは悪しき者にむかい、その心のうちに言う。その目の前に神を恐れる恐れはない。
2 அவர்கள் பார்வையில் தங்களைப் பெருமையாக காணுவதால், அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதும் இல்லை; அதை வெறுப்பதுமில்லை.
彼は自分の不義があらわされないため、また憎まれないために、みずからその目でおもねる。
3 அவர்களுடைய வாயின் வார்த்தைகள் கொடுமையும் வஞ்சகமுமாய் இருக்கின்றன; அவர்கள் ஞானமாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் நிறுத்திவிட்டார்கள்.
その口の言葉はよこしまと欺きである。彼は知恵を得ることと、善を行う事とをやめた。
4 அவர்கள் தனது படுக்கையிலும் தீமையைச் சிந்திக்கிறார்கள்; பாவவழிக்கு அவர்கள் தங்களை ஒப்புவிக்கிறார்கள்; தீமையானதை விடாதிருக்கிறார்கள்.
彼はその床の上でよこしまな事をたくらみ、よからぬ道に身をおいて、悪をきらわない。
5 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும் உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது.
主よ、あなたのいつくしみは天にまで及び、あなたのまことは雲にまで及ぶ。
6 உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது, உமது நியாயம் மகா ஆழத்தைப் போன்றது. யெகோவாவே, நீரே மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
あなたの義は神の山のごとく、あなたのさばきは大きな淵のようだ。主よ、あなたは人と獣とを救われる。
7 இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது! மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள்.
神よ、あなたのいつくしみはいかに尊いことでしょう。人の子らはあなたの翼のかげに避け所を得、
8 உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்; நீர் உமது மகிழ்ச்சியின் நதியிலிருந்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கிறீர்.
あなたの家の豊かなのによって飽き足りる。あなたはその楽しみの川の水を彼らに飲ませられる。
9 ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது; உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம்.
いのちの泉はあなたのもとにあり、われらはあなたの光によって光を見る。
10 உம்மை அறிந்தவர்களுக்கு உமது உடன்படிக்கையின் அன்பையும் இருதயத்தில் நீதிமான்களுக்கு உமது நியாயத்தையும் வழங்கும்.
どうか、あなたを知る者に絶えずいつくしみを施し、心の直き者に絶えず救を施してください。
11 அகந்தை உள்ளவர்களின் கால் எனக்கு விரோதமாய் வராதிருப்பதாக; கொடியவர்களின் கை என்னைத் துரத்தி விடாதிருப்பதாக.
高ぶる者の足がわたしを踏み、悪しき者の手がわたしを追い出すことをゆるさないでください。
12 தீமை செய்கிறவர்கள் எப்படி விழுந்து கிடக்கிறார்கள் என்று பாரும்! அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி, வீசி எறியப்பட்டுக் கிடக்கிறார்கள்.
悪を行う者はそこに倒れ、彼らは打ち伏せられて、起きあがることはできない。

< சங்கீதம் 36 >