< சங்கீதம் 34 >
1 தாவீது அபிமெலேக்கின் முன்பு பைத்தியம்போல் நடித்து, அவனால் துரத்திவிடப்படும்போது பாடின சங்கீதம். யெகோவாவை நான் எவ்வேளையிலும் புகழ்ந்து உயர்த்துவேன்; அவருக்குரிய துதி எப்பொழுதும் என் உதடுகளில் இருக்கும்.
Psalm Dawidowy, gdy sobie odmienił postawę przed Abimelechem, od którego będąc wygnany, odszedł. Będę błogosławił Pana na każdy czas; zawżdy będzie chwała jego w ustach moich.
2 நான் யெகோவாவுக்குள் மகிமைப்படுவேன்; ஒடுக்கப்பட்டோர் இதைக் கேட்டு மகிழட்டும்.
W Panu się chlubić będzie dusza moja, co usłyszawszy pokorni rozweselą się.
3 என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒன்றுகூடி அவருடைய பெயரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.
Wielbijcie Pana ze mną, a wywyższajmy imię jego społecznie.
4 நான் யெகோவாவிடம் உதவி தேடினேன்; அவர் எனக்குப் பதில் தந்தார்; அவர் என்னுடைய எல்லாப் பயத்திலிருந்தும் என்னை விடுவித்தார்.
Bom szukał Pana, i wysłuchał mię, a ze wszystkich strachów moich wyrwał mię.
5 அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் பிரகாசமாய் இருக்கிறார்கள்; அவர்களுடைய முகங்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.
Którzy nań spoglądają, a zbiegają się do niego, oblicza ich nie będą zawstydzone.
6 இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா செவிகொடுத்து; அவனை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றினார்.
Ten chudzina wołał, a Pan wysłuchał, i ze wszystkich ucisków jego wybawił go.
7 அவருக்குப் பயந்து நடக்கிறவர்களைச் சுற்றிலும் யெகோவாவின் தூதன் முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார்.
Zatacza obóz Anioł Pański około tych, którzy się go boją, i wyrywa ich.
8 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவரிடத்தில் தஞ்சமடைகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
Skosztujcież, a obaczcie, jako jest dobry Pan: błogosławiony człowiek, który w nim ufa.
9 யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குப் பயந்து நடங்கள்; ஏனெனில் அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு எவ்விதக் குறைவும் ஏற்படுவதில்லை.
Bójcie się Pana święci jego; bo niemasz niedostatku bojącym się go.
10 இளம் சிங்கங்கள் பெலமிழந்து பசியாயிருக்கலாம்; ஆனால் யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடுவதில்லை.
Lwięta niedostatek cierpią i głód; lecz szukającym Pana nie będzie schodziło na wszelkiem dobrem.
11 என் பிள்ளைகளே, வாருங்கள்; வந்து எனக்குச் செவிகொடுங்கள்; யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்.
Pójdźcież synowie, słuchajcie mię; bojaźni Pańskiej was nauczę.
12 உங்களில் யாராவது வாழ்வை நேசித்து அநேக நல்ல நாட்களைக் காண விரும்பினால்,
Któż jest, co chce długo żyć, a miłuje dni, aby widział dobra?
13 நீங்கள் உங்கள் நாவை தீமையைப் பேசுவதிலிருந்து விலக்கி, உங்கள் உதடுகளைப் பொய்ப் பேசுவதிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.
Strzeż języka twego od złego, a warg twoich, aby nie mówiły zdrady.
14 தீமையைவிட்டு விலகி, நன்மையைச் செய்யுங்கள்; சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருங்கள்.
Odwróć się od złego, a czyń dobrze; szukaj pokoju, a ścigaj go.
15 யெகோவாவினுடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன; அவருடைய காதுகள் அவர்களுடைய கதறுதலைக் கவனமாய்க் கேட்கின்றன;
Oczy Pańskie otworzone są na sprawiedliwych, a uszy jego na wołanie ich;
16 ஆனால் தீமை செய்கிறவர்களைப் பற்றிய நினைவை பூமியிலிருந்தே அகற்றிப்போடும்படி, யெகோவாவினுடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது.
Ale oblicze Pańskie przeciwko tym, którzy broją złości, aby wykorzenił z ziemi pamiątkę ich.
17 நீதிமான்கள் கூப்பிடும்போது, யெகோவா அவர்களுக்குச் செவிகொடுக்கிறார்; அவர் அவர்களுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்தும் அவர்களை விடுவிக்கிறார்.
Wołają sprawiedliwi, a Pan ich wysłuchiwa, i ze wszystkich trudności ich wybawia ich.
18 யெகோவா உள்ளம் உடைந்து போனவர்களுக்கு அருகே இருக்கிறார்; ஆவியில் நொந்து இருக்கிறவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்.
Bliski jest Pan tym, którzy są skruszonego serca, a utrapionych w duchu zachowuje.
19 நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வரலாம், ஆனாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவனை விடுவிக்கிறார்.
Wiele złego przychodzi na sprawiedliwego; ale z tego wszystkiego wyrywa go Pan.
20 அவர் அவனுடைய எலும்புகளையெல்லாம் பாதுகாக்கிறார்; அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படாது.
On strzeże wszystkich kości jego, tak, iż i jedna z nich nie skruszy się.
21 தீமை கொடியவர்களைக் கொல்லும்; நீதிமான்களின் பகைவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
Zabije złość niepobożnego, a którzy w nienawiści mają sprawiedliwego, będą spustoszeni;
22 யெகோவா தமது பணியாட்களைக் காப்பாற்றுகிறார்; அவரிடத்தில் தஞ்சம் அடைகிற யாரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படமாட்டான்.
Ale Pan odkupi duszę sług swoich, a nie będą spustoszeni wszyscy, którzy w nim ufają.