< சங்கீதம் 29 >
1 தாவீதின் சங்கீதம். பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்; அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள்.
Psalm Dawidowy. Oddawajcie Panu synowie mocarzów, oddawajcie Panu chwałę i moc.
2 யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.
Oddawajcie Panu chwałę imienia jego; kłaniajcie się Panu w ozdobie świętobliwości.
3 யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது; மகிமையின் இறைவன் முழங்குகிறார்; பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார்.
Głos Pański nad wodami; Bóg chwalebny wzbudza gromy, Pan nad wodami wielkiemi.
4 யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது; யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது.
Głos Pański mocny, głos Pański wielmożny,
5 யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது; யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார்.
Głos Pański cedry łamie; kruszy Pan cedry Libańskie,
6 அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும், சிரியோன் மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
I czyni, że skaczą jako cielęta; Liban i Syryjon jako młody jednorożec.
7 யெகோவாவினுடைய குரல் மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது.
Głos Pański krzesze płomień ognisty.
8 யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது; காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார்.
Na głos Pański z bólem pustynia rodzą; z bólem rodzi na głos Pański pustynai Kades.
9 யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது. காடுகளை அழித்து வெளியாக்குகிறது; அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள்.
Na głos Pański z bólem rodzą łanie, i odkrywają się lasy; ale w kościele swym opowiada wszystkę chwałę swoję.
10 யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
Pan nad potopem siedział, i będzie siedział Pan, będąc królem na wieki.
11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்; யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார்.
Pan doda mocy ludowi swojemu; Pan będzie błogosławił ludowi swemu w pokoju.