< சங்கீதம் 28 >
1 தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் என் கன்மலை, எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம். நீர் மவுனமாகவே இருப்பீரானால், நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன்.
Псалом Давида К тебе, Господи, взываю: твердыня моя! не будь безмолвен для меня, чтобы при безмолвии Твоем я не уподобился нисходящим в могилу.
2 நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக, என் கைகளை உயர்த்தி இரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும்.
Услышь голос молений моих, когда я взываю к Тебе, когда поднимаю руки мои к святому храму Твоему.
3 கொடியவர்களுடனும் தீமை செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதேயும், அவர்கள் அயலவருடன் நட்பாகப் பேசுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய இருதயங்களிலோ தீங்கை வைத்திருக்கிறார்கள்.
Не погуби меня с нечестивыми и с делающими неправду, которые с ближними своими говорят о мире, а в сердце у них зло.
4 அவர்களுடைய செயல்களுக்காகவும் அவர்கள் செய்த தீமைகளுக்காகவும் அவர்களுக்குப் பதில் செய்யும்; அவர்களுடைய கைகளின் செயலுக்காக அவர்களுக்குப் பதில்செய்து, அவர்களுக்குத் தக்க தண்டனையை அவர்கள்மீது கொண்டுவாரும்.
Воздай им по делам их, по злым поступкам их; по делам рук их воздай им, отдай им заслуженное ими.
5 யெகோவாவினுடைய செயல்களுக்கும், அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால், யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்; மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார்.
За то, что они невнимательны к действиям Господа и к делу рук Его, Он разрушит их и не созиждет их.
6 யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்; ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார்.
Благословен Господь, ибо Он услышал голос молений моих.
7 யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார். என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது; நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன்.
Господь - крепость моя и щит мой; на Него уповало сердце мое, и Он помог мне, и возрадовалось сердце мое; и я прославлю Его песнью моею.
8 யெகோவா தமது மக்களின் பெலனானவர்; தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே.
Господь - крепость народа Своего и спасительная защита помазанника Своего.
9 இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி, உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்; அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும்.
Спаси народ Твой и благослови наследие Твое; паси их и возвышай их во веки!