< சங்கீதம் 26 >

1 தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும், ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், நான் தடுமாறுவதில்லை.
לְדָוִד ׀ שׇׁפְטֵנִי יְהֹוָה כִּֽי־אֲנִי בְּתֻמִּי הָלַכְתִּי וּבַיהֹוָה בָּטַחְתִּי לֹא אֶמְעָֽד׃
2 யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும், என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்;
בְּחָנֵנִי יְהֹוָה וְנַסֵּנִי (צרופה) [צׇרְפָה] כִלְיוֹתַי וְלִבִּֽי׃
3 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன்.
כִּֽי־חַסְדְּךָ לְנֶגֶד עֵינָי וְהִתְהַלַּכְתִּי בַּאֲמִתֶּֽךָ׃
4 ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருகிறதுமில்லை;
לֹֽא־יָשַׁבְתִּי עִם־מְתֵי־שָׁוְא וְעִם נַעֲלָמִים לֹא אָבֽוֹא׃
5 தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன், கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன்.
שָׂנֵאתִי קְהַל מְרֵעִים וְעִם־רְשָׁעִים לֹא אֵשֵֽׁב׃
6 யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, உமது துதியைப் பிரசித்தப்படுத்தி,
אֶרְחַץ בְּנִקָּיוֹן כַּפָּי וַאֲסֹבְבָה אֶת־מִזְבַּחֲךָ יְהֹוָֽה׃
7 உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு, உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
לַשְׁמִעַ בְּקוֹל תּוֹדָה וּלְסַפֵּר כׇּל־נִפְלְאוֹתֶֽיךָ׃
8 யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய, நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன்.
יְֽהֹוָה אָהַבְתִּי מְעוֹן בֵּיתֶךָ וּמְקוֹם מִשְׁכַּן כְּבוֹדֶֽךָ׃
9 பாவிகளோடு என் ஆத்துமாவையும், இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும்.
אַל־תֶּאֱסֹף עִם־חַטָּאִים נַפְשִׁי וְעִם־אַנְשֵׁי דָמִים חַיָּֽי׃
10 அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன; அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன.
אֲשֶׁר־בִּידֵיהֶם זִמָּה וִימִינָם מָלְאָה שֹּֽׁחַד׃
11 ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்; என்னை மீட்டெடுத்து என்மீது இரக்கமாயிரும்.
וַאֲנִי בְּתֻמִּי אֵלֵךְ פְּדֵנִי וְחׇנֵּֽנִי׃
12 என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன; நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன்.
רַגְלִי עָמְדָה בְמִישׁוֹר בְּמַקְהֵלִים אֲבָרֵךְ יְהֹוָֽה׃

< சங்கீதம் 26 >