< சங்கீதம் 20 >
1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நீ துன்பத்தில் இருக்கும்போது யெகோவா உன் ஜெபத்திற்குப் பதில் தருவாராக; யாக்கோபின் இறைவனுடைய பெயர் உன்னைப் பாதுகாப்பதாக.
In finem, Psalmus David. Exaudiat te Dominus in die tribulationis: protegat te nomen Dei Iacob.
2 யெகோவா தமது பரிசுத்த இடத்திலிருந்து உனக்கு உதவி அனுப்பி, சீயோனிலிருந்து உனக்கு ஆதரவு வழங்குவாராக.
Mittat tibi auxilium de sancto: et de Sion tueatur te.
3 யெகோவா உன் பலிகளையெல்லாம் நினைவுகூர்ந்து, உனது தகனபலிகளை ஏற்றுக்கொள்வாராக.
Memor sit omnis sacrificii tui: et holocaustum tuum pingue fiat.
4 யெகோவா உனது இருதயத்தின் வாஞ்சையை உனக்குத் தந்து, உனது திட்டங்களையெல்லாம் வெற்றிபெறச் செய்வாராக.
Tribuat tibi secundum cor tuum: et omne consilium tuum confirmet.
5 யெகோவா வெற்றி தரும்போது நாங்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிப்போம்; நமது இறைவனுடைய பெயரில் நாங்கள் வெற்றிக்கொடிகளை உயர்த்துவோம். யெகோவா உன் வேண்டுதல்கள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பாராக.
Lætabimur in salutari tuo: et in nomine Dei nostri magnificabimur.
6 நான் இப்போது இதை அறிந்திருக்கிறேன்: யெகோவா தாம் அபிஷேகம் பண்ணியவனை இரட்சிக்கிறார். அவர் தமது பரிசுத்த பரலோகத்திலிருந்து தமது வலதுகரத்தின் மீட்கும் வல்லமையைக்கொண்டு, அவனுக்குப் பதில் கொடுக்கிறார்.
Impleat Dominus omnes petitiones tuas: nunc cognovi quoniam salvum fecit Dominus CHRISTUM suum. Exaudiet illum de cælo sancto suo: in potentatibus salus dexteræ eius.
7 சிலர் தேர்களிலும் சிலர் குதிரைகளிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; ஆனால் நாங்களோ, நமது இறைவனாகிய யெகோவாவினுடைய பெயரிலேயே நம்பிக்கை வைக்கிறோம்.
Hi in curribus, et hi in equis: nos autem in nomine Domini Dei nostri invocabimus.
8 அவர்கள் மண்டியிட்டு விழுந்தார்கள், நாங்களோ எழுந்து உறுதியாய் நிற்கிறோம்.
Ipsi obligati sunt, et ceciderunt: nos autem surreximus et erecti sumus.
9 யெகோவாவே, அரசனுக்கு வெற்றியைக் கொடும்! நாங்கள் கூப்பிடும்போது எங்களுக்குப் பதில் தாரும்.
Domine salvum fac regem: et exaudi nos in die, qua invocaverimus te.