< சங்கீதம் 137 >
1 பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, சீயோனை நினைத்தபோது அழுதோம்.
Ved Babels elvar, der sat me og gret, når me kom Sion i hug.
2 அங்கே இருந்த ஆற்றலறிச் செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.
På vier-runnarne der i landet hengde me harporne våre.
3 ஏனெனில் எங்களைச் சிறைப்பிடித்தவர்கள், அங்கே எங்களைப் பாடும்படி கேட்டார்கள்; எங்களைச் சித்திரவதை செய்தவர்கள் மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடும்படி வற்புறுத்தி, “சீயோனின் பாடல்களுள் ஒன்றை எங்களுக்காகப் பாடுங்கள்” என்று சொன்னார்கள்.
For der kravde dei som heldt oss fanga song av oss, og våre plågarar kravde gleda: «Syng åt oss av Sions songar!»
4 வேறுநாட்டு மண்ணில் இருக்கையில் யெகோவாவின் பாடல்களை எங்களால் எப்படிப் பாடமுடியும்?
Korleis kann me syngja Herrens song på framand jord?
5 எருசலேமே! நான் உன்னை மறந்தால், என் வலதுகை அதின் திறமையை மறப்பதாக.
Um eg gløymer deg, Jerusalem, so gjev mi høgre hand må gløyma seg burt!
6 நான் உன்னை நினையாவிட்டால், எருசலேமை எனது மேலான மகிழ்ச்சியாகக் நான் கருதாவிட்டால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
Gjev tunga må hanga fast ved gomen min, dersom eg ikkje kjem deg i hug, dersom eg ikkje set Jerusalem yver mi høgste gleda.
7 யெகோவாவே! எருசலேம் கைப்பற்றபட்ட நாளிலே ஏதோமியர் செய்தவற்றை நினைவுகூரும்; “அதை இடித்துப்போடுங்கள், அதின் அஸ்திபாரங்கள்வரை அதை இடித்துப்போடுங்கள்!” என்று சொன்னார்களே.
Herre, hugsa Edoms søner Jerusalems dag! dei som sagde: «Riv ned, riv ned, radt ned til grunnen!»
8 பாபிலோன் மகளே, அழிவுக்கு ஒப்படைக்கப்பட்டவளே, நீ எங்களுக்குச் செய்தவற்றுக்காக உனக்குப் பதில் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
Babels dotter, du øydelagde! sæl er den som gjev deg løn for den gjerning du gjorde imot oss!
9 உன் குழந்தைகளைப் பிடித்து, அவர்களைப் பாறைகளின்மேல் மோதியடிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
Sæl er den som tek og krasar dine småborn imot berget!