< சங்கீதம் 136 >
1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்,
௧யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2 தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்,
௨தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
3 கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்,
௩கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
4 அவர் மட்டுமே பெரிய அதிசயங்களைச் செய்கிறவர்;
௪ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
5 அவர் தமது அறிவாற்றலினால் வானங்களைப் படைத்தார்;
௫வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
6 அவர் நீர்நிலைகளுக்கு மேலாகப் பூமியைப் பரப்பினார்;
௬தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
7 அவர் பெரிய வெளிச்சங்களை உண்டாக்கினார்;
௭பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
8 அவர் பகலை ஆளச் சூரியனைப் படைத்தார்;
௮பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
9 இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்;
௯இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
10 அவர் எகிப்தியருடைய தலைப்பிள்ளைகளை வீழ்த்தினார்;
௧0எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
11 அவர்கள் மத்தியிலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவந்தார்;
௧௧அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
12 அவர் வல்லமையுள்ள கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும் அதைச் செய்தார்;
௧௨வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
13 செங்கடலை இரண்டாகப் பிரித்தவருக்கு நன்றி செலுத்துங்கள்;
௧௩சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
14 அவர் அதின் நடுவில் இஸ்ரயேலரைக் கொண்டுவந்தார்;
௧௪அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
15 ஆனால் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் புரட்டித்தள்ளினார்;
௧௫பார்வோனையும் அவன் சேனைகளையும் செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
16 தம்முடைய மக்களை பாலைவனத்தில் வழிநடத்தினவருக்கு நன்றி செலுத்துங்கள்;
௧௬தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
17 அவர் பெரிய அரசர்களை வீழ்த்தியவருக்கு நன்றி செலுத்துங்கள்;
௧௭பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
18 அவர் வலிமைமிக்க அரசர்களை வீழ்த்தினார்;
௧௮பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
19 அவர் எமோரியரின் அரசனாகிய சீகோனை வீழ்த்தினார்;
௧௯எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
20 அவர் பாசானின் அரசனாகிய ஓகை வீழ்த்தினார்;
௨0பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
21 அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;
௨௧அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
22 தமது அடியவனாகிய இஸ்ரயேலுக்கு அதை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;
௨௨அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
23 அவர் நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்தார்;
௨௩நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
24 நம்முடைய பகைவரிடமிருந்து நம்மை விடுவித்தார்;
௨௪நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
25 அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்;
௨௫உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
26 பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்;
௨௬பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.