< சங்கீதம் 136 >

1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்,
Rendez hommage au Seigneur, car il est bon, car sa grâce est éternelle.
2 தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்,
Rendez hommage au Dieu des dieux, car sa grâce est éternelle.
3 கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்,
Rendez hommage au Maître des maîtres, car sa grâce est éternelle;
4 அவர் மட்டுமே பெரிய அதிசயங்களைச் செய்கிறவர்;
à Celui qui accomplit, lui seul, de grandes merveilles, car sa grâce est éternelle;
5 அவர் தமது அறிவாற்றலினால் வானங்களைப் படைத்தார்;
à Celui qui fit les cieux avec sagesse, car sa grâce est éternelle;
6 அவர் நீர்நிலைகளுக்கு மேலாகப் பூமியைப் பரப்பினார்;
à Celui qui étendit la terre par-dessus les eaux, car sa grâce est éternelle;
7 அவர் பெரிய வெளிச்சங்களை உண்டாக்கினார்;
à Celui qui créa les grands luminaires, car sa grâce est éternelle;
8 அவர் பகலை ஆளச் சூரியனைப் படைத்தார்;
le soleil pour régner le jour, car sa grâce est éternelle;
9 இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்;
la lune et les étoiles pour régner la nuit, car sa grâce est éternelle;
10 அவர் எகிப்தியருடைய தலைப்பிள்ளைகளை வீழ்த்தினார்;
à Celui qui frappa les Egyptiens dans leurs premiers-nés, car sa grâce est éternelle;
11 அவர்கள் மத்தியிலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவந்தார்;
et fit sortir Israël du milieu d’eux, car sa grâce est éternelle;
12 அவர் வல்லமையுள்ள கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும் அதைச் செய்தார்;
avec une main puissante et un bras étendu, car sa grâce est éternelle;
13 செங்கடலை இரண்டாகப் பிரித்தவருக்கு நன்றி செலுத்துங்கள்;
à Celui qui fendit en deux la mer des Joncs, car sa grâce est éternelle;
14 அவர் அதின் நடுவில் இஸ்ரயேலரைக் கொண்டுவந்தார்;
la fit traverser à Israël, car sa grâce est éternelle;
15 ஆனால் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் புரட்டித்தள்ளினார்;
et précipita Pharaon et son armée dans ses flots, car sa grâce est éternelle;
16 தம்முடைய மக்களை பாலைவனத்தில் வழிநடத்தினவருக்கு நன்றி செலுத்துங்கள்;
à Celui qui dirigea son peuple dans le désert, car sa grâce est éternelle;
17 அவர் பெரிய அரசர்களை வீழ்த்தியவருக்கு நன்றி செலுத்துங்கள்;
à Celui qui vainquit de grands rois, car sa grâce est éternelle;
18 அவர் வலிமைமிக்க அரசர்களை வீழ்த்தினார்;
et fit périr de puissants souverains, car sa grâce est éternelle;
19 அவர் எமோரியரின் அரசனாகிய சீகோனை வீழ்த்தினார்;
Sihon, roi des Amorréens, car sa grâce est éternelle;
20 அவர் பாசானின் அரசனாகிய ஓகை வீழ்த்தினார்;
et Og, roi du Basan, car sa grâce est éternelle;
21 அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;
pour donner leur pays en héritage, car sa grâce est éternelle;
22 தமது அடியவனாகிய இஸ்ரயேலுக்கு அதை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;
en héritage à Israël, son serviteur, car sa grâce est éternelle;
23 அவர் நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்தார்;
à Celui, qui, dans notre abaissement, se souvint de nous, car sa grâce est éternelle;
24 நம்முடைய பகைவரிடமிருந்து நம்மை விடுவித்தார்;
et nous délivra de nos adversaires, car sa grâce est éternelle.
25 அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்;
Il donne du pain à toute créature, car sa grâce est éternelle.
26 பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்;
Rendez hommage au Dieu du Ciel, car sa grâce est éternelle.

< சங்கீதம் 136 >