< சங்கீதம் 135 >

1 யெகோவாவைத் துதியுங்கள். யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்,
阿肋路亞!上主的眾僕請讚頌,請讚頌上主的聖名!
2 நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், யெகோவாவினுடைய ஆலயத்திலும் ஊழியம் செய்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்.
您們服役於上主聖殿的,您們侍立在我主前庭的,
3 யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது.
請歌頌上主,因為上主是美善的,歌詠祂的名,因祂的名是甘甜的。
4 ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்; இஸ்ரயேலரைத் தமது அருமைச் சொத்தாய் இருக்கும்படி தெரிந்துகொண்டார்.
雅各伯原是上主所選,以色列永遠作祂自己的家產。
5 யெகோவா பெரியவர் என்றும், நமது யெகோவா எல்லாத் தெய்வங்களைப் பார்க்கிலும், மேலானவர் என்பதையும் நான் அறிவேன்.
我確實知道,上主偉大無比!我們的上主,超越所有神祇!
6 வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும் யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார்.
上天及下地,海洋深淵的任何化工,上主只要願意,無一不由祂造成。
7 அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்; மழையுடன் மின்னலையும் அவர் அனுப்புகிறார், காற்றை தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து வெளியே புறப்படச்செய்கிறார்.
祂使雲彩由地面現露,祂使電光閃爍而成雨,祂使清風由寶庫發出。
8 அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார், மனிதரின் முதற்பேறுகளையும் மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார்.
祂將埃及的人和牲畜,凡首生者都一起殺戮。
9 எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக அவர் தம்முடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் உன் மத்தியில் அனுப்பினாரே.
埃及!祂在您內行了奇蹟異能,懲罰了法郎和他的萬眾臣。
10 அவர் அநேக நாடுகளைத் தாக்கினார், வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்;
祂擊敗了列國的萬民,祂殺死了強盛的國君:
11 எமோரியரின் அரசன் சீகோனையும், பாசானின் அரசன் ஓகையும், கானானின் அரசர்கள் எல்லோரையும் அழித்தார்,
阿摩黎王息紅、巴商王敖格,以及客納罕地的王侯官吏。
12 அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக, தமது மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்.
祂將他們的土地變作產業,賜給了自己的人民以色列。
13 யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது; யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும்.
上主,您的聖名千秋留存,上主,您的記念,萬世常新。
14 யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து, தம் அடியார்கள்மேல் இரக்கங்காட்டுவார்.
因為上主護衛自己的百姓,對自己的僕人們表示憐憫。
15 பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது.
異民的偶像,無非金銀,只是人手中的製造品:
16 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
偶像有口,而不能言;偶像有眼,而不能看;
17 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
偶像有耳,而聽不見;偶像有鼻,而無氣喘。
18 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
鑄造偶像的人,將與偶像同亡,凡信賴偶像的人,也將是一樣。
19 இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;
以色列家族,請讚頌上主!亞郎家族,請讚頌上主!
20 லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள்.
肋末的家族,請讚頌上主!敬愛上主的人讚頌上主!
21 எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும். யெகோவாவைத் துதியுங்கள்.
住在耶路撒冷的君王,願他由熙雍承受讚頌!

< சங்கீதம் 135 >