< சங்கீதம் 133 >
1 சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும், எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது!
大衛上行之詩。 看哪,弟兄和睦同居 是何等地善,何等地美!
2 அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது; ஆரோனின் தாடியில் வடிந்து, அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது.
這好比那貴重的油澆在亞倫的頭上, 流到鬍鬚,又流到他的衣襟;
3 எர்மோன் மலையின் பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது; ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்; வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார்.
又好比黑門的甘露降在錫安山; 因為在那裏有耶和華所命定的福, 就是永遠的生命。